விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி, மாநாடு, கொள்கை, செயல்பாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான கட்சியாக இருக்குமா ? -அரசியல் ஆய்வாளர்கள்.

அரசியல் இந்தியா சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram

அரசியல் கட்சிகள் யார் வேண்டுமானாலும் ஆரம்பித்து விடலாம். ஆனால், அதன் கொள்கையும், செயல்பாடுகளும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவில் இருக்க வேண்டும். தேசிய காங்கிரஸ் கட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு, சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி.அது தற்போது உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சி அல்ல. இதை நன்றாக மக்களும், அந்த கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும். 

அதை எதிர்த்து வந்த கட்சி தான் திமுக, திமுகவிலிருந்து அதிமுக ஆரம்பத்தில் கொஞ்சம் மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு தான் இருந்தது. அதன் பிறகு, எல்லாமே கொள்ளையடிக்கும் கூட்டமாக மாறிவிட்டது. இப்போது அந்த கொள்ளையடிக்கும் கூட்டங்களில் இருந்து, மக்களின் எதிர்பார்ப்பு மாறுபட்ட கட்சியாக இது இருக்குமா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி? இதுவும் இந்தக் கூட்டத்தோடு , பத்தில் பதினொன்றாக இருக்கும் ஆனால், விஜயின் தமிழக வெற்றி கழகம் அது வேஸ்ட் என்று முடிவு கட்டி விடுவார்கள்.

 இப்போது தமிழ்நாட்டில் வேஸ்ட் ஆக இருக்கக்கூடிய ஊழல் கட்சிகளும், ஊழல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு விஜய்யுடன் கூட்டணி வைக்க மோதிக் கொண்டிருக்கிறார்களாம்.மேலும், திமுகவில் ,அதிமுகவில் இருக்கக்கூடிய முன்னாள், இன்னாள் மந்திரிகள், எம்எல்ஏக்கள் சிலர் கூட சேர போட்டி போடுகிறார்களாம். அதாவது திமுகவை தவிர, காங்கிரஸ், அதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், பாமக, தேமுதிக இதில் ஒரு பக்கம் பிஜேபியும் பேச்சு அடிபடுகிறது. 

நாட்டில் பிஜேபியுடன் கூட்டணி வைத்தாலும், அது ஓரளவுக்கு ஒத்துப் போகக்கூடிய விஷயம் தான் என கொள்கைளவில் பிஜேபி ஊழலுக்கு எதிரான கட்சி தான் .ஆனால், மற்ற கட்சிகள் அத்தனையும் ஊழல் வழக்குகளில், ஊழல் குற்றச்சாட்டுகளின் குப்பையாக தேங்கி கிடக்கும் கட்சிகள். இதில் விஜய் காங்கிரசுக்கு அதாவது ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால், தமிழகத்தில் நிச்சயம் அடிபடுவர் காரணம்? அது ஊழலே உருவான கட்சியாக மாறிவிட்டது. அது மட்டுமல்ல, இந்த தேசத்திற்கு எதிரான செயல்களில் அதாவது போதை பொருளில் திமுக, அதிமுக, காங்கிரஸ் , பிஜேபியில் அருண் ஜெட்லி இருந்தவரை, இவை எல்லாம் இந்தியாவில் போதைப் பொருளை அதிக அளவில் பழக்கத்திற்கு காரணமான கட்சிகள் என ரகசிய தகவல் கசிந்துள்ளது..

 இதில் சிக்கியது ஜாபர் சாதிக் மட்டுமே, இதற்கு பின்னால் ஒரு பெரிய கேங்கே இருக்கிறது என்கிறார்கள் .இன்னும் அதையெல்லாம் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லையா?இந்தியாவை குட்டிச்சுவராக ஆக்கப் பார்க்கிறார்கள் காங்கிரஸ் கட்சி .அதில் சிதம்பரம், சிதம்பர மகன் இல்லையென்றால், ஒன்னும் இல்லாத ஒருவன் 500 கோடி போய் வெளிநாட்டில் சொத்து வாங்க முடியுமா? அதுதான் இன்றைய செல்வப் பெருந்தகை. இப்படி இருக்கும்போது, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகாந்த் ஐஏஎஸ் காங்கிரஸ் பற்றி பேசுகிறார். 

இதையெல்லாம் அரசியல் தெரியாத முட்டாள்களிடம் தான் பேச முடியும்.மேலும்,கொள்ளையடிக்க ஜாதியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஜாதி எல்லாம் குப்பையிலே தூக்கி போடுங்கடா, என்று இன்றைய இளைஞர் சமுதாயம் வெறுப்பில் இருக்கிறது . 

இதையெல்லாம் மக்களுக்கு சொல்ல வேண்டிய பத்திரிகை உலகம் குறிப்பாக மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் அனுபவிக்கும் இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் இதையெல்லாம் மூடி மறைத்து கொண்டு, வருமானத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? இந்த மீடியாக்கள் அத்தனையுமே கருப்பு பணத்தை வைத்திருக்கும் முதலாளிகள்தான் .

கார்ப்பரேட் மீடியாக்களின் முதலாளிகளுக்கு இந்த நாட்டைப் பற்றி, இந்த மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. சமூக அக்கறை கிடையாது. சமூக அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வார்கள். எல்லாமே எப்படி கார்ப்பரேட் அரசியலில் பேச்சாக காட்டிக் கொள்கிறார்களோ, அதே போல் தான், இந்த கார்ப்பரேட் மீடியாக்களும் அவர்கள் காட்டுவதை எல்லாம் இவர்கள் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையை வெளிப்படுத்த மாட்டார்கள்.

 இதற்கு அடுத்த கட்டத்தில் இருக்கக்கூடிய எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகைகள்,இதன் வளர்ச்சிக்கு முட்டுக்கடையாக இருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் செய்யும் மறைமுக அரசியல் கார்ப்பரேட் மீடியாக்கள் வித் கார்ப்பரேட் இன்றைய திமுக, அதிமுக,காங்கிரஸ், கட்சிகளுக்கு . இவையெல்லாம் இன்று கார்ப்பரேட்டுக்களாக மாறி இருக்கிறது? என்று எப்படி நீங்கள் சொல்லலாம் என்று கேட்பீர்கள் ?ஒரு காலத்தில் சாமானிய மக்களாக இருந்தவர்கள் தான் இன்றைய மந்திரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இது முன்னாள் ,இந்நாள் அதிமுக ,திமுக வை சேர்ந்தவர்கள். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகளும் அடங்குவார்கள்,இவர்களுடைய சொத்து மதிப்புகளை கணக்கெடுங்கள். 

குறைந்தபட்சம் 500 லிருந்து 1000 கோடிகளை தாண்டும். 100 கோடி வந்தாலே ஒருவர் கார்ப்பரேட் ஆகி விடுவார் . அப்படி ஆனால் இன்று இரண்டு கட்சிகளின் ஆட்சிகளில் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே ஒன்பது லட்சம் கோடி கடன். இந்த கடன்களில் இருந்து தமிழ்நாட்டை மீட்பது மிகப்பெரிய போராட்டமாக தான் அது இருக்கும். அடுத்து வரக்கூடிய கட்சிக்கு என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள் .மேலும், 

நாட்டில் ஊழல் செய்பவர்கள் தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். கொள்ளை அடித்தால் தான் பிச்சை போட முடியும் .அதை தான் திமுக, அதிமுக, காங்கிரஸ் இந்த அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறது.இதை தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு புற்று நோயாக உருவாக்கி விட்டார்கள். இதிலிருந்து இவர்களால் வெளிவர முடியவில்லை .அந்த அளவுக்கு இந்த மக்களை ஒரு ஓட்டுக்கு பைத்தியம் ஆகிவிட்டார்கள்.

 இதற்கு துணை போகிறது தேர்தல் ஆணையம்! தேர்தல் ஆணையம் கடுமையான சட்ட விதிகளை கொண்டு வர வேண்டும் என்று பலமுறை என்னுடைய இணையதளத்திலும் பத்திரிகைகளும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பற்றி அது அலட்சியம் காட்டுகிறது. இந்த தேசத்தின் மீது மக்களுக்கு வாக்களிக்கும் உரிமைகள் மீது நம்பிக்கையற்ற தன்மை தான் பணம் வாங்கி வாக்களிப்பவர்கள். இதை மாற்ற வேண்டும். மேலும்,

எம்ஜிஆர் பாடலில் ஒரு சில வரிகள் மக்கள் நலம், மக்கள் நலம் என்று சொல்லுவார் தம் மக்கள் நலம் என்றே இருப்பார் .இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் நிலைமை .இதிலிருந்து தமிழக வெற்றிக்கழகம் எப்படி செயல்பட போகிறது? என்ன கொள்கையை அறிவிக்க போகிறது? அரசியல் மாற்றத்திற்கான அடிப்படை எதை கொண்டு வரப் போகிறது? இதற்கு  உங்களுடைய அரசியல் கட்சியினர் தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் தகுதியானவர்களா? இத்தனை கேள்விக்கும் விஜய்யின் அரசியல் கட்சி மீது தமிழக மக்களின் கேள்வி? இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதுதான் மாற்றத்தின் மிகப்பெரிய அரசியல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *