ஏப்ரல் 13, 2024 • Makkal Adhikaram
நாட்டில் கருத்து சுதந்திரம் மக்களுக்கு தேவை . அந்த கருத்து சுதந்திரம் குழப்பத்தையும் ,சிந்தனை வளத்தையும் பாதிக்கக்கூடிய அளவில் இந்த கருத்து கணிப்புகள் இருக்கக் கூடாது. ஆரோக்கியமான கருத்துக்கள் மக்களுக்கு தேவை.
ஆனால் youtube பர்கள், ஊடகங்கள், ஜோதிடர்கள், சுயநலத்தின் அடிப்படையில் இவர்களுடைய கருத்துக்கள் மற்றும் கருத்துக்கணிப்புகள் சொல்லி வருகிறார்கள். இது பொதுநலத்தின் அடிப்படையில் இல்லை. இவர்களுடைய கொள்கை அல்லது அந்த அரசியல் கட்சியின் கொள்கை இவர்கள் மூலம் ஊடகங்களின் வாயிலாக திணிக்க பார்க்கிறார்கள். எந்த ஒரு பத்திரிக்கையோ, தொலைக்காட்சியோ, youtube போ, அல்லது ஜோதிடமோ எதுவாக இருந்தாலும், உண்மைத்தன்மை இல்லாமல், சொல்லப்படும் கருத்துக்கள் தவறானது, மக்களுக்கு அது பாதகமானது.
நாட்டில் அரசியல் கட்சிகள், அரசியல், எல்லாமே விமர்சனங்கள் தேவைதான். அதில் உண்மை தன்மை இல்லாமல் இருப்பது அல்லது ஆதாய நோக்கத்தோடு சொல்வது, அதிகரித்துவிட்டது. இப்போதுள்ள ஊடகங்கள் நடுநிலை என்பதற்கு எது? என்று புரியாமல் திணற வேண்டி இருக்கிறது. நாட்டில் ஊழல் ஆட்சி நடத்த எந்த மக்களும், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாருக்கும் தேவை நல்லாட்சி தான். இதில் இவர்கள் சொல்லுகின்ற வேட்பாளர்கள் ,அரசியல் கட்சிகள், தற்போது உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக தமிழ்நாட்டில் ஊழலில் திளைத்து வருகிறது. அது மட்டுமல்ல,
மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு, போராட்டங்களுக்கு சொந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்க நேரிடுகிறது . இது அரசியல் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் ,தவறான பொய் பிரச்சாரங்களை, அரசியல் கட்சியினர் போல், செய்து கொண்டிருக்கிறார்கள். ஆளாளுக்கு எவ்வளவு? பொய் சொல்ல முடியுமோ, அவ்வளவு பொய்களையும் இந்த ஊடகத்தின் மூலமாக, youtube மூலமாக, போதாக்குறைக்கு இந்த ஜோதிடர்கள் கூட்டம் அதன் மூலமாக சொல்லிக்கொண்டு, மக்களை குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இது மக்களை திசை திருப்பும் வேலை என்று நினைக்கிறேன்.மேலும்,
ஒருவருடைய ஆட்சி நல்லாட்சி இல்லை. அதன் பிறகு அவரே வருவார் என்கிறார்கள். இந்த ஆட்சியைப் பற்றி மக்களுக்கு சரி இல்லாத கருத்து தெரிந்த உண்மைதான். இது தெரியாதது அல்ல, இப்படி இருக்கும்போது, இவர்கள் சொல்வது எதிர்மறையாக உள்ளது. அதாவது ஜோதிடர் சொல்வது, நான் கிரகங்களின் அடிப்படையில், பிரபஞ்சத்தை கேட்டு சொல்கிறேன் என்கிறார்கள். இதற்கு மக்களும் பதில் பேச முடியாது.ஜோதிடர்கள் உண்மை பேசுகிறார்களா? அல்லது பொய் பேசுகிறார்களா? என்பது இவர்கள் சொன்னது நடந்த பிறகு தான் தெரியும் .இப்போது மக்களுக்கு இந்த கருத்துக்கள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
மக்கள் வாக்களிக்கக் கூடாது, தவறான ஆட்சி என்று நினைக்கும் போது ஜோதிடர்கள் இப்படி சொல்வது என்ன கருத்து? ஒருவர் தன்னிடம் வந்து ஜோதிடம் பார்க்க வரும்போது தான், அதைப்பற்றி அவர்கள் பேச வேண்டும். அடுத்தது, ஒரு நாட்டின் தலையெழுத்து அல்லது வேட்பாளர்கள் மற்றும் இந்த அரசியல் கட்சிகளின் ஜாதகம் சரியான முறையில் கணிக்கப்பட்டுள்ளதா? அல்லது இவர்களுக்கு ஜோதிடத்தில் எந்த அளவுக்கு இவர்கள் அனுபவம் பெற்று இருக்கிறார்கள்? இவர்கள் சொன்னது நடக்குமா? நடக்காதா ?இவ்வளவு கேள்விக்குள் இங்கு செல்ல வேண்டி இருக்கிறது .
