ஏப்ரல் 16, 2024 • Makkal Adhikaram
நீதித்துறை அரசியல் கட்சிகளுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும் சலுகை காட்டினால் அது ஓகே , சலுகை காட்டாவிட்டால் ,அது விமர்சனம் . இதுதான் ஓய்வு பெற்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு அனுப்பி உள்ள கடிதத்தின் சாராம்சமா ? மேலும்,
ஊழல் என்பது ஜனநாயகத்தின் மிகப் பெரிய ஆபத்து. அதற்கு நீதிமன்றம், நீதிபதிகள் முக்கிய தீர்வாக செயல்பட வேண்டும். நீதித்துறை சாமானிய மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நாட்டில் எதிர்க்கட்சிகளின் ஊழல், ஆளும் கட்சியின் ஊழல் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் பதவி அதிகாரத்தால், இவர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தில் நிரூபித்தால் தான் இவர்களுக்கு தண்டனை .இல்லையென்றால், தப்பித்து விடுகிறார்கள்.
அது மட்டுமல்ல, இந்த ஊழல்வாதிகளுக்கு பின்னால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகிறது. அது எப்படி என்றால்? ஊழல் செய்த பணத்தை இவர்கள் பதுக்கி விடுகிறார்கள் .அல்லது கருப்பு பணமாக வெளிநாட்டு கம்பெனிகளில் முதலீடு செய்கிறார்கள். அப்போது நாட்டில் பணப்புழக்கம் இங்கே குறைந்து விடுகிறது .பணப்பழக்கம் இங்கே இருந்தால்தான் இங்கு உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு? விலைவாசி ஏற்றம் இதையெல்லாம் கட்டுக்குள் இருக்கும். ஆனால், பணத்தை அவ்வப்போது வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ கொண்டு செல்லும்போது பணப்பழக்கம் குறைந்தால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தானாகவே உயர்ந்து விடுகிறது.
இது தவிர, சமூக குற்றங்கள், ஊழல்வாதிகளின் பின்னால் இருக்கும் அரசியல் கட்சியினர், சாமானிய மக்களின் வாழ்க்கையில் தலையிடுகின்றனர். அதாவது அவர்களுடைய சமூக உரிமைகள் பறிக்கப்படுகிறது. அது ரவுடிகளால்,அரசியல் ரவுடிகளால், காவல்துறையால் அடக்குமுறைகள்,பொய் வழக்குகள் போட்டு, அடிமைப்படுத்துகிறார்கள்.மேலும் ,சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, அதற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையின் அதிகாரம் வரம்பு மீறிய செயலாகிறது. இதற்கு ஒவ்வொருவரும் நீதிமன்றத்தின் மூலம் சட்டத்தின் பாதுகாப்பு தேடிக் கொண்டிருந்தால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பொருளாதாரத்திற்காக உழைக்க வேண்டியவர்கள் இதற்காக போராட முடியாது.
மேலும், தற்போது திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு இருக்கின்ற சுதந்திரம் கூட ,இன்றைய சமூகநலன் பத்திரிகையாளர்களுக்கு இல்லை .அதற்கு உதாரணம், கடந்த சில தினங்களுக்கு முன் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சின்ன பையன் மகன் சரவணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்து கோடிகளில் புரளுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .அது பற்றி அப்பகுதி செய்தியாளர் ஆனந்தன் பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்ததால், சரவணன் மீது பெட்டி கேஸ் வழக்கு போட்டு அவரைக் காப்பாற்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பத்திரிக்கையில் செய்தி போட்ட செய்தியாளர் ஆனந்தனை அப்பகுதி இன்ஸ்பெக்டர் வீடியோ காலில் வந்து மிரட்டி உள்ளார். இது காவல்துறையின் எல்லை மீறிய அதிகாரம்.மேலும், காவல்துறை !
