மே 28, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் பிஜேபி அரசியல் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு கூடியுள்ளது உண்மைதான். ஆனால், அந்தக் கட்சியினுடைய நிர்வாகிகள் அதை பயன்படுத்தி, கட்சியை மேலும் வளர்க்கவும், மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கவும், மத்தியில் ஆளுகின்ற மோடி அரசின் திட்டங்களை அவர்களுக்கு கொண்டு சேர்க்கவும், பணியாற்றவில்லை என்பது தான் மிகப்பெரிய அரசியல் பின்னடைவு .
இதற்கு காரணம் என்னவென்றால், இதற்கு முன்னால் இந்த கட்சியின் நிர்வாகிகள் ஒரு வெத்து பந்தா அரசியலை செய்து கொண்டு,பொதுமக்கள் போன் செய்தாலும் எடுக்க மாட்டார்கள். எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் போன் செய்தாலும் எடுக்க மாட்டார்கள். பிறகு எப்படி இவர்களுடைய அரசியல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும்? மோடி செய்கிறார், மோடி செய்கிறார் என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? அதுதான் மக்களின் கேள்வி?
கார்ப்பரேட் ஊடக பேச்சாளர்களாக இருந்து கொண்டு, தானும் ஒரு அரசியல்வாதி என்று காட்டிக் கொண்டு,youtube லும் , பிற கட்சிகளையும் அரசியல் விமர்சனம் செய்து கொண்டு, உங்களை நீங்கள் பெரிய ஆள் என்று காட்டிக் கொண்டு உலா வருவதில் எந்த அர்த்தமும் இல்லை. அது மக்களுக்கு தேவையும் இல்லை. எல்லா அரசியல் கட்சி கம்பெனிகளும், அதையே தான் தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறது.
இந்த கார்ப்பரேட் ஊடகப் பொய்களை நம்பி மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். அதை நம்பி நீங்கள் அரசியல் செய்தால், தமிழ்நாட்டில் ஏமாந்து போவீர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளும், சோசியல் மீடியாக்களும், மக்களுக்கு உண்மையை உணர்த்தி வருகிறது. என்னதான் உங்களுடைய கட்சிகளின் ஐ டி டீம் உங்களுக்கு முட்டு கொடுத்தாலும், அதை ஏற்க மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு கருத்து சொன்னால், அந்த கருத்துக்கு உடனே வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து அதற்கு ஒரு பதில் 4 வீடியோ போட்டு விடுகிறார்கள்.
அதனால், இதை வைத்து எல்லாம் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பிஜேபி தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இரண்டு அரசியல் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். மக்களின் குறைகளையும், சமூகப் பிரச்சினைகளையும் நீங்கள் களை எடுக்க ஆர்வம் காட்ட வேண்டும். அது இல்லாமல் தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சியைப் பிடிப்பது என்பது தனிப்பட்ட முறையில் மிகவும் கஷ்டமான வேலை. தவிர, திமுக வே தற்போது ஆறு, ஏழு கட்சி கூட்டணியில் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறது .அதற்கும் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. இந்த நிலைமை எதனால்? என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் புரிந்து இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.
அரசியல் கட்சி என்றால், மக்களிடம் ஒரு ஏமாற்று பேர்வழி கூட்டம் போல ஆகிவிட்டார்கள். யார் நல்லவன்? யார் கெட்டவன்? இதில் யாருக்கும் சர்டிபிகேட் கொடுக்க முடியாத நிலைமை, இந்த அரசியல் கட்சிகளிடம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் எல்லாருமே உத்தமர்களாக கார்ப்பரேட் ஊடக பேச்சாளர்களாக, தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் .இதை எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் சில விஷயங்கள் மக்களுக்கு உண்மையை உணர்த்தி வருகிறது. அதனால், அரசியல் கட்சிகளும், கட்சியினரும் உங்களை திருத்திக் கொள்வது நல்லது.
உங்களுக்கு கூலிக்கு மாரடைக்கும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இருக்கிற வரை எங்களுக்கு கவலை இல்லை என்று இருமாப்பில் இருந்து விடாதீர்கள். இவையெல்லாம் மக்கள் சிந்திக்க எங்களைப் போன்ற பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இது தவிர, தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியின் நிர்வாகிகள் கொடுத்த பணத்தை அந்த கட்சியினருக்கு சரியாக போய் சேரவில்லை என்று பலர் அண்ணாமலைக்கு புகார் அளித்து கொண்டிருக்கிறார்களாம்.
மேலும், தலைமையில் இருக்கின்ற கேசவன் விநாயகம் மற்றும் சிலர் டெல்லி தலைமை அலுவலகத்தில் இருந்து கொடுக்கின்ற கட்சி பணத்தை பங்கு போட்டுக் கொள்கிறார்களாம். இப்படி எல்லாம் புகார்கள் கட்சியினரிடமிருந்து அண்ணாமலைக்கு வருவதாக தகவல். இந்த கட்சி தமிழ்நாட்டில் உழைத்தால் ஆட்சியைப் பிடிக்க முடியும் .அதற்கு தகுதியான நிர்வாகிகள் தேவை. தகுதியான நிர்வாகிகள் இல்லாமல், எதையும் செயல்படுத்த முடியாது . எனவே பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை இது எல்லாம் சரி செய்தால்தான், இந்த கட்சியை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல முடியும் .