லட்சத்தில் ஒருவர் தான் ஜோதிடர். தற்போது ஆயிரத்தில் ஒருவர் கூட ஜோதிடர் இல்லை. அந்த அளவிற்கு இந்த ஜோதிடக்கலை மிகவும் கடினமான தெய்வீக கலை. அதை பணத்திற்காகவும், இதுபோன்ற பெயருக்காகவும், விளம்பரத்திற்காகவும், பயன்படுத்தினால் அது பலிக்காது. மேலும், இவர்களுடைய கணக்கு தவறும் .ஆனால், உண்மையான சித்தர்கள், ஞானிகள் கணிப்பு தவறாது. அவர்கள் சொன்னால் சொன்னது தான். அப்படி யாராவது சொல்லி இருந்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். இந்த ஜோதிடர்களின் கருத்தை ஒரு காலம் ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறாகும். அதனால், மக்கள் இதைப் பற்றி குழப்பமடைய தேவையில்லை.
இன்னொரு பக்கம் youtube பர்கள் கருத்தை விவாதிக்கிறார்கள். அல்லது அவர்களுடைய கருத்தை சொல்கிறார்கள். ஒரு தம்பி தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் வந்தால் தான், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தமிழர்களுடைய நலன்கள் செயல்படுத்த முடியும். அது சீமான் ஒருவரால் தான் முடியும் என்கிறார். இதுவரையில் சீமான் இந்த தமிழ்நாட்டு மக்களுக்காக செய்தது என்ன? குரல் கொடுத்து கூட்டத்தை காட்டிக் கொண்டு, சினிமா வசனங்களில் பேசுவது போல், சினிமாவில் நடிப்பது போல், அரசியலில் நடித்துக் கொண்டு, வசனம் பேசுவதெல்லாம் அரசியல் அல்ல.
youtube ர்களே உங்களுக்கும் சேர்த்து தான். அரசியல் என்பது செயல்பாடு! வாயில் வந்த வரைக்கும் பேசிவிட்டு, போவது அரசியல் அல்ல .ஏனென்றால் தமிழ்நாட்டில் திமுக அந்த காலத்தில் அதை தான் செய்தது .அப்போது படிப்பறிவு இல்லாத காலம். மக்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. இப்போது மக்கள் சிந்திக்க வேண்டும். அரசியல் என்றால் என்ன? என்று படிக்க வேண்டும். இது படித்த இளைஞர்களிடையே முக்கிய கருத்தாக இதை பதிவு செய்கிறேன். ஏனென்றால், வாயில் எதை வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் .ஆனால் செயலில் செய்வதுதான் மிகப்பெரிய கடினமான வேலை.
ஒருவரை பற்றி நல்ல விதமாகவும் பேசலாம் .கெட்ட விதமாகவும் பேசலாம். ஆனால், மனசாட்சியுடன் பேசுவது தான் பேச்சுக்கு அர்த்தம். மீதி எல்லாம் அது அர்த்தமா? என்பதை நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் அரசியல் இப்படி தான் இருக்கிறது. அர்த்தமில்லாத பேச்சுக்கள் அரசியலாகிவிட்டது. அது மட்டுமல்ல, சீமானின் அரசியல் வாழ்க்கையில் ஒழுக்கம் ,நேர்மை ஒரு தலைவனுக்கு இருக்கக்கூடிய பண்பு எதுவுமே இல்லை. ஒரு ஊடகத்தின் முன் பேசும் போது கூட ,அவர் எப்படிப் பேச வேண்டும்? என்ற ஒரு தகுதி கூட இல்லாதவர். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? என்றால்,
அரசியல் தெரியாமல் தன்னுடைய சுயநலத்திற்காக, அரசியல் ஆதாயம் தேடி இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டத்தை சேர்ப்பதிலும், அந்தக் கூட்டத்தை வைத்து ஆட்சி பிடிப்பதிலும் ,அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால், ஒரு அரசியல் கட்சி தலைமைக்கு அல்லது அது அரசியல் கட்சி என்று சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். இன்று அப்படி எந்த அரசியல் கட்சியில் இருக்கிறது? என்று கேள்வி கேட்கலாம். உண்மைதான், அதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்படி இல்லாத இன்றைய அரசியல் சூழ்நிலை உள்ளது.
50 ஆண்டு காலமாக அதிமுக, திமுகவிடம் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மாற்றம் தேவை தான். அந்த மாற்றம் எப்படிப்பட்ட ஒரு தலைவர் நமக்கு தேவை? அந்த தலைவரின் தகுதி என்ன? அந்த அரசியல் கட்சியின் செயல்பாடு என்ன? இதை தான் மக்கள் சிந்திக்க வேண்டும். இன்று மோடியின் சொத்து கணக்கு எவ்வளவு? அவர் குடும்பத்தினர் சொத்து கணக்கு எவ்வளவு? அவருடைய அர்பணிப்பு எவ்வளவு ?சீமானுக்கு எப்படி பணம் வருகிறது? எப்படி இந்த அரசியல் கட்சி நடத்துகிறார்? இதற்கான உண்மையான பதிலை இந்த யூடிபர்கள் தர முடியுமா?
மேலும், திமுக ,அதிமுகவினர் பூர்வீக சொத்து என்ன? இப்போது இருக்கக்கூடிய இவர்களுடைய சொத்து கணக்கு என்ன? எல்லாம் கம்பெனி வருமானமா? என்ன தொழில் செய்தார்கள்? எப்படி இந்த பல்லாயிரம் கோடிகள் வந்தது ? இதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு ஊடகமும் பேசவில்லை. எந்த ஒரு youtube பர்களும் பேசவில்லை. ஆனால்,
ஒருவன் பேசுகிறான் .நரேந்திர மோடியின் உடையை, அவருடைய ஷூவை, இதையெல்லாம் கணக்கெடுக்கும் இவர்கள், இந்த அரசியல் கட்சியினரின் கொள்ளைகளை பற்றி ஏன் கணக்கெடுக்கவில்லை? நாம் ஒரு ஊரில் இருந்து வெளியூருக்கு செல்கிறோம் என்றாலோ அல்லது ஒரு தகுதியான இடத்திற்கு நாம் செல்லுகின்றோம் என்றாலோ, நம்முடைய உடையை அதற்கு ஏற்றவாறு தான் நாம் உடையை மாற்றி செல்கிறோம். நம்முடைய சாதாரண நிலைமையே இப்படி இருக்கும்போது, ஒரு நாட்டின் பிரதமர் அவர் எப்படி இருக்க வேண்டும்? என்பது கூட தெரியாமல் ,மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள். அவர் இவ்வாறு இருப்பது இந்திய நாட்டுக்கு தான் பெருமை. வெளிநாட்டுக்கு செல்லும்போது அவருடைய உடையை பற்றி ஒருவர் பேசினால் அது இந்தியாவுக்கு தான் அது அவமானம். அந்த அவமானத்தை மோடி ஏற்படுத்தவில்லை.
மேலும், பொது வாழ்க்கை என்பது நெருப்பாற்றில் நீந்தி வருவதற்கு சமம். வாய் இருக்கிறது என்று ஊழல்வாதிகள் எப்படியும் பேசுகிறார்கள். அடாவடி பேச்சாளர்கள் எப்படியும் பேசுகிறார்கள்.ரவுடி கூட்டம் எப்படியும் பேசும். அவர்களுடைய தகுதி என்ன? என்று தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். எப்படியும் பேசுவது தகுதி அல்ல. அது திறமையும் அல்ல.அவர்களுடைய தகுதி எல்லாம் பணம், உடம்பு, ஆடை, நடிப்பு, பேச்சு. ஆனால், இப்படித்தான் பேச வேண்டும்.இப்படி தான் வாழ வேண்டும் என்ற கொள்கையோடு பேசுபவன் தகுதி தான் உண்மையான தகுதி.
அந்த தகுதி யாரிடம் இருக்கிறது என்பதை மக்கள் தான் அதை ஆய்வு செய்து பார்த்து கொள்ள வேண்டும் .அதே நிலைமைதான் இந்த ஊடகங்களுக்கும் இருக்கிறது. அதனால், கோடிக்கணக்கில் முதலீடு செய்த ஊடகம் பெரிய ஊடகம் என்றோ, நடுத்தர வர்க்கத்தினர் ஊடகம் சிறிய ஊடகம் என்றோ பாகுபடுத்தி அலட்சியம் காட்டாதீர்கள் .எந்த ஊடகத்திலும் அதில் வெளிவரக்கூடிய செய்திகள், கருத்துக்கள் எவ்வளவு உண்மை? எவ்வளவு பொய்? என்பதை மக்கள் தான் அதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய காலம் தற்போது உள்ளது.
ஆளுக்கு ஒரு கருத்தை சொல்கிறார்கள். திருடனும் தன்னை உத்தமன் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது உத்தமன் எங்கே போய், என்ன சொல்வான்? இதுதான் இன்றைய அரசியலின் நிலைமை .இதை ஊடகங்கள் அவரவர் சுயநலத்திற்கு ,அவரவர் பங்குக்கு, மக்களிடம் இதை சொல்லிப் பார்க்கிறார்கள். மக்கள் தான் இனி உஷாராக இருக்க வேண்டும். அந்த காலத்தில் ஒருவருக்கு தெரியவில்லை என்றால், சொல்லிக் கொடுப்பார்கள். இப்போது ஒருவருக்கு விஷயம் தெரியவில்லை என்றாலே, கவிழ்த்து விடுவார்கள்.
இது ஒரு சாதாரண தொழிலில் இருந்து, அரசியல் வரை இந்த நிலைமைதான். அதனால், மக்கள் உண்மையை சிந்திக்க வேண்டும். வருங்கால சந்ததிகள் அரசியலை அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகும். என்பதை புரிந்து நாட்டில் நல்லாட்சிக்கு, ஒரு நல்ல தலைமைக்கு, நம்முடைய அதிகார உரிமையை வாக்களித்து, ஊழலை அகற்றுவோம் . வருங்கால சந்ததிகளை வாழ வைப்போம்.