ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram
புதுவை முதலமைச்சர் ரங்கசாமிமற்றும் யோகி ஆதித்யநாத் இவரும் இந்தியாவிற்கு ஒரு முன் மாதிரியான முதலமைச்சர்கள்.இவர்கள் நேரடியாக ஒரு முதலமைச்சர் என்ற பந்தா இல்லாமல் மக்களை சந்திக்க கூடிய இந்தியாவுக்கு முன் மாதிரி முதலமைச்சர்கள். இன்றைய காலகட்டத்தில் இந்த இரு முதலமைச்சர்களைத் தவிர, வேறு ஒருவரும் இல்லை.
மக்கள் பணிக்காக, இவர்களுடைய பணி இன்றைய காலகட்டத்தில் இப்படியும் முதலமைச்சரா? என்ற கேள்வியில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர்கள். இந்த இரு மாநிலமும் கொடுத்து வைத்த மக்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால்! ஒரு முதலமைச்சரை எளிமையாக சென்று பந்தா இல்லாமல் பார்க்கக்கூடிய முதலமைச்சர்கள் இவர்களாகத்தான் இருக்கிறார்கள் .
மீதியெல்லாம் பந்தா காட்டி கொண்டு, கார்ப்பரேட்பத்திரிகை, தொலைக்காட்சி ,ஊடகங்களில் இவர்களுடைய போட்டோவை விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்வதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தமே இருக்காது. அந்த வகையில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் 10,000 வழங்கப்பட்டதை தற்போது 15 ஆயிரம் ஆக உயர்த்தி உள்ளார்.
அது மட்டுமல்ல, பத்திரிகையாளர்களுக்கு விரைவில் வீட்டுமனை பட்டா, மடிக்கணினி (laptop) போன்றவற்றை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால், இதே தமிழ்நாட்டில் சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் எங்களுடைய கோரிக்கைகளை இயக்குனருக்கும், செய்தித் துறை செயலாளருக்கும், அமைச்சர்களுக்கும் தெரிவித்திருந்தோம் . அதையெல்லாம் காதில் வாங்கிறார்களா? இல்லையா? என்று கூட தெரியவில்லை.
இப்படிப்பட்ட ஒரு நிர்வாகத்தை திமுக அரசு பத்திரிகையாளர்களுக்கு செய்து கொண்டிருக்கிறது. மேலும், இது பற்றி (Legal notice)நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது .அப்படி இருந்தும் பத்திரிகை என்றால் அது கார்ப்பரேட்டுகள் தான் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை நீதிமன்றம் தான் தலையிட்டு, இதற்கு நடுநிலையான நீதியை வழங்கும் என்ற நம்பிக்கையில் நீதி துறையை சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நம்பியிருக்கிறோம் .சமூகநலன் பத்திரிக்கையாளர்களுக்கே இந்த நிலைமை என்றால்! மக்களின் நிலைமை என்ன? தமிழக மக்கள் இதை பற்றி சிந்திப்பார்களா ?