விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் அதிமுக, திமுகவிற்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்திருக்கிறதா ? மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை தமிழக வெற்றி கழகத்தால் கொடுக்க முடியுமா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram

 அரசியல் கட்சி குப்பைகளை அகற்றாமல் மக்களுக்கு வாழ்க்கை ஏது ? தமிழ்நாட்டில் மக்களுக்கு சேவை செய்ய அரசியல் கட்சிகள் இல்லை அவரவர் சொந்த வேலைகளை பார்த்துக் கொள்ளவும், சொத்துக்களை கோடிக்கணக்கில் சேர்த்துக் கொள்ளவும், பொது சொத்துக்களை சட்டப்படி தன தாக்கிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொள்ளவும், சமூகத்தில் தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக் கொள்ளவும், இதற்கு தான் அரசியல் கட்சிகள் இருக்கிறது.

தற்போது ஒவ்வொரு சமூகத்திலும் இந்த அரசியல் கட்சிகளை கணக்கெடுத்தால் லெட்டர் பேட் கட்சி வரை சுமார் நூற்றுக்கணக்கில் இருக்கிறது. இவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் சமூகம் சேவையா? அல்லது சமூகத்தை ஏமாற்றம் சேவையா? மேலும், இந்த போலிகள் எல்லாம் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி சமூக மக்களுக்கே தெரியாது .இந்த குப்பைகளை எல்லாம் மக்கள் அகற்ற வேண்டிய காலம் வந்துள்ளது. மேலும்,

அதாவது ஒருவன் பொறியியல் பட்டதாரி படிக்க அந்த குடும்பத்தில் எவ்வளவு பணம் செலவழித்து இருப்பார்கள்? அந்த படித்த மாணவனுடைய உழைப்பு எவ்வளவு இருக்கும்? அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு பல கனவுகளோடு இருந்திருப்பான்? அவனுக்கு எல்லாம் இன்றைய வேலை வாய்ப்பு பெரும் பத்தாயிரம் 12,000 15,000 என்றால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்? உழைப்புக்கு கூலி இல்லை. ஊரை ஏமாற்றுபவர்களுக்கு கோடிக்கணக்கில் கூலி இருக்கிறது. இந்த நிலைமை எங்களை போன்று சமூக நலன் பத்திரிகைகளுக்கும் இதே நிலைமைதான் .

இந்த ஊரை ஏமாற்றம் கூட்டங்களுக்கு நல்ல சான்றிதழ் கொடுத்துக்கொண்டு அவர்கள் தான் வருங்கால இந்தியாவின் தலையெழுத்து என்று எழுதி பாராட்டி மக்களுடைய வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் இன்று செய்தித் துறையின் சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசுகள் கொடுத்து கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் உழைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒன்றும் தெரியாத முட்டாள் கூட கட்சி என்று கொடி பிடித்துக் கொண்டு கோஷம் போட்டுக்கொண்டு அவன் வெள்ளை வேஷ்டி சட்டைகளை மாட்டிக் கொண்டு போனால், அவருக்கு பதவி கொடுத்து அவரை பெரியாளாக்கி விடுவார்கள்.

 ஆனால், படித்து பட்டம் பெற்று ,உழைத்து நேர்மையாக முன்னேற வேண்டும் என்ற மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் இதுவரை எதுவும் செய்யவில்லை. தனியார் கம்பெனிகள் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் ?என்று கூட இவர்களுக்கு தெரியாது. ஒருவன்  பொறியாளர் பட்டம் பெறுவதற்கு எவ்வளவு நேரம் அவன் உழைப்பை செலவிடுகிறான்? அரசாங்கத்தில் குப்பை பொறுக்கும் வேலைக்கு மாதம் 15 ஆயிரம் வாங்குகிறார்கள். ஆனால், பி இ படித்து முடித்த ஒரு பொறியியல் பட்டதாரிகளுக்கு சம்பளம் என்ன தெரியுமா? 12000, 15000 ஒரு குப்பை பொறுக்கிறவனை விட படித்து முடித்த பொறியல் பட்டதாரி தமிழ்நாட்டில் கேவலமாகிவிட்டனாவா? கல்விக்கு முக்கியத்துவம் இல்லை. கல்வியாளர்களுக்கும் முக்கியத்துவம் இல்லை. அரசியல் ரவுடிகளுக்கும், அடாவடி பேர்வழிகளுக்கும் இருக்கின்ற முக்கியத்துவம் கல்வியாளர்களுக்கு இல்லை. இருக்காது.

ஏனென்றால், ஊழல் அரசாங்கத்திலும், ஊழல் ஆட்சியாளர்களாலும் தகுதியானவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் இருக்கும் ?அங்கே நீதி செத்துப் போகும் .அநீதி வாழ்ந்து கொண்டிருக்கும் இதுதான் அவர்கள் ஆட்சியின் சாராம்ச.ம் இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எப்படி சட்டத்தால் அவர்களை ஒடுக்கலாம்? பொய் வழக்கு போடலாம்? கிரிமினலாக சித்தரிக்கலாம்? இவ்வளவு முயற்சிகளை எடுப்பார்கள்.மேலும்,

50 ஆண்டு காலத்தில் அதிமுக, திமுக அரசியல் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதாரம் உயரவில்லை. அதற்கு மாறாக இவர்களின் பொருளாதாரம்தான் உயர்ந்துள்ளது.இதைப் பற்றி எந்த பத்திரிகை ,தொலைக்காட்சியாவது எப்பவாவது ஒரு செய்தியாவது அதைப்பற்றி பேசி இருப்பார்களா?

 மக்கள் பிரச்சனைகள் என்ன? என்பது பற்றி எந்த பத்திரிகை, தொலைக்காட்சி என்ன சொல்லி இருக்கிறார்கள்? அதற்கு என்ன தீர்வு அரசாங்கம் எடுத்திருக்கிறது? உண்மையை எழுதும் போது அதை அலட்சியப்படுத்தி விட்டால், பொய்கள் தான் அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது என்பதை இங்கே சுட்டிக்காட்ட முடியும். இதை எல்லாம் சரி செய்யாமல், எந்த அரசியல் கட்சிகளாலும், தமிழ்நாட்டில் மக்களுக்கு நன்மையை செய்ய முடியாது.

  இதற்கெல்லாம் ஒரு மாற்று அரசியலாக தமிழக வெற்றி கழகம் இருக்குமா? என்பதுதான் இன்றைய எதிர்கால இளைஞர்களின் முக்கிய இலட்சிய கனவு. மேலும் ,விஜய் இங்குள்ள அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தால், அது மீண்டும் இதே ஊழல்கள் தான் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாக தான் அது இருக்கும் .அதனால், வெற்றியோ, தோல்வியோ தனித்து நின்று எந்த அரசியல் கட்சிகளும் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும். 

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் அரசியல் கட்சிகளிடம் ஏமாந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம், ஐநூறுக்கு வாக்களித்து அவர்கள் வறுமையை போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .அதாவது ஒரு பக்கம் இலவசமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தால், இன்னொரு பக்கம் டாஸ்மாக் கடை மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 10,000 ரூபாய் அரசுக்கு கொடுத்து விடுகிறார்கள். அதனால் இலவசம் ஒரு ஏமாற்றம்தான்.மேலும்,

உழைப்பவன் ஏமாளி ஆகுறான் .ஊரை ஏமாற்றுபவன் புத்திசாலியாககிறான்.  அது எப்படி என்றால், அரசியல் கட்சியினர் மற்றும் ஆட்சியாளர்களின் பொய்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் தான் இதற்கு முக்கிய காரணம் .மேலும், அரசியல் என்பது பொதுநலத்திலிருந்து சுயநலமாகிவிட்டால், இப்படிப்பட்ட ஊடக கருவிகளால் அப்பாவி மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .எல்லோரும் அரசியலை படித்துவிட்டு பேசுவதில்லை .அரசியல் என்ன என்றால்! தெரியாத மக்கள் தான் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 தெரிந்தவர்கள் 30 சதவீதம் வாக்களிக்கவே செல்வதில்லை . இந்த ஏமாற்றத்தை சரி செய்ய வேண்டும். அதேபோல், இந்த அரசியல் அடாவடித்தனங்கள் , ஊழல் அரசியல் கட்சிகளுக்கு முட்டுக் கொடுக்கும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் அடாவடித்தனங்கள் இதையெல்லாம் சரி செய்யாமல் தமிழக அரசியல் வெற்றிக் கழகம் எதிர்பார்த்த இலக்கு, எந்த நோக்கத்திற்காக அரசியல் கட்சி? என்பதை மக்கள் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் இதை எல்லாம் சரி செய்வது மிகவும் கடினமான ஒன்று. இந்த கடினமான வேலையை செய்யாமல் மக்களுக்கு நன்மையை எந்த அரசியல் கட்சிகளாலும் செய்ய முடியாது . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *