திமுக ஆட்சியில் ! டிஜிபி ஆக இருந்த ராஜேஷ் தாஸுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொது மக்களின் நிலைமை என்ன ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மே 26, 2024 • Makkal Adhikaram

 காவல்துறையின் தவறான நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தான் மக்களுக்கு பாதுகாப்பு.

காவல்துறையில் மனிதாபிமானத்துடன் பணியாற்றி வந்தவர் முன்னாள் சிறப்பு டிஜேபி ராஜேஷ் தாஸ், அவரை திருவள்ளூர் எஸ் பி ஆக இருந்தபோதும், ஏ டி ஜி பி ஆக இருந்த போதும், எனக்கு நன்கு தெரியும்.

இவருக்கு பிறகு திருவள்ளூரில் அப்படி ஒரு எஸ் பி இன்னும் நான் பார்க்கவில்லை. அவரிடம் எஸ் பி என்ற ஒரு பெரிய தோரணை இருக்காது. சின்ன குழந்தை போல் பேசுவார். அதேபோல் ஏ டி ஜிபி ஆக இருந்தபோது அவரை சந்தித்து இருக்கிறேன் .அப்போதும் மனிதாபிமானத்துடன் தான் பேசுவார். காவல்துறையில் அப்படி ஒரு மனசாட்சி உள்ள மனிதரை நான் இன்னும் பார்க்கவில்லை . ஒரு பெண் எஸ்பியை பாலியல் துன்புறுத்தினார் என்று கைது செய்து விட்டார்கள்.

ஆனால், உண்மை அந்தப் பெண் எஸ்பிக்கும், ராஜேஷ் தாஸ்சுக்கும், கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் . இதில் மிகப்பெரிய ஒரு மர்மம் இருக்கிறது. அந்த மர்மத்தை பற்றி ஒரு பெண் எனக்கு சொன்னார். அதுவும் உண்மையா? பொய்யா? என்பது கடவுளுக்கு தான் தெரியும். நான் தான் சார் இவ்வளவு பெரிய விஷயத்தை பெரிதாக்கினேன் என்று எனக்கு சொன்ன தகவல். அந்த அம்மா என்னிடம் எனக்கு பத்திரிக்கையில் ஐடி கார்டு போட்டு குடுங்க சார் என்று சொன்னாங்க, நான் சொன்னேன் நீங்கள் முறையாக செய்தியும், விளம்பரமும் கொடும்மா நான் செய்கிறேன் என்றேன். அவ்ளோ பெரிய ஆளையே கவுத்து போட்டீங்க, நாமெல்லாம் எந்த மூளைக்கு என்று நானே நினைத்துக் கொண்டேன் . 

மேலும், ராஜேஸ் தாஸ் மனைவிக்கும் அவருக்கும் ஒத்து போகவில்லை. ஒரு மனிதனுக்கு மனைவியும், குடும்பமும் ஏறுக்கு மாறாக இருந்தால், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சமூகத்தில் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள். அப்படித்தான் அவர் நிலைமை .அவரைப் பொறுத்தளவில் நல்ல மனிதர். மேலும், ஒரு மனிதனுக்கு நேரம் சரியில்லை என்றால், எவ்வளவு பெரிய நல்லவனாக இருந்தாலும், அவனும் குற்றவாளி ஆக்கப் படுவான். இந்த நிலைமை ராஜேஷ் தாஸ் டிஜேபிக்கு வந்திருக்கக் கூடாது. இது மனசாட்சி உடன் வாழ்ந்தவர்களுக்கு தான், இப்ப பிரச்சனைகள் வருகிறது. மனசாட்சியே இல்லாமல் வாழ்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.ஆனால், அதற்கான வினை அடுத்த ஜென்மத்தில் அந்தக் கணக்கு தொடரும். இப்போது ஸ்டாலினுக்கு நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது அவ்வளவுதான் .

