
மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும்.

மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று சொல்லிக் கொள்கிறார்கள்?
மேலும்,ஒரு செய்தி என்றால்! ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வேண்டிய கட்டாயம் அதில் இருக்கிறது. அது பற்றி எந்த விளக்கமும், இல்லாமலே, வியாபார நோக்கத்தில் செயல்பட்டு வரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் மற்றும் அதன் இணையதளங்கள், அதற்கும் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருவது எந்த விதத்திலும் நியாயம்?

மேலும் ,பிஜேபி அரசின் சில விஷயங்கள் ஏற்றுக் கொள்வது போல் உள்ளது. சில விஷயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைமையில் தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் செய்தித் துறை மிக முக்கியத்துவமாக கார்ப்பரேட் மையப்படுத்தி சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும், பத்திரிகையின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய சமூக மாற்றத்திற்கும் எதிரான ஒன்று. மேலும், இதில்

அடித்தட்டு மக்களுக்கு ,நடுத்தர மக்களுக்கு, சேவை செய்வது போல் காட்டிக் கொள்கிறார்களே ஒழிய, உண்மை நிலை கார்ப்பரேட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மேலும்,நானும் இது பற்றி பல செய்திகள், மத்திய அரசின் செய்தித்துறை யின் ( press information bureau) கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறேன். அதை மத்திய செய்தி தகவல் தொடர்பு துறை அமைச்சகம், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும்,தற்போது இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் பெற போடப்பட்டுள்ள அந்த சட்டமும் எப்படி இருக்கிறது ?என்றால், கார்ப்பரேட்டை மையப்படுத்தி தான் ,அந்த சட்டத்தை போட்டு இருக்கிறார்கள். அதாவது,

நடுத்தர மக்கள் நடத்தக்கூடிய பத்திரிகைகளுக்கு ,இவர்கள் எந்த விதமான சலுகை, விளம்பரங்களும் அனுபவிக்க முடியாத அளவில் தான் மத்திய அரசின் பி.ஐ.பி (press information bureau )இருக்கிறது.

இது பற்றி ஜனாதிபதிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் ,கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சர்குலேஷன் என்றால் !பத்தாயிரம் பிரதிகள் அடிக்க வேண்டும். அதில் எவ்வளவு விற்பனை? எவ்வளவு குப்பைக்கு செல்கிறது? எது சர்குலேஷன் ?என்று தெரியாமல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை இயங்கி வருகிறது.

மேலும், செய்தியின் தரம் தெரியாமலே செய்தித் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். பத்திரிகையின் இணையதளத்தில் சர்குலேஷன் எப்படி என்றால் ?ஏ.பி.சி என்று மூன்று பிரிவாக பிரித்து இருக்கிறார்கள்
அதில் ஏ பிரிவு 50 லட்சத்தில் இருந்து அதற்கு மேல் உள்ள பார்வையாளர்கள். அடுத்தது பி பிரிவு பார்வையாளர்கள், 20 லட்சத்திலிருந்து அதற்கு மேல் உள்ள பார்வையாளர்கள், சி பிரிவு பார்வையாளர்கள் ,2.5 லட்சத்திலிருந்து அதற்கு மேல் உள்ள பார்வையாளர்கள் இவை அத்தனையும் ஒரு மாதத்திற்கு இணையதள பார்வையாளர்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் சட்டம் வகுத்திருக்கிறார்கள்.

ஆனால், செய்தி எப்படிப்பட்ட செய்தி போட வேண்டும்? அதற்கான தகுதி? வரை முறைகள் என்ன ?அது மக்களுக்கானதா ?இல்லை ஆட்சியாளர்களுக்கா? இல்லை அரசியல் கட்சிகளுக்கா? எதுக்கு என்று கூட தெரியாமல், சர்குலேஷன் சட்டம் ? மற்றும் பார்வையாளர்கள் சட்டம் ?

