மே 09, 2024 • Makkal Adhikaram
நாட்டில் கஞ்சா, போதைப்பொருள், ரவுடிசம் போன்ற சமூக விரோத செயல்களை, அரசியல் கட்சி பின்னணியில் செய்தால் அவர்கள் நல்லவர்களா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை சாமானிய ஒரு youtube நடத்தும் சவுக்கு சங்கர் மீது இவ்வளவு கொடூரமான தாக்குதல் ஏன்?
அரசியலில் பல லட்சம் கோடி கொள்ளை அடித்துக் கொள்கிறார்கள் . அவர்கள் எல்லாம் சட்டத்தை ஏமாற்றி பிணையில் வருவதும், நீதிமன்றத்தில் சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்துக் கொள்வதும், வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், சவுக்கு சங்கர் திமுக ஆட்சியின் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை கூறி வந்தார், என்ற காரணத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
மேலும், சவுக்கு சங்கர் காவல்துறை மீது சொன்ன குற்றச்சாட்டு அது உண்மையாக கூட இருக்கலாம். அல்லது பொய்யாகவும் இருக்கலாம் .ஆனால், அது ஒரு தனிப்பட்ட நபர்களின் மீது சொல்லப்பட்ட கருத்து தவறானது. ஏனென்றால், விருப்பத்தின் பெயரில் தான் கள்ளக்காதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .இதை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. அப்படி இருக்கும்போது இவர் சொன்ன கருத்து தவறானது. ஆனால், பொது வாழ்க்கையில் ஈடுபடும் போது, இப்படிப்பட்ட சின்ன விஷயத்தை இப்போது பெரியதாக்கி விட்டார்கள். அதற்கு என்ன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுத்து இருக்கலாம் .தவறில்லை.
ஆனால், அவர் மீது கஞ்சா வழக்கு, பொய் வழக்கு போடுவது நாட்டின் கருத்து சுதந்திரத்திற்கும், பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் ஆபத்தானது என்பதை நீதிமன்றம் தான் இதற்கு சரியான தீர்வு கொடுக்க முடியும். மேலும், காவல்துறையில் இருப்பவர்களுக்கு இந்த பொய்களுக்கு போடக்கூடிய அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உடனடியாக அதை தடுக்க வேண்டும். நாட்டில் கிரிமினல்களுக்காக கொடுக்கப்பட்ட இந்த சட்டம், அப்பாவி பொதுமக்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் ஏவப்படுகிறது. இது தவறானது.
இப்படி ஒரு காவல்துறையை சேர்ந்த அதிகாரி பொய் வழக்கு போட்டால், அவர் நீதிமன்றம் வரை சென்று தான் அதற்கான நடவடிக்கை அந்த காவல்துறையின் மீது எடுக்க முடிகிறது. ஆனால், இதற்கு நீதிமன்றம் நாட்களை கடத்துகிறது. அதனால், பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடி தீர்வு கிடைக்கவில்லை. இந்த சமயத்தில் காவல்துறையின் அதிகாரம் தவறாக பயன்படுத்துகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் தான் இப் பிரச்சனைக்கு சட்டத்தின் மூலம் சரியான தீர்வு காண முடியும் . சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு சஸ்பென்ஷன் அல்லது தண்டனை வழங்குவதோடு, அபராதமும் விதிக்க வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.மேலும்,
கூலிக்கு மாரடைக்கும் பத்திரிகைகளும், செய்தியாளர்களும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சவுக்கு சங்கர் மீது தவறுகளை அடுக்குகிறார்கள். நீ 2 லட்சம் ரூபா சம்பளம் வாங்கினாலும், நீ கூலிக்கு வேலை செய்யக்கூடிய ஒரு செய்தியாளர் தான் என்பதை கார்ப்பரேட் நிறுவன செய்தியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், நாங்கள் அப்படி கிடையாது. எங்களுடைய பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் சமூக நலனுக்காக உண்மை என்னவோ அதை வெளிப்படுத்துகிறோம்.