மே 08, 2024 • Makkal Adhikaram
நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும், பல அரசியல் கட்சிகள் இருந்து வருகிறது. இந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகள் பற்றி பேசுவதற்கு தான்நன்றாக இருக்கிறதே ஒழிய செயலில் அதற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலைமை தற்போதைய அரசியல் கட்சிகளால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்களிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரே சமூகமாக இருந்தாலும், அந்த சமூகத்தில் பல கட்சிகளில் சேர்ந்திருக்கும் போது ,அவர்களுக்குள் ஒரு பிரிவினைவாதம் வளர்ந்து விட்டது .இது நல்ல நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள், இந்த பிரிவினை வாதத்தை கூட செய்யவில்லை. ஒருவர் ஆட்சியில் கொள்ளையடித்தால், அந்த கொள்ளையை நிறுத்த வேண்டும்.அதைப் பார்த்து தானும் அதைவிட எவ்வளவு கொள்ளையடிக்கலாம்? அப்படி இல்லை என்றால், ஆளும் கட்சி எத்தனை கோடி கொள்ளை அடித்தார்கள்? என்பதை கணக்கிட்டு பங்கு கேட்டு மறைமுகமாக வாங்கி கொள்கிறார்கள்.
இது ஒரு புறம் இருந்தால், மற்றொரு புறத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் வருகிறது. இந்த பணம் எதற்காக வருகிறது? ஏன் வருகிறது? என்ற காரணத்தைக் கூட இன்னும் பல மக்களுக்கு தெரியவில்லை. ஒரு சிலர் கட்சியின் வளர்ச்சிக்காக பணம் கொடுக்கிறார்கள் என்கிறார்கள். ஒரு சிலர் அவர்களுக்கு ஆதரவாக இங்கே பேசினால் அதற்கு கொடுக்கிறார்கள் என்கிறார்கள். இப்படி மறைமுகமாக பல கோடிகள் இந்த அரசியல் கட்சிகள் சம்பாதிக்கிறது ?.இது தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை எல்லோருக்கும் அரசியல் கட்சி என்றால், இப்போது இந்த லேபிலை பயன்படுத்தி எத்தனை கோடி ஆளாளுக்கு சம்பாதிக்க முடியும்? இதுதான் தற்போதைய அரசியல் திறமை.
மக்கள் நலம், மக்கள் நலம் என்று சொல்வார் தன் மக்கள் நலம் என்று இருப்பார். இதுதான் அரசியல். இதிலிருந்து தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மாறப்போகிறது? மக்கள் மாற்ற நினைத்தாலும், இந்த அரசியல் கட்சிகளில் யார் அதற்கு தகுதியானவர்கள்? என்று தேட வேண்டி இருக்கிறது. ஒரு கட்சியிலாவது நூற்றுக்கு 50 சதவீதமாவது சமூக அக்கறை உள்ளவர்களாக இருப்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது.
இந்த நிலையில் ஒருவருடைய அரசியல் கட்சியின் பேச்சை நம்பி மக்கள் ஏமாந்தால் ,அதைவிட அவர்களின் முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.அதே போல் தான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சி செய்திகளை பார்த்து நம்பினால் மக்களுக்கு அரசியல் ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதுவும் கிடைக்காது. இத்தனை ஆண்டு காலம் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து ஜால்ராவாக மக்களை ஏமாற்றியது இன்னும் மக்களுக்கு அது புரியவில்லையா ? மேலும்,
மக்களுக்கு பொதுநலம் என்றால் என்ன?என்று தெரியாமல் சுயநலமாகவே சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இவனுக்கு ஓட்டு போட்டால் தனக்கு என்ன லாபம்? இவன் ஜெயித்தால் நமக்கு என்ன வருமானம்? இப்படி சிந்திக்க ஆரம்பித்தால், நாட்டில் அரசியல் என்பது ஒரு கொள்ளை அடிக்கும் கூட்டமாக தான் இருக்குமே ஒழிய, மக்கள் பிரச்சனைகள் எதுவும் தீராது .
தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல, அதை கூட யாரோ எழுதி கொடுத்திருப்பார்கள். இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி எழுதிக் கொடுத்த அதிபுத்திசாலி கூட அந்த வார்த்தைக்கும், திமுகவின் ஆட்சிக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது கூட தெரியாமல், அந்த மேதாவி எழுதி கொடுத்து விட்டார் . அவர் எந்த அர்த்தத்தில் எழுதி கொடுத்தார்? என்பது அந்த அர்த்தத்தை நாங்கள் தேட வேண்டி இருக்கிறது.
மேலும், மக்களின் பிரச்சனைகள் பற்றி எந்த அரசியல் கட்சியினர் காது கொடுத்து கேட்கிறார்கள்? என்பது தெரியவில்லை .அப்படி காது கொடுத்து கேட்பவர்களாக இருந்தால், இந்த அரசாங்கமும் சரி, செய்தி துறையில் எங்களின் கோரிக்கையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
ஐந்து ஆண்டுகளாக செய்தித் துறை அதிகாரிகளுக்கும், மக்கள் அதிகாரத்தில் வந்த செய்தியை பற்றி இயக்குனர் முதல் செய்தி துறை செயலாளர் வரை தெரிவித்து விட்டேன்.இது தவிர, தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது அதற்கு எந்தப் பயனும் இல்லை. மேலும், சில கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பேச வேண்டும் என்று போனில் தொடர்பு கொண்டாலும் ,போனை எடுக்கவில்லை.
இனி நாட்டில் எத்தனை அரசியல்வாதிகள் ,அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தாலும், மக்களுக்கு அதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. அரசியல் கட்சிகள் என்பது கொள்ளை அடிக்கும் கூடாரம் ஆகிவிட்டது. இதில் மக்கள் நலனுக்காக வாயில்தான் வார்த்தைகளை காதுகளில் கேட்டுவிட்டு செல்ல வேண்டும். நடைமுறையில் இங்கே இருப்பதாக தெரியவில்லை. அதனால், மக்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், ஒரு பயனும் இருக்காது.
மேலும், வருங்கால இளைய தலைமுறைகளின் வாழ்க்கை, கேள்விக்குறியாகும். எங்கோ ஒரு பையனை படம் பிடித்து ,இந்த கார்ப்பரேட் ஊடகங்களில் சினிமா காட்டுவது போல காட்டிவிடுவார்கள். அதனால், மக்கள் அதைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான். இனி இளைய சமுதாயம், சினிமாவையோ அரசியலையோ, ஒன்றாக பார்க்காமல் உங்களுடைய வாழ்க்கைக்கு உதவக்கூடிய அரசியல்? உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய அரசியல் எப்படி இருக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஊழல் ஆட்சியில் உத்தமர்களாக பேசி வலம் வந்து கொண்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் சினிமாவும், அரசியலும் ஒன்றாக கலந்து விட்டிருக்கிறது. அதனால், சினிமா வேறு ,அரசியல் வேறு என்பதை பிரித்து மக்கள் சேவையை முன்னெடுக்கக்கூடிய அரசியல் கட்சி எது ?என்பது தீர்மானிப்பது தான் வருங்கால இளைய சமுதாய வாழ்க்கையின் வெற்றி .அது சினிமா வசனத்தால் அல்லது அரசியல் வசனத்தால் வந்து விடாது, உழைப்பால் மட்டுமே அதை செயல்படுத்தி காட்ட முடியும் என்பதை பொதுமக்களும், இளைய சமுதாயமும் புரிந்து மாற்றத்தை நோக்கும் மக்களாக இருந்தால் மட்டும்தான்,உங்களின் எதிர்கால கனவு இலட்சியம் அதில் அடங்கியுள்ளது என்பதை பொறுப்புடன் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும், இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாமே இது அவர்களுடைய சுயநலத்திற்காக செய்து கொண்டிருக்கிறார்கள். தானும் தன் கட்சியினரும் பிழைப்பது தான் அரசியல். அதனால், மக்கள் வாக்களிப்பது எதற்கு ?என்ற கேள்வியை எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறது.பத்திரிக்கை நடத்தக்கூடிய எங்களுக்கே இந்த நிலைமை என்றால், மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் .மேலும்,மக்கள் இதையெல்லாம் சிந்தித்து உணர்ந்தால் தான், மக்களுக்கான அரசியலை தேர்வு செய்ய முடியும் என்பதை புரிந்து கொண்டால் சரி .