நாட்டில் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்களை கட்டுப்படுத்த ஒரே வழி சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram

நாட்டில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழல்களை இதுவரை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதற்கு ஒரே வழி கிராமங்களில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, பேரூராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, நகராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு நியமனம் செய்ய வேண்டும். 

இதற்கு 10 பேர் கொண்ட குழுவில் இடம் பெறக்கூடிய சமூக ஆர்வலர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும். அந்த தகுதி நேர்மையான பத்திரிகையாளர்கள் ,ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் இப்படி கிராமம், பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றில் அவர்கள் இடம்பெற வேண்டும். இவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் சாராதவர்களாக இருக்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சார்ந்தவர்கள் இதில் இடம்பெறக்கூடாது.

மேலும், இங்கே பத்திரிகையாளர்கள் என்றால் பெரிய பத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை என்ற ஒரு கோடு தேவையில்லை .அதற்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் அளவில் இருக்க வேண்டும். மேலும், இந்த குழுக்களுக்கு மாவட்ட அளவில் ஒரு நிர்வாக குழு இருக்க வேண்டும் .அது மாநில அளவிலும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி பாருங்கள். எந்த ஒரு கிராமத்திலும் ஊழல் நடப்பது அரிதாகிவிடும். 

ஏனென்றால், இந்த பத்து பேர் பரிந்துரையின் பேரில்தான் எந்த ஒரு கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கும்,வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவர்கள் பணம் கொடுக்க பரிந்துரை செய்ய வேண்டும். அந்த வேலை தரமானது என்பதற்கு அவர்கள் சான்று அளிக்க வேண்டும்.மேலும், பொறியாளர்கள் இதில் எத்தனை சதவீதம் அந்த வேலையின் தரத்தை அவர்கள் குறிப்பிட வேண்டும். இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் இந்த அமைப்பை உருவாக்கி பாருங்கள் .

தமிழ்நாட்டின் உள்ளாட்சி நிர்வாகம் எப்படி இருக்கும்? என்பதை ஐ ஏ எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது ஒரு நல்ல திட்டம். இதை செயல்படுத்தினால் திமுக அரசுக்கும் நற்பெயர் கிடைக்கும். மேலும், இது உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழலுக்கு வைக்கப்படும் மிகப் பெரிய செக் . மேலும், மத்திய மாநில அரசின் ஆடிட்டர்களிடம் இந்த ஊழலை பற்றி கேட்டதற்கு, நாங்கள் பேப்பரை மட்டும் தான் பார்க்க முடியும். அங்கு என்ன நடந்துள்ளது? என்பதை ஆய்வு செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள்.

 பேப்பரும் போட்டோவும் வைத்து ஆடிட்டில் சரி செய்யும் ஊழல் தான் உள்ளாட்சி நிர்வாகமாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி !இதுதான். இதை சமூக ஆர்வலர்கள் நிறைவேற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு இக்கோரிக்கையை உங்களது புகார் மனுவாக அனுப்புங்கள்.

பிறகு, தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதை நிறைவேற்ற ஒரு உத்தரவு கேட்கலாம். இது தவிர, உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழலை களைவதற்கு எந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரிகளாலும் முடியாது என்பதை இச்செய்தியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 

                                                                                                                                 ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *