கள்ளச்சாராய சாவுகளில் அரசியல் ஆதாயம் தேடுவது எதிர்க்கட்சிகளின் விளம்பர அரசியலால் மக்களுக்கு எந்த நன்மையும் தராது.

அரசியல் இந்தியா உணவு செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 22, 2024 • Makkal Adhikaram

திமுக அரசு மதுக்கடைகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள். மக்களின் பிரச்சனை ஒரு பக்கம் கள்ளச்சாராயம், மற்றொரு பக்கம் குடும்பப் பெண்கள் உழைக்கின்ற பணத்தை கொண்டு போய் மதுக்கடைகளில் கொடுத்து விடுகிறார்கள் என்று ஏழை எளிய நடுத்தர பெண்கள் மனவேதனையுடன் குமுறல் வெளிப்படுத்துகிறார்கள்.

மேலும் தமிழக அரசு மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் . மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் எஸ் பி ,கலெக்டர் மற்றும் மதுவிலக்கு எஸ்பி, மதுவிலக்கு தொடர்பான உயர் அதிகாரிகள் முதல் கீழ் மட்ட  அதிகாரிகள் வரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது . நிரந்தர தீர்வாகாது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் அரசுக்கு எமது முக்கிய தகவல் .மேலும்,

மக்களிடம் அரசியல் ஆதாயம் தேட  கலாச்சாராயா சாவுகளில் அரசியல் செய்வது, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கேவலமான அரசியல் ஆகிவிட்டது. 

 இப்படிப்பட்ட அரசியலை அரசியல் தெரியாத மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருப்பார்கள் என்று அரசியல்வாதிகள் யாரும் நினைக்கக் கூடாது. .தமிழக முதல்வர் ஸ்டாலின் சரியான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த பிரச்சனை வைத்து அரசியல் செய்வதை விட ,அரசியல் கட்சிகள் தங்களால் இயன்ற உதவியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பதும், கல்வி செலவுக்கு நிதி உதவி செய்வதும் வரவேற்க வேண்டிய ஒன்று.

ஆனால், அதை விட்டு விட்டு கார்ப்பரேட் கம்பெனி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் உங்கள் முகத்தை காட்டி விளம்பரப்படுத்திக் கொண்டு கோஷம் போட்டுக் கொண்டு இருப்பதால்,போலி ஊடக அரசியல் வியாபாரத்தால், எந்த பயனும் இல்லை. அதற்கு பதிலாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுங்கள். அது தேவையானது. நாட்டில் இது போன்ற கள்ளச்சாராய ஒழிப்பிற்கு அரசியல் கட்சிகளின் முக்கிய பங்கு தேவை .

ஆனால், போலி விளம்பரத்திற்காக பிஜேபி கட்சியினர்,அன்புமணி ராமதாஸ், பேட்டியளிப்பது, அரசியல் அமைப்புகள் மீதும், அரசியல்வாதிகள் மீதும், ஏற்கனவே மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். அதை அதிகப்படுத்த வேண்டாம் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், திமுக  கட்சிக்காரர்கள் செய்த தவறு என்று தெரிந்தும், கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இனி அதுபோன்ற நடவடிக்கை இல்லாமல், இதே அரசியல் கட்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் பார்த்துக் கொள்ள முடியாதா? எனவே ,விளம்பர அரசியல் மக்களுக்கு எந்த நன்மையும் தராது என்பதை அரசியல் கட்சிகளுக்கு புரிந்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *