வார ,மாத இதழ் பத்திரிகைகளுக்கும் அக்ரடேஷன் கார்டு ,பஸ் பாஸ், கொடுக்கப் போவதாக செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் சொன்னது நடந்துவிட்டால்! பத்திரிக்கை துறையில் திமுக ஆட்சியில் இது ஒரு வரலாற்று சகாப்தம் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 31, 2024 • Makkal Adhikaram

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்காக, பத்திரிக்கை துறையின் சமூக நீதிக்காக போராடும் பத்திரிகை என்பது பத்திரிக்கை துறை வட்டாரத்தில் தெரிந்த ஒன்றுதான் .எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் ,செய்தித் துறை இயக்குனர் வைத்தியநாதன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

ஏனென்றால் பத்திரிக்கை துறை ஒரு கடல் அந்த துறையில் நீந்தி கரையேறுவது சாமானிய பத்திரிகைகளுக்கு மிகப்பெரிய சவால். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் இந்த பத்திரிகைகள் தகுதியானவர்கள் கூட நடத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேதனைகள் வெளியில் சொல்ல முடியாது. இது ஒரு போராட்டமான வாழ்க்கை. ஒவ்வொரு மாதமும் ,அச்சடிக்கும் போது அது ஒரு பிரசவ வேதனை தான். 

ஆனால், இதில் இறங்கி விட்டோம். வேறு வேலைக்கும் போக முடியாது. 25 ஆண்டு காலம் நிருபராக பணியாற்றி, 10 ஆண்டு காலம் இந்த பத்திரிகை நடத்தி அதனுடன் போராடுவது எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய சுமை தான்.இதை இயக்குனரிடம் சொன்ன போது, அவருக்கும் இந்த உண்மை புரிந்தது .அதை ஏற்றுக் கொண்டார். 

மேலும்,செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் சொன்ன தகவல், ஏதோ மூச்சு வந்தது போல இருந்தது. அப்போதும் கேட்டேன், இல்ல சார் உங்களுக்காக நானே அக்ரடேசன் கமிட்டியில் அழுத்தம் கொடுத்து பேசி இருக்கிறேன் . சிறிய பத்திரிகைகளை எல்லாம் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அது உண்மையிலேயே ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயம். பத்திரிக்கை துறையில் மக்களுக்கான பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் அரசாங்கத்திடம் கொண்டு செல்ல முடியும். பாதிக்கப்படும் மக்கள் வழி தெரியாமல் நிற்கும் போது, அதன் உண்மை நிலவரம் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தெரிவிக்க முடியும். 

இதை வியாபார நிறுவன பத்திரிகைகள் ஒரு சார்பாக நியாயப்படுத்துகிறார்கள்.அதனால் தான் இன்று பத்திரிகையின் நடுநிலை என்பது கேள்விக்குறியாகி, மக்களே புறக்கணிக்கும் அளவுக்கு பத்திரிக்கை துறை சென்றுள்ளது.  மேலும்,பத்திரிக்கை துறை சுய பரிசோதனை செய்யக்கூடிய அளவுக்கு வந்துவிட்டது .இங்கே பெரிய பத்திரிக்கை? சிறிய பத்திரிக்கை? பேதம் எல்லாம் கலைந்து எது தகுதியான பத்திரிக்கை? அந்த பத்திரிகைகளை எல்லாம் வரைமுறைப்படுத்த வேண்டும் . 

வரைமுறை இல்லாமல், வந்த வரைக்கும் வாட்ஸ் அப்பில், பேஸ்புக்கில் நடத்துபவர்கள் கூட பத்திரிகை என்கிறார்கள். மேலும், பத்திரிக்கை என்பது பிழைப்பு நடத்த இது ஒரு வேலை என்றும், அதனால், முடிந்த வரைக்கும் எந்தெந்த குறுக்கு வழிகளில் பத்திரிக்கை நடத்தலாம்? எதை போட்டாலும் செய்திதான் என்று பத்திரிகை காட்டுபவர்களும், ஐடி கார்டு போட்டு விற்பவர்களும்,அக்ரடேசன்கார்டு கொடுத்தால்  நாங்களும் பத்திரிகை தான் என்று முதலில் முந்திக் கொண்டு வந்து நிற்பவர்கள் அவர்களாகத் தான் இருப்பார்கள் . 

அதனால், செய்தி துறை இதை எல்லாம் ஒரு வரைமுறை படித்தி, தகுதியான பத்திரிகைகளுக்கு இந்த சலுகை விளம்பரங்கள் கொடுத்தால், அது சமூகத்திற்கு செய்யக்கூடிய நன்மை. ஆனால், பத்திரிக்கைக்கு தகுதி இல்லாதவர்கள் ,அந்த பத்திரிகையின் தரம், அது சமூகத்திற்கு தீமையும், பாதிப்பும் இருப்பதோடு அதனால் ,எந்த பயனும் இருக்காது. மேலும், அது புல்லுக்கு இறைத்த நீராக தான் இருக்கும். அதனால், செய்தித்துறை இயக்குனர் இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த துறைக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை . மேலும், 

 ஒருவேளை இயக்குனர் சொன்னது நடந்துவிட்டால் ,பத்திரிக்கை துறையில் திமுக ஆட்சியில் இது ஒரு வரலாற்று சகாப்தம் .தவிர, இந்த பத்திரிகை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவருக்கும் போய் சேர முயற்சி மேற்கொண்டு உள்ளேன். தவிர உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும் இது பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க உள்ளேன். எங்களுக்கான உரிமைகள் பத்திரிக்கை துறையில் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் .மேலும் ,

மாநில அரசாவது எங்களுடைய கோரிக்கைகளில் இதை செய்கிறோம் என்ற உத்தரவாதம் இயக்குனர் தந்திருக்கிறார் . ஆனால், மத்திய அரசு இதைப் பற்றி ஒன்றுமே வாய் திறக்கவில்லை. அமைச்சர் எல். முருகனின் உதவியாளருக்கு போன் செய்து அப்பாயின்மென்ட் கேட்டால் சரியான பதில் இல்லை. இருப்பினும், இந்த செய்தியின் உண்மைகள் ஆங்கிலத்தில் மத்திய செய்தி துறை அமைச்சருக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்ன பதில் வரும்? என்று தெரியவில்லை. மேலும் ,மத்திய அரசில் உள்ள செய்தி துறை உயர் அதிகாரிகள் இது பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல கேட்டுக்கொள்கிறேன். மேலும், மத்திய அரசுதான் இதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் .ஆனால், எந்த வழியும் காட்டாமல் இருப்பது பத்திரிக்கை துறைக்கும் சமூகத்தின் நலனுக்கும் எதிரான ஒன்று.

இதை புரிந்து காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் தான் சமூக நீதி. இதை மத்திய அரசு எங்களுடைய உரிமையை மறுக்கும் போது ,இப்ப பிரச்சனையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தயங்க மாட்டோம் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *