திமுக ஆட்சியில் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் , மூடி மறைக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram

திமுக ஆட்சியில் இதுவரை மக்களுக்கான பிரச்சனைகள் என்ன தீர்த்திருக்கிறார்கள்? ஒரு பக்கம் வரி உயர்வுக்காக மக்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதாக தகவல் .மற்றொரு பக்கம் மின்சார கட்டண உயர்வுக்காக பல தொழிற்சாலைகள் இழுத்து மூடுவதாக தகவல். எங்களைப் போன்ற சிறிய பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே மக்களின் வரிப்பணம் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறதா? பத்திரிக்கை ஜீவோ? 

இப்படிப்பட்ட பிரச்சனைகளை மூடி மறைப்பதற்கு தான் அந்த சலுகை விளம்பரங்கள் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படுகிறதா? மேலும், இதற்காக சமூக நலன் பத்திரிகைகள் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இது தவிர, விலைவாசி உயர்வு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, படித்த படிப்புக்கு ஏற்ற ஊதியமின்மை ,ஆசிரியர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் ஓய்வூதிய போராட்டம், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பலன்கள் கிடைக்காமல் போராட்டம், 

இது தவிர, கட்சிக்காரர்களின் அராஜகங்கள், அடாவடித்தனங்கள், மிரட்டல்கள் இத்தனையும் தாங்கிக் கொண்டு மக்களின் வாழ்க்கை போராட்டம் ஓடிக்கொண்டிருக்கும் போது, இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் இதையெல்லாம் ஏன் வெளிக்கொண்ட வராமல்? தேவையற்ற அரசியல் கட்சிக்காரர்களின் பேச்சுக்களையும், விமர்சனங்களையும் செய்திகளாக போட்டுக்கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்? அதையும் ஒரு பக்கம் மக்கள் பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு துளி கூட அறிவு இல்லை என்று தான் அர்த்தம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இன்றைய தொலைக்காட்சிகள் ,கார்ப்பரேட் பத்திரிகைகள் மக்களின் பிரச்சினைகள் எத்தனை செய்திகள்? இவர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் தான் அதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் . பத்திரிக்கை நடத்தும் நானே அதை பார்ப்பதில்லை. டிவியும் எந்த கார்ப்பரேட் பத்திரிகையும் வாங்கி படிப்பதில்லை. இப்படி இருக்கும்போது நீங்கள் படித்து அதனால் என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? என்ன உண்மை உங்களுக்கு அதில் தெரிவிக்க போகிறார்கள்? என்பதை கவனியுங்கள். 

பத்திரிக்கை என்பது ஒரு விளம்பரத்திற்காக நடத்தும் வேலை அல்ல,  உண்மை செய்திகளுக்காக தான் பத்திரிக்கை .அந்த செய்தியும் நடுநிலையோடு இருக்கிறதா? என்பதுதான் முக்கியம். இவ்வளவு விஷயங்கள் இந்த பத்திரிகை துறையில் இருக்கும் போது, நீங்கள் எதை சிந்திக்க போகிறீர்கள்? எந்த உண்மையை தெரிந்து கொள்ள போகிறீர்கள்? இதுதான் நடுநிலையான மக்களின் கேள்வியாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்கள் இன்று நாட்டில் கட்சி என்பது தன்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளவும் ,தனக்கொரு வலிமையான சுவரில் தாங்கிக் கொள்ளவும் தான் என்று இன்றைய அரசியல் கட்சியினர் இருந்து வருகிறார்கள். மேலும்,

 எவ்வளவு தில்லுமுல்லு ,பிராடு வேலை செய்தாலும்,அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைவரும் எவ்வளவு ஊழல் செய்தாலும், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், இன்றைய அரசியல் கட்சி இருந்து வருகிறது.பொது வாழ்க்கையில் ஈடுபட்ட அரசியல் கட்சியினருக்கு ஒழுக்கமும், நேர்மையும் இன்று கேள்விக்குறி ஆகியுள்ளது.அவர்கள் பிழைப்பை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் எந்த அரசியல் கட்சி மக்கள் நலனில் அக்கறை உள்ளது என்று தேட வேண்டி உள்ளது.

இதில் மக்களுக்கு எப்படி சேவை செய்வார்கள்? 50 ஆண்டுகளுக்கு முன் அரசியல் வாழ்க்கை கெளரவத்திற்காக இருந்தது. இன்று அது மக்களை ஏமாற்றவும், பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பதற்காகவும், அரசியல் ஆகிவிட்டது. அதனால், படித்த இளைஞர்கள் உழைத்துக் கூட முன்னுக்கு வர முடியவில்லை. படிக்காமல் உடம்பைக் காட்டுபவர்கள் எல்லாம் இன்று லட்சங்களையும், கோடிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .அரசியல் கட்சிகளில் இது எவ்வளவு பெரிய வேதனை? 

 பெரிய பத்திரிக்கை என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் அல்லது சிறிய பத்திரிகைகளாகட்டும் ஏதாவது மக்களுக்கு உண்மையை தெரிவித்தால்தானே அதில் 10% மக்களாவது இது உண்மையா? பொய்யா? என்பதை சிந்திப்பார்கள் .அந்தப் பத்து சதவீதம் 50 ஆகும் 50 ,100 ஆகும் .100 ,200 ஆக பெருகிக் கொண்டே இருக்கும் . 

இதையெல்லாம் மக்களுக்கு சொல்லாமல் நடிகைகள் என்ன சொல்கிறார்கள்? நடிகைகளை பார்த்து எவ்வளவு பேர் மயங்குகிறார்கள் ?அவர்கள் போடும் பத்தினி வேஷம் என்ன? இதுவா பத்திரிக்கை? இதைவிட  அவர்கள் பாலியல் தொழிலுக்கு வந்தார்களா? இல்லை நடிக்க வந்தார்களா? எதற்கு வந்தார்கள்? என்பது அவர்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மை .மேலும், இருட்டில் நடக்கின்ற வேலைகளுக்கெல்லாம் வெளிச்சத்தில் பதில் சொல்ல முடியாது.

அதை விட்டுவிட்டு, இங்கே இந்த கார்ப்பரேட் மீடியாக்களில் பேசிக் கொண்டு, நாட்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் வேலையெல்லாம், அது சினிமாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் . அந்த அளவுக்கு இங்கே மக்களுக்கு அறிவு இருக்கிறதா ?இல்லையா? மக்களாகிய நீங்கள் தான் உங்களை நீங்களே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.மேலும்,

நாட்டு மக்களின் பிரச்சினைகளை மட்டுமே பேசக்கூடிய அரசியல் கட்சியினர் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில் தங்களின் விளம்பரங்களை மட்டுமே பெரிதாக நினைத்து பேசி வருவதும், ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருப்பதும், இதுவே அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் பேசும் அரசியலில் மக்களை முட்டாளாக்கும் தளமாக கார்ப்பரேட் மீடியாக்கள், இதையெல்லாம் உண்மை  செய்திகளாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த செய்திகள் எல்லாம் யாருக்கு தேவை? எதற்கு தேவை? மக்களுக்கா? அல்லது ஆட்சியாளர்களுக்கா? அரசியல் கட்சியினருக்கா? இப்படி தேவையற்ற செய்திகளை போட்டு இன்றையஅரசியலில் ஊழல்வாதிகளுக்கு‌ பக்க பலமாக தொலைக்காட்சிகளை, பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இது எல்லாம் தெரியாமல், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார்பந்தயம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வி? மட்டுமல்ல குற்றச்சாட்டு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *