இந்திய நாட்டின் தலைமை நீதிபதி சந்திர சூட் சொன்ன கருத்து, நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையும், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கையும், ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் தற்போது ஜனநாயகத்தை காப்பாற்றுவும், இந்திய அரசியலமைப்பை காப்பாற்றவும், எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் .மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும். இந்த சர்வாதிகார அரசாங்கம் மக்களை பயமுறுத்துவார்கள். மிரட்டுவார்கள்.
ஆனால், நீங்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள் .அரசாங்கத்திடம் கணக்கு கேளுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். இந்த கருத்தை பதிவு செய்த தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களுக்கு ,தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வரவேற்று மனமார்ந்த நன்றியை நாட்டு மக்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் .
மேலும், நீதித்துறையில் நீதியை கேட்டு பெறுவதற்கு ஒவ்வொரு மக்களும் நீதிமன்றத்தில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதை எளிமையாக்கப்பட வேண்டும் .நீதி என்பது சாமானிய மக்களுக்கு ஒரு நீதியாகவும், அரசு அதிகாரிகளுக்கு ஒரு நீதியாகவும், பணக்காரர்களுக்கு ஒரு நீதியாகவும், மந்திரி போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு ஒரு நீதியாகவும், நாட்டில் இருக்கக் கூடாது .அப்படி இருந்தால், இந்திய ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற முடியாது.
தமிழ்நாட்டில் பல மந்திரிகள் ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில், அந்த ஊழல் வழக்குகளில் காலதாமதத்தையும், தங்களுக்கு சாதகமான தீர்ப்பையும், சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது சாமானிய மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அந்த சலுகைகள் கிடைக்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் ஒரு மந்திரிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை, உச்ச நீதிமன்றத்தில் காலா தாமதம் செய்வது அல்லது அவர்களுக்கு சலுகை காட்டுவது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களால், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மேலும், எங்களைப் போன்ற பத்திரிகைகளில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ,மக்களுக்கான உண்மையான செய்திகளை கொண்டு சேர்க்க முடியாமல், முப்பதாண்டு காலம் இந்த பத்திரிகை துறையில் போராடிக் கொண்டிருக்கிறோம். இது காலத்திற்கு ஏற்ப செய்தி துறையில் மாற்றப்பட வேண்டிய சட்டங்கள், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இல்லை . இது பற்றி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த செய்தி துறைக்கு தமிழ்நாட்டில் தெரிவித்து வரும் ஒரே பத்திரிக்கை மக்கள் அதிகாரம் .ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ கண்டு கொள்வதில்லை.
இப்படிப்பட்ட சமூக நலன் சார்ந்த பிரச்சினைகளில், தாங்கள் மனது வைத்தால் இப்ப பிரச்சனையை சுமோட்டோ வழக்காக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் .மேலும், இது சம்பந்தமாக எங்களுடைய கருத்துக்களை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும், தெரிவித்திருக்கிறோம்.
தவிர, தற்போதுள்ள மாநிலத்தின் செய்தி துறை உயர் அதிகாரிகளாக இருக்கக்கூடிய இயக்குனர் மற்றும் செயலாளர் அவர்களுக்கும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு, எங்கள் பிரச்சினையை கோரிக்கையாக தெரிவித்திருக்கிறோம். இச்செய்தியின் மூலம் தங்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதன் மூலம், நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம் வலுப்பெறும். நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இது முக்கிய அவசியமானது.
மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற தாங்கள் சொன்னபடி உங்களுக்கு எங்களால் முடிந்த அளவு உறுதுணையாக இருப்போம் என்பதை இச்செய்தியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரியர்
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளம் .