ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram
மக்கள் நலனை நேசிக்கக் கூடிய பதவி தான் முதல்வர் பதவி .இங்கே ஜாதி எண்ணிக்கையில் மக்கள் தொகை இருந்தும், இவர்களுக்கு தகுதி என்பது துளி கூட கிடையாது.
அது அன்புமணி ராமதாஸ் ஆக இருந்தாலும் சரி, திருமாவளவனாக இருந்தாலும் சரி ,இவர்கள் சண்டைக்கு தான் போட்டுக் கொள்வார்களே ஒழிய, இரண்டு சமூகங்களுக்கும் நல்லது செய்ய மாட்டார்கள் .எவன் ஒருவன் ஜாதி, ஜாதி என்று கத்துகிறானோ, அவன் அந்த ஜாதிக்கு நல்லது செய்ய மாட்டான். ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துவான். அல்லது ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பான் . இது என் அனுபவ உண்மை .
மேலும் ,இதுவரை இவர்களுடைய கட்சிக்காரர்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்? என்பதை முதலில் பட்டியல் போட்டுவிட்டு, பிறகு இவர்கள் இந்த பதவிக்கான தகுதிகளை பற்றி பேசலாம். தவிர,இருவரும் இந்த சமுதாயத்தை சுரண்டி சாப்பிட்டு விடுவார்கள். சமுதாயத்தை சுரண்டி சாப்பிடுவதும், திறமைதான் என்பார்கள் இவர்களுடைய கட்சியினர். திறமை இல்லாதவர்கள் சுரண்டி சாப்பிட முடியாது. இந்த நிலைமையில் இவர்கள் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது மிகப்பெரிய தவறு.
( இவரும் ஒரு வன்னியர் தான். இவரை போல் அன்புமணியோ அல்லது ராமதாஸ் ஆல் வர முடியுமா?இவர் இந்தியாவுக்கே முன் உதாரணமாக செயல்படக்கூடிய ஒரு முதல்வர் .)
மேலும், கருணாநிதி காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் கூப்பிட்டு கேட்டார்கள். வன்னிய சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும்? என்று அப்போதெல்லாம் விட்டு ,விட்டு இப்ப வந்து 10..5/ 20..5 யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ? இது ஒரு புறம், ஸ்டாலின் வன்னியர் சமுதாயத்திற்கு செய்யக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார். அதனால் தான் அவர்களுடைய சொந்தக்காரர்களை வைத்து வழக்கு தொடர முடிவு செய்து, இதை கிடப்பில் போட வைத்தார்கள்.
மேலும், இந்த இட ஒதுக்கீடு அரசியலில் தலித் சமுதாயத்திற்கு ரிசர்வேஷன் ஒதுக்கீடு, இதையெல்லாம் தேர்தல் களத்தில் அறவே எடுக்க வேண்டிய ஒன்று. இங்கே ஜாதியை வைத்து பிஜேபியில் மந்திரி பதவி கொடுக்கப்பட்ட எல்.முருகன் இதுவரை இந்த பத்திரிக்கை துறையில் இவர் என்ன செய்திருக்கிறார்? எத்தனை செய்திகள் மக்கள் அதிகார பத்திரிகை மற்றும் இணையதளத்தில், பத்திரிகை துறை பற்றிய செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம்.இதையெல்லாம் மத்திய, மாநில அமைச்சர்கள் அலட்சியப்படுத்திக் கொண்டிருப்பதால் தான் பத்திரிகை சம்பந்தமான விஷயங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தவிர, எல். முருகனை பார்ப்பதற்கு அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம். கொடுக்கவில்லை. அப்படி என்றால் இவர் என்ன தலித் மற்றும் அருந்ததி சமூகத்திற்கு மந்திரியா? அல்லது மத்திய செய்தி துறை மந்திரியா? இவர் எப்படி செயல்படுகிறார் ?என்பதை மோடி இதுவரை, இவரை கண்காணித்தது உண்டா?இன்னும் கேட்டால், இவர் சென்னை வந்தாலே, இவர் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் சுற்றி வளைத்திருப்பார்களாம் . இதுவும் பிஜேபி கட்சியினர் சொல்லும் தகவல் தான். அதனால், ஜாதிகளை வைத்து பதவியை அடையாளப்படுத்தாதீர்கள். தகுதியை, திறமையை, செயல்பாட்டை வைத்து அடையாளப்படுத்துங்கள் . எந்த ஜாதியாக இருந்தாலும், அவருடைய செயல்பாடு ,தகுதி, திறமை இதை வைத்து தான் பதவி இருக்க வேண்டுமே ஒழிய, ஜாதியை வைத்து பதவியை அடையாளப்படுத்தினால், அது ஜாதிக்கும் பயனில்லை. மக்களுக்கும் பயனில்லை .
இந்த ஜாதி கட்சிகளிடம் மாட்டிக் கொண்டு, ஒவ்வொரு ஜாதியும், படும் சித்திரவதையே போதாதா ?இன்னும் இவர்களுக்கு முதல்வர் பதவி கொடுத்தால், எந்த ஜாதியும் தாங்காது.அனைத்து ஜாதியையும் அரவணைத்து செல்லக்கூடிய தலைவர்கள் தேவையே தவிர, திருமாவளவன் சொல்வது போன்ற தலித் முதல்வராக்கு ,இவரை முதல்வராக்கு ,அவரை முதல்வராக்கு அதைவிட முட்டாள்தனமான வேலை எதுவுமே இருக்காது.
இதுவரை திருமாவளவன் செய்தது என்ன? பட்டியல் போடுங்க பார்ப்போம். இவருடைய ஆரம்ப கால சொத்து என்ன? இப்போது இவருடைய சொத்து மதிப்பு என்ன? இதை அந்த அந்த சமுதாயம் பட்டியல் போட்டு, கணக்கு போட்டு நீங்கள் பேசுங்கள். அதுக்கப்புறம் இவர்களை எல்லாம் முதல்வர் பதவிக்கு தகுதியா? இல்லையா? என்பதை தலித் சமுதாயமும் ,வன்னியர் சமுதாயமும் யோசிக்கலாம்.மேலும்,
தகுதி இல்லாத ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து, தமிழ்நாட்டில் வீணடித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு, மக்கள் அதிகாரம் சார்பில் எங்களுடைய கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். அதாவது இவருக்கு எந்த அடிப்படையில் பதவி கொடுத்தீர்கள்? என்பது எனக்கு தெரியாது .ஆனால், ஒரு சாமானிய சமூகநலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கை 5 ஆண்டுகளுக்கு மேலாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி எல்லாம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை சரி செய்ய வேண்டியது தமிழ்நாட்டில் ஒரு செய்தித் துறை மத்திய மந்திரியாக வந்த எல்.முருகனுக்கு உண்டு. ஒவ்வொரு பத்திரிகை செய்தியும், எல்.முருகனின் பி ஏ வாட்ஸ் அப்பில் இருக்கிறார் .அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அவரிடம் பலமுறை பேசி இருக்கிறேன். ஆனால், அலட்சியமாக இருக்கிறார்கள். மேலும்,
எல் முருகனைப் பற்றி என்னுடைய ( நண்பர்கள்) அதிகாரிகள் சர்க்கிள் பேசுவார்கள் .ராஜேந்திரன் நீங்களாவது வந்தா, உட்கார்ந்து எங்களுடன் பேசுவீங்க. அவரு உட்காரு முருகன் என்று சொன்னால் கூட ,வேணாம் சார் கைகட்டிக்னு நிற்பார். அப்படி இருந்த அவருடைய நிலைமை இன்று, மந்திரி பதவி வந்தவுடன் என்னவோ, ஆகாயத்தில் பறக்கிற போல இவரு கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறார்.
எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அது பிஜேபியாக இருந்தாலும் சரி ,திமுக அதிமுகவாக இருந்தாலும் சரி, மக்கள் பணிக்கு வந்த பிறகு அது என்ன? என்று விசாரிக்க வேண்டும். என்ன? என்று கேட்க வேண்டும். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு தான் உங்களுக்கு மந்திரி பதவி கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் சரி செய்யாததனால், நாங்கள் நீதிமன்றத்திற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தேவைதானா? இதற்கு பிரதமர் மோடி தான் பதில் தெரிவிக்க வேண்டும் .