இவை அத்தனையுமே மொட்டை கடிதாசு சட்டமாகத் தான் இருக்கிறது. வரைமுறைப்படுத்தாத சட்டங்கள்! எந்த நோக்கத்திற்கு? பத்திரிக்கை இருக்க வேண்டும் ?எதற்கு பத்திரிக்கை, இருக்க வேண்டும்? செய்திகள் எப்படி இருக்க வேண்டும்? அதன் தரம் என்ன? அதன் நோக்கம் என்ன? அதற்கு முக்கியத்துவம் இல்லாமல், இந்த மொட்டை கடிதாசு சர்குலேஷனை வைத்து, மத்திய மாநில அரசின் செய்தித்துறை இன்று வரை, சமூக நலன் பத்திரிகைகளை ஏமாற்றி வருகிறது.

மேலும்,பத்திரிக்கை என்றால் !எதற்கு பத்திரிக்கை? குப்பை கூலங் செய்திகள்! எந்த செய்தி போட்டாலும், சினிமா செய்தி போட்டாலும், கேளிக்கை செய்தி போட்டாலும், மக்களுக்கு தேவையில்லாத செய்திகளை திணித்தாலும், அதுவும் பத்திரிக்கை தான் .அதுவும் சர்குலேஷனில் கணக்கு தான். அதாவது கள்ளக்காதல் செய்திகள், காதலிக்கும் செய்திகள், கற்பழிப்பு செய்திகள், நாலு அரசு செய்தி போட்டு விட்டால் மீதி எத்தனை வேண்டுமானாலும் மக்களுக்கு தேவையற்ற செய்திகளை அந்த பத்திரிகைகள் திணித்தாலும் அது பத்திரிக்கை. இதுதான் செய்தித் துறையின் சர்குலேஷன் சட்டம்.

இது தவிர அரசியல் கட்சியினரை விளம்பரப்படுத்தும் செய்திகள்,காதல் கதைகளை எல்லாம் சொல்வதற்கு பத்திரிகைகள் இதுவும் பத்திரிக்கை என்று சர்குலேஷனில் கொண்டு வந்து விடுவார்கள்.
மேலும் ,இதை ஜனாதிபதி மூர்மூ தொடர்ந்து 50 ஆண்டுகால பத்திரிக்கை துறையின் மோசடி சட்டத்தை தங்களுடைய கவனத்திற்கு, இதைக் கொண்டு வருகிறோம். அதே போல் பல பத்திரிகையாளர்கள் ,சிறிய பத்திரிகை நடத்துபவர்கள், இனி அனைவரும் இப் பிரச்சனையை புகாராக ஜனாதிபதி முன்பு அவர்களின்கொண்டு செல்ல வேண்டும் .

அப்போது தான் சரியான நடவடிக்கை மத்திய மாநில அரசின் செய்தி துறையின் கவனத்திற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்கள். அது மட்டுமல்ல, ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் உண்மை என்னவென்றால்?கார்ப்பரேட்டுக்கு சாதகமான சட்டங்கள்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்று வாயிலே, பேசிவிட்டு போவதற்கு அல்ல?

அதற்கு எதற்கு இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் ( RNI) கொடுக்கிறார்கள்? ஏன் கொடுக்கிறார்கள்? கார்ப்பரேட் பத்திரிகைகளையே வைத்து இவர்கள் பத்திரிக்கை துறையை நடத்தக்கூடாது? மேலும்,சாமானிய மக்களுக்கும் ,அடித்தட்டு மக்களுக்கும், உண்மை எதுவென்று புரியவைக்கிறது? இந்த சமூக நலன் பத்திரிகைகள் தான் .

மேலும்,வியாபார நோக்கம் இல்லாமல், எங்களுடைய பத்திரிகைகள் இருக்கும் போது ,அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அரசின் முக்கிய கடமை .அப்படி இருக்கும் பட்சத்தில், இதை இவர்கள் தவிர்ப்பதன் நோக்கம் என்ன? இது பற்றி விரிவான ஆய்வை ஜனாதிபதி முர்மு மேற்கொள்ள எங்களது தாழ்மையான முக்கிய கோரிக்கை.
