நாட்டில் ஊழல்களை விஞ்ஞான ரீதியில் எப்படி செய்ய வேண்டும்? எப்படி செய்தாலும், அரசியல்வாதி என்றால்! பேசி சமாளித்துக் கொள்ளலாம். நம்மை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த சட்டத்தையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம். இந்த நினைப்பில் தான் அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டு தமிழ்நாட்டில் ஊழலை செய்தார்கள்.
(குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்.
– சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ தகவல்)
குறிப்பாக ஊழல் செய்யாத அமைச்சர்களை இல்லை என்று இரண்டு கட்சிகளிலும் சொல்லிவிடலாம் .அப்படி ஊழல் செய்யாமல் இருப்பவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள். அவர்களுக்கு அரசியல் தெரியாது. அவர்கள் பிழைக்கத் தெரியாத முட்டாள்கள். இப்படி தான் இந்த அரசியலில், தமிழ்நாட்டு மக்கள் மனம் நொந்து வாக்களித்து கொண்டிருந்தார்கள்.ஏனென்றால் அவர்களுக்கு இந்த இரண்டு கட்சிகளையும் விட்டால் ,வேறு அரசியல் கட்சி தெரியாது.
இவர்கள் சொல்லும் பொய்களை நம்முடைய பத்திரிகை, தொலைக்காட்சிகள் தமிழக மக்களிடம் நம்ப வைத்துக் கொண்டிருந்தது .இந்த பொய்கள் தான் செய்தித் துறையின் சர்குலேஷன் விதிமுறை என்று 50 ஆண்டுகாலம் மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல, பத்திரிக்கை துறையும் ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
மேலும், தேர்தல் நேரங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் ஊழல்களையும், குறைகளையும் சொல்லி, தங்களை நல்லவர்களாக மக்களை 50 ஆண்டு காலமாக மாறி, மாறி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதில் தமிழக மக்களுக்கு மற்ற மாநிலங்களை விட ஞாபக மறதி அதிகம். ஐந்தாண்டு காலம் இவர்களை எப்படி அவர்கள் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பார்கள்? அதனால் ,ஐந்தாண்டுகளுக்கு பிறகு அதே ஊழல்வாதி பணம் கொடுத்தால் அவரும் நல்லவர்தான். இப்படித்தான் தமிழ்நாட்டு அரசியல் களம் ,மிக மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.அது மட்டுமல்ல,
நாங்கள் போதைப்பொருள் கடத்தினாலும் ,அவனுக்கும் பதவி கொடுப்போம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களை செய்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கும் பதவி கொடுப்போம், அதற்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாக தான் இருக்க வேண்டும்.அவர்களுக்கு அரசியல் என்றால் அதற்கு அர்த்தம் தெரியாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இதையெல்லாம் நன்றாக செய்து கொண்டிருக்கலாம்.மேலும்,
இதில் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்!பிஜேபி எங்களை பழிவாங்கும் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். இப்படி தான் இவர்கள் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இதுதான் அரசியல் என்று 50 ஆண்டு காலமாக சொல்லிக் கொண்டிருந்தது தமிழக ஊடகங்கள். அதனால் மக்கள் அரசியல் என்றால்! ஊழல் தான் அரசியல். அரசியல் தான் ஊழல் என்று நம்பி இருந்தார்கள் .
இப்போது பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு 10 ஆண்டு காலமாகத்தான் அதிமுக ,திமுகவில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வெளிவரத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எந்த ஊழலும் மக்களுக்கு தெரியாது. ஊழலுக்குள் அரசியல் இருந்தால், அங்கே யாரை நல்லவர்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. இப்போது விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது .இது குட்கா ஊழல் பிரச்சனையில் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், ரமணா இந்த குட்கா ஊழலில் ஈடுபட்டிருந்தார்கள் .இது வெளிவராது என்று தான் அலட்சியமாக இருந்தார்கள்.
இப்போது வெளிவந்து நடவடிக்கை எடுக்கும்போது அதிமுகவும், திமுகவும் எங்களை அரசியலில் பழி வாங்குகிறது. பிஜேபி எங்களை அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ வைத்து மிரட்டுகிறது .இது எல்லாம் மக்களிடம் சொல்லி பயனில்லை .ஏனென்றால் நீங்கள் கொள்ளை அடித்ததை மக்களிடம் கொடுக்கவில்லை. உங்கள் வீட்டில் தான் கொடுத்தீர்கள். அதனால் அரசியலுக்கு வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்ற வரைமுறையை விதிமுறையை கொண்டு வர வேண்டும்.
எப்படியும் பேசி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம். அரசியலில் பதவிக்கு வர எந்த தகுதியும் தேவையில்லை. எவ்வளவு பொய் வேண்டுமானாலும் பேசலாம். பதவி அதிகாரம் கையில் இருந்தால் நாம் தான் கடவுள் என்று நினைக்கலாம் .அதன் பிறகு, உன்னுடைய தலையெழுத்தை எழுதிய ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு கூட நீங்கள் பயப்படுவதில்லை. அதனால் இறைவன் மிகப்பெரியவன் என்பதை உணர்த்துகிறான்.
கொள்ளையடித்துவிட்டு கோயில் கோயிலாக போய் சாமி கும்பிட்டு உண்டியலில் பணம் போட்டு உங்கள் பாவத்தை கழிக்க முடியாது .அதை நீங்களும் ,உங்கள் குடும்பமும் தான் கழிக்க வேண்டும். நாட்டு மக்கள் வேடிக்கை தான் பார்ப்பார்கள். இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடிக்கு வலதுகரமாக இருக்கக்கூடிய சேலம் மாவட்ட கூட்டுறவு சேர்மன் சீனிவாசன் வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பேசி பயனில்லை. மக்கள் நம்பவும் தயாராக இல்லை. அதனால் இனி அரசியலுக்கு வருபவர்களுக்கு இவையெல்லாம் ஒரு பாடம்தான்.
எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ,அவர்களுடைய ஊழலை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நாட்டில் அமல்படுத்த வேண்டும்.மேலும் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும்..சட்ட நடவடிக்கை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க வேண்டும். சட்டத்தில் தப்பிக்க முடியாது என்ற நிலைமையை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
ஏனென்றால்! அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வேலை அல்ல. அரசியல் என்பது எப்படியும் பேசி தப்பித்துக் கொள்ள மக்களின் வாக்கு விலைமதிப்பற்றது .அதை சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டால், நாட்டு மக்கள் அனைவரும் இவர்களுடைய பதவி அதிகாரத்தால் ஏமாற்றப்படுகிறார்கள். அதை புரிந்து கொள்ளாமல், ஆளும் கட்சியை எதிர்க்கட்சி பழிவாங்குகிறது. எதிர்க்கட்சியை ஆளும் கட்சி, பழி வாங்குகிறது என்று பேசி, அதிலும் மக்களை முட்டாளாக்கும் வேலை தான் இவர்கள் செய்யும் அரசியல். அதற்காக துணைபோகும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் கருத்து சுதந்திரம் அர்த்தமற்றது . இனியாவது மக்கள் விரும்புகின்ற ஆட்சியை ஆட்சியாளர்கள் கொடுப்பார்களா ?