ஜூலை 19, 2024 • Makkal Adhikaram
பத்திரிக்கை துறையில் உள்ள சட்டங்கள் காலத்திற்கு ஏற்ற மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் தெரிவிக்கும் பிரச்சனை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புரியும் போது இவர்களுக்கு ஏன் புரியவில்லை? அது கார்ப்பரேட்டுகளின் கமிஷனா? மக்களின் வரி பணம் அவர்களுக்கு மட்டுமே சொந்தமா? இப்பிரச்சனை நீதிமன்றம் வரை செல்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் எதற்கு ? பத்திரிக்கை துறையில் நீதி இல்லை என்று போராடும்போது, மக்களின் நிலைமை என்ன ?
நாட்டில் மத்தியில ஆளுகின்ற பிஜேபி ஆட்சியும், மாநிலத்தில் ஆளுகின்ற திமுக ஆட்சியும் அடிதட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் என்ன நலன்களை செய்திருக்கிறார்கள் ? இவர்களை ஓட்டு வங்கியாக தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் தெரியாது. படிப்பறிவு இல்லை. போதைக்கு அடிமையானவர்கள். இது பெரும்பான்மை மக்களின் நிலை .
ஆனால், இப்படி அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமும் ஓரளவுக்கு பட்டப்படிப்பு படித்தாலும் கூட, அரசு வேலை வாய்ப்பு, படிப்பு கேற்ற வேலை, ,ஊதியம், எல்லாமே கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இந்த மக்களுக்கு சிந்திக்கத் தெரியாது. கல்வியறிவு பெற்றுவார்கள் கூட ஜாதி அரசியலில் கலந்து, அங்கே தங்களுக்கு ஏதாவது ஒரு ஆதரவு கிடைக்குமா? என்று தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லா அரசியல் கட்சியும் இவர்களுக்கு வாயிலே செய்துவிட்டு, போவது தான் அரசியல் கட்சிகளின் அரசியல். மேலும்,இவர்களை சுரண்டுவதற்கு தான் அரசியலே தவிர, இவர்கள் நலனுக்காக அரசியல் இல்லை .இந்த மக்களும் இவர்கள் சொல்வதை நம்பி தொடர்ந்து ஏமாறுகிறார்கள்.மாறாக மக்களின் வருமானம் பெருக வில்லை. ஆனால், ஆட்சியாளர்களின் வருமானம் பல கோடிகளில் பெருகி விடுகிறது.அதேபோல் அரசியல் கட்சியினரின் வருமானம் கோடிகளில் பெருகி விடுகிறது. ஆனால், மக்களின் வருமானம் மட்டும் கீழே இறங்கி கொண்டிருக்கிறது. அப்படி என்றால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மைதானே!
மேலும், இவர்கள் சொல்லும் பொய்கள் அத்தனையும் கார்ப்பரேட் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளிலும் வெளியிட்டு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாக்கு வங்கியை பணம் கொடுத்து வாங்கும் இவர்களுடைய கட்சி புரோக்கர்கள் செய்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்களுக்கு கொடுக்கின்ற ஆயிரம், 500 ,2000 இதை வைத்து தான் அவர்கள் திருப்தி அடைந்து கொள்ள வேண்டும் .மேலும், இந்த மக்களின் வாரிசுகளுக்கு அவர்களுடைய உழைப்பால் கல்வியை கொடுத்து வருகிறார்கள்.இன்று அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது,அப்படி என்றால் இவர்களால் தரமான கல்வியை கொடுக்க முடியவில்லையா? எத்தனை ஆட்சியாளர்களின் மற்றும் அரசியல் கட்சியினரின் மற்றும் அரசு அதிகாரிகளின் தவிர, பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்?
மேலும்,இப்படி நடுத்தர வர்க்கமும் அடித்தட்டு மக்களும் கஷ்டப்பட்டு,படித்தும் கூட ,அவர்களுக்கு எந்த முன்னேற்றமும் இருக்காது. ஆனால், பத்திரிகை, தொலைக்காட்சி கார்ப்பரேட்டுகள் மட்டும், இவர்களுக்காக அரசாங்கம் எல்லா நன்மையும் செய்வதுபோல் ,ஒரு பிம்பத்தை காட்டிக் கொண்டிருக்கும். அதுதான் இன்று வரை தமிழ்நாட்டு அரசியல். அது மட்டுமல்ல, இந்த மக்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை.
இதே நிலைமைதான் நடுத்தர பக்கங்கள் நடத்துகின்ற பத்திரிகைகளுக்கும், உண்மையாக உழைப்பவர்களுக்கும் மத்திய அரசும், மாநில அரசும் இதுவரை எந்த ஒரு வருமானத்தையும் கொடுக்காமல் மக்களின் வரி பணம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சொந்தம் என்று பத்திரிக்கை சட்டங்களை சொல்லி வருகிறது. இது தவறு. காலத்திற்கு ஏற்ப பத்திரிக்கையின் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை 5 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வருகிறது .
மேலும், பத்திரிக்கை துறை அச்சு வடிவத்தில் இருந்து அது இணையதளத்திற்கு சென்று விட்டது .அதனால், அதற்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்ற வேண்டும். அதற்கு தகுதியான பத்திரிகைகள் எது? என்பதை அரசியல் தலையீடு இன்றி செய்தித் துறையில் தீர்மானிக்க வேண்டும் . இதை மத்திய, மாநில அரசு செய்வார்களா? ஒரு காலம் செய்ய மாட்டார்கள். காரணம் இவர்களுடைய சுயநலத்திற்கு கார்ப்பரேட் ஊடகங்கள் இருந்து வருகிறது .தவிர ஆட்சியாளர்களிடம் ,பொது நலம் இல்லை .மக்கள் விழித்துக் கொண்டால் வருங்கால சந்ததிகள் பிழைத்துக் கொள்வார்கள்.
மேலும், இப் பிரச்சனையில் சமூக நீதி கிடைக்காததால் சமூக நலன் பத்திரிகைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பத்திரிகைகளுக்கு இந்த நிலைமை என்றால், மக்களின் நிலைமை என்ன? இதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?