யாருக்கு பாதுகாப்பு என்பதை தெரிவிக்க வேண்டும்? சமூக குற்றவாளிகளுக்கா? அல்லது அரசியல் பின்னணி குற்றவாளிகளுக்கா? சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கா ? யாருக்கு என்பதை டிஜிபி தான், அங்கு என்ன சம்பவம் நடந்துள்ளது? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தவிர,சட்டத்துக்கு புறம்பாக 24 மணி நேரமும், கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய குடும்பத்தின் வருமானம் கேள்விக்குறியாகிறது ? இதைப் பற்றி கவலைப்படாத திமுக அரசு, மக்கள் நலனுக்காக, மக்களின் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டிய திமுக அரசு, மறைமுக பாதுகாப்பாக காவல்துறை இருந்து வருவது, திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம்.ஏற்கனவே, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும், மது, போதை பொருள் பிரச்சனையும்,பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
அதைப்பற்றி கவலைப்படாமல், வேறு சில பத்திரிகைகளில் நல்ல விதமாக செய்திகளை வெளியிட்டு, நடக்கின்ற தவறுக்கு மக்களிடம் அரசியல் வித்தை காட்டுவது திமுகவிற்கு எளிதான வேலை . ஏனென்றால் சாமானிய பத்திரிகைகள் உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லும் போது, அரசியல் பின்னணி உள்ள சமூக குற்றவாளிகள், அந்த பத்திரிகையின் மீதும், செய்தியாளர்கள் மீதும் மிரட்டப்படுவதும், அவதூறாக களங்கம் கற்பிப்பதும், வாடிக்கையாகி வருகிறது.
இதனால், இவர்களுடைய தகுதி, நேர்மை மக்களிடம் முட்டுக்கொடுத்து எத்தனை நாளைக்கு அந்த பத்திரிகைகள் காப்பாற்றிக் கொண்டிருக்கும்? எத்தனை நாளைக்கு இதுபோல் அரசியல் பின்னணி கொண்ட சமூக குற்றவாளிகளுடன், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் போராட வேண்டி இருக்கும்? ஆட்சி யாருக்கும் நிரந்தரமானது அல்ல. காவல்துறை தங்களுடைய கடமையிலிருந்து, திசை மாறி ஆட்சியாளர்களுக்கு எடுபிடி ஆக இருப்பது காவல்துறையின் மீதுள்ள பொது மக்களின் நம்பிக்கை சிதைக்கும் வேலை .
மேலும்,எந்த பலனும் இல்லாமல் சமூக நன்மைக்காக போராடிய செய்தியாளர் ஆனந்தனுக்கு இப்படிப்பட்ட காவல்துறையின் மிரட்டல் சமூக குற்றமாகும். சமூக குற்றவாளிகளுக்கும், காவல்துறையில் இது போன்ற குற்றவாளிகளுக்கும் என்ன வித்தியாசம்? என்பதை பொது மக்களுக்கு DGP சங்கர் ஜிவால் சர்மா தான் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒரு சாமானிய பத்திரிக்கை செய்தியாளர்களே, ஒரு சிறிய சமூக குற்றவாளிகளிடம் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது ?
இதுவே, நாட்டின் மிகப்பெரிய பல ஆயிரம் கோடி ஊழல்களின் அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வரை எவ்வாறு இந்த சமூகம் போராட வேண்டி இருக்கிறது? நாட்டில் ஊழல் செய்ய மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ தவறுகள் நடந்தால் மன்னிக்கலாம். ஆனால், மன்னிக்க முடியாத தவறுகளை செய்துவிட்டு, நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேட ஊழல்வாதிகள் நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் அழுத்தம் கொடுத்துக் கொண்டு, நீதிபதிகளை விமர்சனம் செய்து கொண்டு, மக்களிடம் நீதித்துறையை களங்கப்படுத்திக் கொண்டிருந்தால், நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகும்?
மேலும்,பொது மக்களின் கடைசி நம்பிக்கையை இழந்து, அவர்கள் வேறு எங்கு செல்வார்கள் ? அதனால், தற்போதைய அரசியல் ஊழல்வாதிகளிடம், அரசியல் குற்றவாளிகளிடம், கட்சி பாகுபாடு இன்றி சட்டத்தை பாதுகாத்து, நீதித்துறையின் மாண்பை பாதுகாத்து, நீதிபதிகளின் நேர்மை பாதுகாத்து, செயல்பட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்கு நீதித்துறை இருந்து வருகிறது . அதை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு நீதிபதிகளும், எச்சரிக்கையுடன் செயல்படுவது நாட்டு மக்கள் அனைவரின் கடைசி நம்பிக்கை .