ஏப்ரல் 18, 2024 • Makkal Adhikaram
வாக்காளர்கள் தங்கள் உரிமையை பணத்திற்காகவோ அல்லது பொய்யான வாக்குறுதிகளுக்காகவோ ஏமாறாமல் பொதுநலன் கருதி சிந்தித்து வாக்களியுங்கள் .தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அதன் கருத்துக்களை, செயல்பாடுகளை சொல்லி வாக்கு கேட்டார்கள். அந்த பிரச்சாரமும், நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் ,அரசியல் கட்சித் தலைவர்கள் பேச்சில் உள்ள உண்மை தன்மையை மக்கள் புரிந்து கொள்வார்களா ? மேலும்,
தேர்தலில் வாக்களிப்பது, வாக்காளர்களாகிய உங்களின் உரிமை. அந்த உரிமையை தன் பக்கம் ஈர்க்க அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருகிறார்கள். இதில் எது உண்மை? எது பொய்?இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள்? இது ஜாதி கட்சியாகவும் இருக்கலாம். அல்லது அரசியல் கட்சியாகவும் இருக்கலாம் .அல்லது மதம் சார்ந்த கட்சியாகவும் கூட இருக்கலாம் .எதுவாக இருந்தாலும், மக்கள் தீர்மானித்து வாக்களிப்பது தான் அவர்களுடைய முக்கிய கடமை.மேலும்,
இந்த கடமையை செய்யும்போது, மக்கள் தங்கள் சுயநலத்தில் அக்கறை காட்டினால், பொதுநலன் அங்கே அடிபட்டு போய்விடும். தேர்தல் என்பது அவரவர் சுயநலத்திற்காக தேர்தல் நடத்தவில்லை .அது நாட்டின் பொது நலன் கருதி நடத்தப்படும் தேர்தல். இங்கே அது கூட தெரியாத பத்திரிகைகள், ஊடக பேச்சாளர்கள், youtube பர்கள், கூலிக்கு மாரடைக்கும், கூட்டமாக இருந்து கொண்டிருக்கிறார்கள் .கூலிக்கு மாரடைத்தால் யார்? கூலி கொடுக்கிறார்களோ, அவர்களுக்காகத்தான், யாராக இருந்தாலும் பேசுவார்கள்.
ஆனால், பொது நலனுக்காக பேசுபவர்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை .எது உண்மையோ, ஏதோ பொய்யோ அதை சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள். அதுதான் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் கருத்து சுதந்திரம். பத்திரிகையின் உரிமைகள், சமூகநலன் சார்ந்தது.ஆனால் இன்று அவை அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்து போய்க் கொண்டிருக்கிறது. அதனால் தான், மக்கள் எது உண்மை? எது பொய் ?என்று தெரியாமல் திகைத்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல,
திருடனும் தன்னை நல்லவனாக மக்களிடம் பேசி ,அரசியல் செய்வான். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அரசியல் செய்பவனும் பேசிக் கொண்டுதான் இருப்பான் .எதுவுமே இல்லாமல் வாய் தான் மூலதனம் என்று, வார்த்தை ஜாலம் செய்து கொண்டிருப்பான். அவனும் அரசியல் என்பான் .இது எல்லாவற்றையும் இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது தலைமை என்ன செய்தது? என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்க வேண்டும் .செயல்பாடு சரியில்லை என்றால், வாய் வார்த்தைகளில் பொய் தான் வரும்.
அந்த பொய்யை நம்பி வாக்களித்தால் அல்லது பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால், உங்களுக்கான சேவைகள் எதுவும் இருக்காது .அவர்களுடைய நலனை மட்டும் தான் பார்த்துக் கொண்டு, ஓட்டுக்கு பணம் கொடுத்த வியாபாரம் முடிந்து விட்டது.இனிமேல் அதை பற்றி நினைக்க வேண்டியது இல்லை.ஜெயித்தால் தங்களுடைய வியாபாரம் எத்தனை கோடி என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் தமிழ்நாட்டு அரசியல் .அதனால், மக்கள் இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் .
அது மனசாட்சியுடன் இந்த சமூக நன்மைக்காக போராடுகின்ற குறைந்தபட்ச அரசியல் கட்சி எது? அதன் தலைவர்கள் யார்?அதிகபட்சம் அவர்கள் செய்தது என்ன? அதில் சில குறைபாடுகள் இருக்கலாம். அது பற்றி கவலை இல்லை. எந்த அரசியல் கட்சியும் 100% யாராலும் செய்ய முடியாது .
ஆனால், பேசுவது மட்டும் 500 சதவீதத்திற்கு மேல் கூட பேசலாம் .ஆனால், செய்வது ஐந்து சதவீதம் கூட இல்லை என்றால், பேசிப் பயனில்லை. அதனால், வாக்காளர்கள் இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களோ அல்லது வேட்பாளர்களின் பேச்சிலோ எவ்வளவு உண்மை? எவ்வளவு பொய் ?என்பதை நடுநிலையோடு பார்த்து வாக்களியுங்கள்.மேலும்,
இதில் பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சிகள் சொன்னால் அது உண்மை என்று நம்பும் அரசியல் தெரியாத மக்கள் இன்று வரை, ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.இப்படித்தான் பல செய்தி மக்கள் தொடர்பு துறை மாவட்ட அதிகாரிகளே பலர் இருக்கும் போது, சாதாரண மக்கள் இருக்க மாட்டார்களா ?
உண்மைக்கு பெரிய பத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி, சிறிய தொலைக்காட்சி எதுவுமே இல்லை. யார் சொன்னாலும், உண்மை ,உண்மைதான்.அதை நம்பி வாழ வேண்டும்.
மேலும், மக்கள் எதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும் ? என்று தெரியாமல் வாக்களிக்கும் போது, இந்த நாட்டின் எதிர்காலம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில், விவசாயம், சட்டம் ஒழுங்கு, அமைதி,சுதந்திரம், கலாச்சாரம், வாழ்க்கையின் நிம்மதி, இவை அனைத்தும் கேள்விக்குறியாகும் ஒரு முக்கிய களம் தான் தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் உரிமை .
இப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவமான வாக்களிக்கும் உரிமை , தங்களின் சுயநலத்திற்கு வாக்களித்தால் !அது இன்றைய வாக்காளர்களின் ஏமாற்றமும், நாளைய எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை போராட்டம் என்பதை வாக்காளர்கள் புரிந்து வாக்களியுங்கள் .