ஜூன் 13, 2024 • Makkal Adhikaram
அரசியல் கட்சிகள் செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளை நிதி ஆதாரம் இல்லாமல் கொடுத்தால், அது மக்களை ஏமாற்றும் வேலை . அரசியல் கட்சியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ?
தேர்தல் என்றால் என்ன? என்று தெரியாத அப்பாவி ஏழை எளிய மக்களிடம் பணமும், செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளும், நிதியாதாரம் இல்லாமல் வாக்குறுதிகளும் கொடுத்து, மக்களின் வாக்குரிமையை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி இருக்கிறது.
அது என்ன என்றால் ,ஆண்டுக்கு ஒரு லட்சம் மற்றும் வேலை வாய்ப்பு, இப்படி செய்ய முடியாத திட்டங்கள் சொல்லி, மக்களிடம் ஓட்டுக்களை வாங்கி இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எப்படி மக்களுக்கு செய்வீர்கள் என்பதை அப்போதே இவர்களுடைய அறிவிப்புகளை அதன் நிதி ஆதாரம் பற்றி கேள்வி கேட்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியும், இலவச அறிவிப்புகளை சொல்லி மக்களை ஏமாற்றி முட்டாளாக்கிக் கொண்டு வருகிறது. இதனால், அதை நம்பி வாக்களித்து ஏமாந்த மக்கள் புலம்பி எவ்வளவு வேதனைப்படுகிறார்கள்? என்பதை இச்செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
மேலும், அரசியல் என்பது அரசியல் கட்சிகளுக்கு ,மக்களை ஏமாற்றும் வேலை அல்ல. அது எப்படியும் பேசும் திறமையும் அல்ல. அதனால், தேர்தல் ஆணையம் இப் பிரச்சனையை உச்ச நீதிமன்றத்தில் கொண்டு சென்று கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் விதிமுறை சட்டங்களை கடுமையாக்கப்பட வேண்டும்.
மேலும் இலவச அறிவிப்புகளை மற்றும் செய்ய முடியாத திட்டங்களை வாக்காளர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது 140 கோடி மக்களை அரசியல் கட்சிகள் தேர்தல் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை அல்ல.
இது பற்றி மக்கள் அதிகாரம் நாட்டு மக்களின் நலனில் பலமுறை இணையதளத்திலும், பத்திரிகைகளிலும், கட்டுரையாக வெளியிட்டுள்ளேன். ஆனால், தேர்தல் ஆணையம் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பது நாட்டு மக்களின் நலனுக்கு எதிரானது . மேலும் அப்படிப்பட்ட தேர்தல் நடத்துவது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை தான் தேர்தல் ஆணையத்தின் வேலையா ?