அது எப்போது மாறுகிறதோ, அப்போது எல்லாமே மாறிவிடும். அதனால் மனசாட்சி இல்லாமல் ஆட்சி, நிர்வாகம் போய் கொண்டு இருக்கிறது. அதுவும் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது .இனி வரும் தமிழ்நாட்டு அரசியல் எந்த ஒரு அரசியல் கட்சியும் ,மக்களிடம் உழைக்காமல் வர முடியாது. இளைய தலைமுறை, இந்த அரசியல் பந்தா ,அரசியல் ஊடக வியாபாரம், செல்போனில் படம் பிடித்து போட்டுக் கொண்டு, பேஸ்புக்கிளும், whatsapp பிலும்,  காட்டி இந்த டிராமா அரசியல் எல்லாம் மக்கள் நிச்சயம் முடிவு காட்டுவார்கள். அப்படி கட்டினால் தான், இவர்களுக்கான அரசியல். அது ஒரு நல்ல எதிர்காலத்தைஇளைய தலைமுறைகளுக்கு உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . 

மேலும், கார்ப்பரேட் ஊடகப் பொய்களை தொடர்ந்து மக்கள் ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இந்த பொய்களை நம்பி இருந்தால் அதிமுக தான் இப்போதும் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். திமுக ஆட்சி வந்தது. இப்போது திமுகவும் சரியில்லை என்கிறார்கள். அப்படி என்றால் மக்களுக்காக உழைப்பவர்கள் யார்? எந்த அரசியல் கட்சி? என்பதை நோக்கி தான் தமிழகத்தின் இனி வருங்கால அரசியல். 

அதனால், இந்த ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்று இருக்கும் வரையில் நான் யாரையெல்லாம் பழி வாங்க நினைக்கிறோமோ, அவர்களை எல்லாம் உள்ளே துக்கி போடு, இதுவல்ல ஆட்சி ,இது அராஜகம் .அதனால், பதவி, அதிகாரம் என்பது நிரந்தரமல்ல. அதிமுக ஆட்சியில் கொடி கட்டி பறந்தவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்? என்று தேட வேண்டி உள்ளது. இதே நிலைமை தான் திமுகவிற்கு வரப் போகிறது. அதனால், ஆட்சியில் இருக்கும் போது, நல்லதை நினைத்து நல்லதை செய்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால், காலம் அதற்கான விலை கணக்கில் எழுதிக் கொள்ளும். யாராக இருந்தாலும், அதற்கு கட்டுப்பட்டவர்கள் தான் என்பதை இந்த காவல்துறையும், இதை புரிந்துக் கொள்ள வேண்டும். 

என் மீது பொய் வழக்கு போட்ட எஸ்.ஐ. லட்சுமணன் காவல்துறையில் பணியிலே இல்லை. அட்ரஸும் இல்லை .அவர் ஆடிய ஆட்டம் என்ன ? அதனால், காவல் துறை மனசாட்சி இல்லாமல் பணி செய்தால், அது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் அந்த கணக்கு. நீங்கள் தீர்த்து விட்டு தான் வெளியே போக வேண்டும். அது கடவுளின் கணக்கு. இது புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு புரியாது. நீ எதை வேண்டுமானாலும், எழுதிக் கொள்ளலாம் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள்.

ஒரு உயர் பொறுப்பில் இருந்த காவல்துறை அதிகாரி டிஜேபி ராஜேஷ் தாஸ்,அவர் பதவியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அவருக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டாமா? இதையே இப்படி எடுத்துக் கொள்வோம், ஸ்டாலின் நாளைக்கு முதல்வராக இல்லை .அவரை சாதாரண மக்களைப் போல் கைது செய்து கொண்டு, இதே காவல்துறை வந்தால், அவர் முதல்வராக இருந்தவர் அல்லவா? அதை தான் யோசிக்க வேண்டும். 

அது போல் ஒரு வேலைக்காரன் புகார் அளித்தால், டிஜிபியை கைது செய்து விடுவீர்களா? என்னய்யா காவல்துறை? அந்தத் துறையில் அவர் எப்படி இருந்தார் ? ஆட்சி மாற்றம் வரும்போது யாரெல்லாம் அவரை பழி வாங்கினார்களோ ,அதே நிலைமை மீண்டும் உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இது காவல்துறைக்கே கேவலம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *