நாடு இருக்கின்ற மோசமான அரசியல் சூழ்நிலை கருதி, இந்த தேச நலனுக்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இத்தேர்தல் நாட்டு மக்கள் அனைவருக்கும், இந்த தேசத்தின் நலன் கருதி உங்கள் வாக்குகளை எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை ஒரு முறைக்கு, 100 முறை சிந்தித்து வாக்களியுங்கள். இங்கே சுயநலத்திற்காக பல ஆயிரம் ஊடகங்கள் இருக்கலாம். பொதுநலத்தில், இந்த தேச நலத்தில் அக்கறையுடன் வெளிவரும் செய்தி ஊடகங்கள் ஒன்று, இரண்டு இருந்தால் அதுவே பெரிய விஷயம் .
இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்றார் போல் செய்திகளை போடுவார்கள். யார் விளம்பரம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக செய்திகளை போடுவார்கள். ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிகை இதுவரை எந்த அரசியல் கட்சிகளிடமிருந்தும் ஒரு ரூபாய் விளம்பரம் கூட வாங்கியதில்லை. பணமும் எந்த அரசியல் கட்சிகள் இடம் இருந்தும் பெற்றதும் இல்லை. அப்படி இருந்தால் நிரூபிக்கலாம் .
மேலும், தலைமைச் செயலகத்தில் கூட நான் அதிகாரிகளை சந்தித்து மட்டுமே எங்களுடைய கோரிக்கைகள் இருக்குமே ஒழிய, எந்த அமைச்சர்களிடம் போய் எங்களுடைய பத்திரிகை கோரிக்கைகள் கூட இதுவரை கேட்டதில்லை. ஏனென்றால், சுயநலத்திற்காக ஆட்சியும், சுயநலத்திற்காக அரசியல் கட்சியும் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இருக்காது. அங்கே ஊழல் தான் இருக்கும். இந்த தேச நலனும், பொது நலனும் எதுவுமே இருக்காது. இப்படி தான் தமிழகத்தை அதிமுக, திமுக மாறி, மாறி ஆட்சி செய்தது .
இந்த 50 ஆண்டுகால ஆட்சியில், அரசியல் கட்சியினருடைய சொத்துக்கள், ஆட்சியாளர்களின் உடைய சொத்துக்கள், பல கோடிகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், போராட்டமாகி வருகிறது. இவர்களைமக்கள் கேள்வி கேட்க முடியவில்லை,உண்மையை க் கூட பத்திரிகைகளில் சுதந்திரமாக வெளியிட முடியவில்லை. ஒரு சாதாரண கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக வந்துவிட்டு, ஊரில் உள்ள பொது சொத்துக்களை எல்லாம் தங்களுக்கு சொந்தமானது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
அதற்கு விலை போகும் அதிகாரிகள் ,ஆட்சியாளர்கள் இருப்பதால், இவர்கள் சர்வாதிகாரம், ரவுடிசம் அதிகமாகிவிட்டது . கேட்டால் ஏதோ ஒரு கட்சி பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.கட்சி என்பது இவர்களுடைய சுயநலத்திற்கும், ரவுடிசம் செய்வதற்கும், நாட்டில் அரசியல் கட்சி தேவைப்படுகிறதா?இவையெல்லாம் எதனால்? இவர்களுக்கு இந்த அதிகாரம் கையில் கொடுத்த மக்கள் தலையில், ஏறி மிதித்து கொண்டு இருக்கிறார்கள். ஓட்டு கேட்டு நூறு தடவை கையெடுத்து கும்பிட்டு, காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி வருகிறார்கள் .
அது மட்டுமல்ல நான் வந்தால் இதை செய்து விடுவேன். அதை செய்து விடுவேன். இப்படி செய்வேன், அப்படி செய்வேன் என்று வாயிலே வடை சுட்டுக் கொண்டு, இவர்கள் சுடுகின்ற வடைகளை எல்லாம் கார்ப்பரேட் பத்திரிக்கை,. தொலைக்காட்சிகள் அதை வியாபாரம் ஆக்கிக் கொண்டு, இந்த நாட்டில் மீண்டும் ஊழல்வாதிகளும், பிரிவினைவாதிகளும், அந்நிய சக்திகளின் தலையீடுகளும், இந்த தேசத்திற்கு எதிராக இருந்து வருகிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டிய கடமை வாக்காளர்களாகிய நமக்கு தான் முக்கிய கடமை.
இது தவிர, ஒவ்வொரு அரசியல் கட்சி பற்றியும் சிந்தியுங்கள். அவர்கள் எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார்கள்? எவ்வளவு நன்மை செய்திருக்கிறார்கள்? என்பதை ஒரு முறைக்கு,100 முறை சிந்தியுங்கள். தமிழ்நாட்டில் திமுக ,அதிமுக செய்த அமைச்சர்களின் ஊழல் பட்டியல் எவ்வளவு ?அவர்களுடைய சொத்துக்கள் எவ்வளவு ?இதையெல்லாம் சிந்தியுங்கள். நிர்வாகம் எப்படி இருக்கிறது? மக்களுக்காக இருக்கிறதா? அல்லது அவர்களுக்காக இருக்கிறதா? அது மட்டுமல்ல,
போதைப் பொருள் கடத்தல் கும்பல் இடம் ஆட்சியாளர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள் என்றால், இவர்கள் எப்படி இந்த தேசத்தை காப்பாற்றுவார்கள்?அவன் பிடிபட்டவுடன் அவனை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம்.அவனுக்கும் ,எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். விசாரணையில் உண்மை தெரியும். இப்படிப்பட்ட அரசியல் கட்சியும், ஆட்சியாளர்களும், நாட்டு மக்கள் நலனில் அக்கறையுடன் எப்படி செயல்படுவார்கள்? மேலும்,
போதைப்பொருள் என்பது மனித குல வாழ்க்கையின் அழிவு. பணத்திற்காக வருங்கால சந்ததிகளே வாழ முடியாத சூழ்நிலை அது உருவாக்கி விடும். ஒரு தடவை அந்த போதைக்கு அடிமையாகி விட்டால், கடைசி வரை அவர்களை காப்பாற்ற முடியாது. அப்படிப்பட்ட ஒரு கொடுமையான போதைப் பொருள்கள்.மேலும், கஞ்சா, குட்கா, டாஸ்மாக் இது எல்லாம் வைத்து இந்த நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. இவையெல்லாம் மனித வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கு எதிரான ஒன்று .
மேலும், இவர்கள் 100% கொள்ளையடிப்பார்கள். ஆனால், 10 சதவீதம் தேர்தல் பத்திரத்தில் பணம் வாங்கினால் கூட அந்த தவறை பெரிது படுத்துகிறார்கள். இவர்களும் வாங்காமல் இல்லை .இவர்களும் ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கி இருக்கிறார்கள். பிஜேபி சிறிய தவறு செய்தால், அது பெரிய தவறு என்று அனைத்து அரசியல் எதிர்க்கட்சிகளும் பேசுகின்றன. ஆனால், இவர்கள் இந்த நாட்டையே கூறு போடும் அளவிற்கு, தேசத்தின் பாதுகாப்புக்கு எதிர்மறையான கருத்துக்கள்தான், இன்றைய சிஏஏ கையில் எடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மூலம் அந்நிய சக்திகள் இந்தியாவுக்குள் ஊடுருவகிறது . அது இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு, மக்களின் வாழ்க்கைக்கு எதிரான ஒன்று.
ஊழல்வாதிகளும், ஊழல் அரசியல் கட்சிகளும், மக்களிடம் தங்களை நேர்மையானவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள் போன்று தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.இந்த நிலைமை நம் கிராமங்களில், நகரங்களில் கூட அரசியல் கட்சிகளில் ரவுடிகள், பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்கள், எல்லோரும் தான் உத்தமர்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டில் பேச்சுக்கு பஞ்சமில்லை. பேசியே எல்லோரையும், அரசியலில் ஏமாற்றலாம் .அது ஒரு வியாபாரமாகவும், கலையாகவும், திறமையாகவும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .மேலும்,
Tamil Nadu social journalist federation
இப்படிப்பட்ட பெரிய தவறுகளை கூட சுட்டிக்காட்டாமல், இதையே மக்களிடம் உண்மையாக பேசிக் கொண்டிருக்கும் இவர்களை, உத்தமர்களாக காட்டிக் கொண்டிருந்தால், இப்படிப்பட்ட ஊடகங்களின் சமூக நலன், தேச நலன் எங்கே? இதை தான் மக்கள் அதிகாரம் பத்திரிகையும் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பும் எதிர்க்கிறது.இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களிடம் போட்டுக் காட்டி, பணம் சம்பாதிக்கும் அவர்கள் தான், தங்களை பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி என்று முட்டாள்தனமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதைப் பார்த்து ஏமாந்து கொண்டு தான் இன்று வரை இருக்கிறார்கள்.
நான் எந்த சுயநலத்திற்காகவும், இந்த செய்தியை மக்களிடம் சொல்லவில்லை. பிஜேபி அரசியல் கட்சியில் உள்ள மாநில பொறுப்பாளர்கள் கூட எனக்கு தெரியும். மாவட்ட பொறுப்பாளர்கள் கூட தெரியும். இதுவரை அவர்களிடம் இருந்து காசோ, பணமோ, விளம்பரமோ எதுவும் வாங்கியது இல்லை . வாங்கி இருந்தால் அதையும் நிரூபிக்கலாம்.
மேலும் ,இன்று பத்திரிகைகளின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பும் தான். ஆயிரம் சங்கங்கள் இருக்கிறது. ஆயிரம் பத்திரிகைகள் இருக்கிறது, ஆனால், செயல்பாடு, அதற்கான தகுதி, மிக முக்கியமானது. அந்த வகையில் இந்த தேச நலனுக்காகவும் ,மக்கள் நலனுக்காகவும் உண்மையான செய்திகளை வெளியிட்டு, மக்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறோம் .
இங்கே உண்மை எது ?பொய் எது? என்று தெரியாமல் மக்களை குழப்பிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ,அதை எதிர்த்து எங்களைப் போன்ற சாமானிய ஊடகங்கள், உண்மையை சொல்லும்போது, நாங்கள் சமூகத்தில் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது? எந்த எதிர்பார்ப்பும் இன்றி ,இதை செயலாற்றும் போது அது ,எங்களுக்கு எவ்வளவு கஷ்டமான பணி?அதன் வலி, வேதனை என்ன? என்பதை இந்த பத்திரிகைகளை நடத்திப் பாருங்கள். உண்மை அப்போதுதான் உங்களுக்கு புரியும்.
இப்போது கூட இந்த கோரிக்கையை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (press council of India) க்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கான நல்ல முடிவை அங்கிருந்து எதிர்பார்க்கிறோம். எனவே, நாட்டு மக்கள், சாமானிய மக்கள், ஏழை, எளிய நடுத்தர மக்கள், தங்களுடைய வாழ்வாதாரம், வாழ்க்கை மேம்படுத்த,எதற்காக பணம் கொடுக்கும் ?ஆதாயம் இல்லாமல் பணம் கொடுப்பார்களா? அதுவும் அரசியல் கட்சியினர். அரசியல் கட்சிகளை மனச்சாட்சியுடன் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் எதற்காக பணம் கொடுக்கிறார்கள்? ஏன் பணம் கொடுக்கிறார்கள்? தேர்தலில் ஓட்டு போட மட்டும்தான் பணம் கொடுக்கிறார்கள் .
அவர்கள் கொடுக்கிற ஆயிரம், இரண்டாயிரம் வைத்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்க இந்த தேர்தலை மக்களிடம் வியாபாரம் ஆகிவிட்டார்கள். மக்கள் தேர்தல் என்றால் பணம் .ஆட்சி என்றால் ஊழல். அரசியல் கட்சி என்றால் ரவுடிசம், இதையெல்லாம் பார்த்து சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பது, உங்களுடைய அறியாமையும், அறிவின் பலவீனமும், மக்களின் ஏமாற்றமும், இந்த நாட்டை நாட்டு மக்களை பலவீனப் படுத்திக் கொண்டிருக்கிறது.அது மட்டுமல்ல, உங்களுடைய அதிகாரம் வாக்குகளாக அவர்களுக்கு கொடுக்கும் போது, அது பதவியாகிறது. அந்தப் பதவி மக்களுக்காக இல்லாமல் ,அவர்களுடைய வீட்டுக்கும், அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், அது சொந்தமாகி விடுகிறது.
பதவி அதிகாரம் கையில் வந்தவுடன் மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடிகளாக சட்டப்படியே கொள்ளடிக்கப்படுகிறது. இவர்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் என்னவோ, இந்த தேசத்திற்கு ,இந்த நாட்டுக்கு எதிரிகளைப் போல் பேசுகிறார்கள். இது ஒரு கிராமங்களில் சாமானிய மக்களுக்கு இந்த நிலைமை என்றால், நாட்டுக்கு இந்த நிலைமை எப்படி இருக்கும்? ஒரு மாநிலத்திற்கு இந்த நிலைமை எப்படி இருக்கும்? இவர்களை எல்லாம் கேள்வி கேட்டு, இவர் உங்களுடைய ஊழல்களை வெளிக்கொண்டுவரும் நரேந்திர மோடியின் நிலைமை எப்படி இருக்கும்? இதையெல்லாம் சிந்தியுங்கள். பணம் வாங்கி வாக்களிப்பது உங்களையும், வருங்கால சந்ததிகளையும், ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலை .
அதனால், இந்த ஏமாற்றத்தில் இருந்து மக்கள் சுதாரித்துக் கொள்ளுங்கள். பல பொய்களை உண்மைகளைப் போல் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் ஏமாறாமல் இருப்பது, உங்களுடைய புத்திசாலித்தனம். ஏமாறுவது உங்கள் முட்டாள்தனம். நாட்டுக்கு தேவை எது? மக்களின் வாழ்க்கைக்கு தேவை எது ?வளர்ச்சிக்கு தேவை எது ?இவையெல்லாம் சிந்தித்து வாக்களிப்பது வாக்காளர்கள் அனைவரின் முக்கிய கடமை.
இந்த உண்மை புரியாதவர்கள் புரிந்து, வாக்காளர்களாகிய நம் அனைவருக்கும், இந்த தேச நலனில் அக்கறையுடன் செயல்படும் ஒரே தலைவர் நரேந்திர மோடி. அவருடைய கரத்தை வலுப்படுத்தி, இந்த தேசத்தை ஒவ்வொரு இந்தியராக இருந்து பாதுகாப்போம். வலிமையான பாரதம் உருவாக்க ஒவ்வொருவருக்கும் அளித்திருக்கும் முக்கிய ஜனநாயகத்தின் கடமை, வாக்களிக்கும் உரிமை .அந்த உரிமையை நாடாளுமன்றத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்போம். மேலும்,
வருங்கால இளைய தலைமுறைகள், சினிமா மோகத்தில், கவர்ச்சியிலும், போலியான பொய்யான திட்டங்களை அறிவித்து, நல்லவர்களாக வேஷம் போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளிடம் ஏமாறாதீர்கள். படித்து பட்டம் பெற்று, படிப்பறிவு இல்லாதவனிடம், அரசியல் தெரியாதவனிடம்,தகுதியற்றவனிடம், ரவுடியிசம் செய்பவனிடம், ஜாதி பெயரை சொல்லி ஏமாற்றுபவனிடம், ஊழல் செய்பவனிடம் ஏமாந்தால்! அதைவிட முட்டாள் தனம் ,வேறு எதுவும் இருக்க முடியாது.சிந்தித்து வாக்களிப்போம். நரேந்திர மோடியின் கரத்தை நாட்டு நலன் கருதி, இந்த தேசத்தின் ஒற்றுமை நலன் கருதி, வலுப்படுத்துவோம் .