நாட்டில் தேர்தல் ஆணையம் தேர்தல் செலவு குறைக்க, ஆன்லைன் ஓட்டு பதிவு காலத்திற்கு ஏற்றவாறு தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வருமா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலிலும் ஆயிரக்கணக்கான கோடிகளை தேர்தல் நடத்த செலவழித்து வருகிறது . இந்த தேர்தல் முறையாக நடத்தவும், தேர்தலில் செலவினங்களை குறைக்கவும் ,ஆன்லைன் ஓட்டு பதிவு முறை படித்த பட்டதாரிகளுக்கும் ,இளைஞர்களுக்கும் எளிய முறையில் செல்போன் மூலம் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் மூலம் அவர்களது வாக்குகளை செலுத்த அதற்கான இணையதள செயலி உருவாக்கி காலத்திற்கு ஏற்றவாறு தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.மேலும்,

அதில் பெயர், முகவரி, ஆதார் எண், வாக்காளர் எண், பான் எண் (Pan card) போன்றவற்றை பதிவு செய்து ,கை ரேகை பதிவு செய்து, வாக்களிக்கும் செயல் முறையை இணையதளத்தில் உருவாக்கித் தர வேண்டும் .அவ்வாறு கொடுக்கும்போது, ஒரு பக்கம் வரிசையில் நிற்கும் நேரம், காத்திருக்கும் நேரம், வெயில் நேரங்களில் நிற்பது சிரமமான காரியம் ,இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி, ஒருவர் வாக்களிக்க முன்வர வேண்டும் .

அதை தேர்தல் ஆணையமே தவிர்த்து, இணையதளத்தை பயன்படுத்தி வாக்களிக்கும் உரிமையை கொண்டு வர வேண்டும் .இதனால், தேர்தல் செலவு பாதிக்கு மேல் குறைந்துவிடும். மேலும், படிக்காதவர்கள், செயலியை பயன்படுத்தத் தெரியாதவர்கள், அவர்களுக்கெல்லாம் அதாவது பிளஸ் 2 கீழே படித்தவர்களை வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும். இதனால், அவர்களும் விரைவில் வாக்களித்துவிட்டு, வரிசையில் நிற்பது குறைந்து விடும் இப்படி பல விதமான நன்மைகள் உள்ளது .

அதுமட்டுமல்ல, வசதி படைத்தவர்கள்மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள வயதானவர்கள், அவர்களைக் கொண்டு வந்து வாக்களிக்க அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட, அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வாக்குச்சாவடிக்கு வராமலே வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் . அதுபோல் இப்படிப்பட்ட செயல் முறையை கொண்டு வந்தால், முக்கியமாக கள்ள ஓட்டு போட முடியாது . அரசியல் கட்சியினரின் அடாவடித்தனங்கள் குறைந்து விடும்.

அப்படி கள்ள ஓட்டு போட்டாலும், பூத் ஏஜெண்டுகளும் ,போட்டவர்களும் மாட்டிக் கொள்வார்கள் .ஏனென்றால், கை ரேகை மற்றும் ஆதார் எண் வாக்காளரின் குடும்ப அட்டை எண் போன்றவற்றை திருடினால் கூட அவர்களுடைய பான் எண் (Pan card) , கை ரேகை பதிவு மட்டும் தான் திருட முடியாத ஒன்று .அதை ஏற்கனவே ஸ்கேன் செய்து வாக்காளர் இயந்திரத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும். இவ்வளவு டேட்டாக்களை கொடுத்தால் கூட ,அங்கே அவரவர் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே வாக்களிக்கும் இயந்திரத்தில், எந்த கட்சிக்கு மக்கள் ஓட்டு போட நினைத்தார்களோ, அது அங்கே போய் விழ வேண்டும்.

 அப்படிப்பட்ட திட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தால் வருங்காலத்தில் வாக்களிக்கும் மக்களின் சதவீதம் உண்மையில் அதிகமாகும். மேலும், தேர்தல் செலவு 50 சதவீதத்திற்கு மேல் குறையும் ,மக்களுக்கு நேரம் மிச்சமாகும். தவிர, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் வாக்குகளை விலைக்கு வாங்கவும் முடியாது .அப்படி வாங்கினாலும், அவர்களுக்கு தான் அவர்கள் போடுவார்கள் என்ற நிச்சயம் இருக்காது . காலத்திற்கு ஏற்றவாறு தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.இது வாக்களிப்பவரின் சுதந்திரமான தேர்தல் என்பதை தேர்தல் ஆணையம் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *