தமிழ்நாட்டில் ஓட்டுக்காக அரசியல் செய்கிறார்களே ஒழிய, மக்களுக்காக அரசியல் செய்கிறார்களா? அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியுமா? – சமூக ஆர்வலர்கள்.

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தான் அரசியல் செய்கிறார்கள். அந்த அரசியல்! மக்களுக்காக இல்லை. ஓட்டுக்காக அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு, அவர்களுடைய தகுதி, சேவை, ஊழல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவர்கள் பேச்சுக்களை மட்டும் மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் மீடியாக்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசின் செய்தி துறை.

இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள். அதிலும் அரசியல் என்றால் என்ன? என்று தெரியாத மக்களிடம், இந்த செய்திகள் அது உண்மையா? பொய்யா? என்று ஆய்வு செய்து பார்க்கக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு தகுதியோ, திறமையோ இல்லை. மொட்டையாக ஒருவர் பேசுவதை செய்திகளாக கொடுத்துக் கொண்டே போனால், அந்த செய்தியை அரசியலைப் பற்றி படித்தவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால், படிக்காதவர்கள் அதைப் பார்த்து இன்றுவரை ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த செய்திக்கு வேறு சில அரசியல் கட்சிகள், அதைப் பற்றி விமர்சனம் செய்தால் அதன் உண்மை என்ன? என்று வெளிவரும். இல்லை என்றால் அதுவும் வராது. மேலும், இது போன்ற செய்திகளை கொடுப்பது மக்களுக்கு நாட்டில் ஊழல் செய்த அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகள் எவ்வளவு போலியான அரசியல் கருத்துக்களையும் அல்லது மக்களுக்காக சேவை செய்வது போல, பேசுவதையும் விளம்பரப்படுத்திக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலை தான் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் வேலை .

இதற்கு உங்களுடைய சொந்த பணத்தில் நீங்கள் பத்திரிகை நடத்த வேண்டும். சொந்த பணத்தில் தொலைக்காட்சி நடத்த வேண்டும். மக்களுடைய வரிப்பணத்தில் நடத்தும் போது, அது மக்களுக்கான உண்மையான செய்தியாக தான் இருக்க வேண்டும். நீங்கள் அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நல்லவர்களாக வேஷம் போட்டுக் கொண்டு, இங்கே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மறைமுக வேலை. எங்களைப் போன்ற பத்திரிக்கையின் அனுபவசாலிகள் தான் அதை புரிந்து கொள்ள முடியும் . கேட்டால் செய்தித் துறை அதிகாரிகள் இது சட்டம் அதாவது விதி என்கிறார்கள். 

மக்களை ஏமாற்றுவதற்கு பத்திரிக்கை சட்டம் துணை போகிறதா? அப்படி ஒரு சட்டம் பத்திரிக்கைக்கு தேவையா? இவையெல்லாம் சமூக ஆர்வலர்களின் முக்கிய கேள்வி? மகாவிஷ்ணு என்ற ஆன்மீகவாதி பேசிய பேச்சில் ஒரு பக்கம் தொலைக்காட்சிகளில் இதைப் பற்றி பேசிய சிலர், அவரை ஒரு பெரிய சமூக குற்றவாளி போல ஆக்கிவிட்டார்கள். அதை நினைத்தாலே எனக்கு சிரிப்பு வருகிறது. அந்த அளவிற்கு இந்த ஊடகத்துறை இருக்கிறது. யார் எதைப் பேசினாலும், நடுநிலையான ஒரு தீர்ப்பு வழங்கக்கூடிய தகுதி இல்லாத தொலைக்காட்சிகளாகத்தான் இன்று இருக்கிறார்கள். அதுதான் பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி.

 மேலும், இப்படி எல்லாம் மக்களை ஏமாற்றினால் தான், மக்கள் அரசியல் கட்சியினரின் பேச்சுக்களில் ஏமாந்து கொண்டிருப்பார்கள் .மக்கள் ஏமாந்தால் தான் ஓட்டுக்காக அரசியல் செய்ய முடியும். இந்த ஓட்டுக்காக அரசியலில் தான் ஊழல் செய்ய முடியும். ஊழல் செய்தால் தான் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியும். மக்களிடம் நல்லவர்களாக வேஷம் போட்டு பேச முடியும் .அந்த பேச்சில் எப்படியும் பேசுவது தான் இன்றைய அரசியல். மனசாட்சி படி பேச வேண்டிய அரசியல் இல்லை.

 ஏனென்றால் ஓட்டுக்காக அரசியல் செய்பவர்கள் மனசாட்சிப்படி பேச மாட்டார்கள். மனசாட்சி படி அரசியல் பேசுபவர்கள் மக்களுக்காக அரசியல் செய்பவர்கள் .அப்படி அரசியல் செய்பவர்கள் இன்று எத்தனை கட்சிகளில் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் சமூக ஆர்வலர்களின் முக்கிய கேள்வி?மேலும்,

 நாட்டில் ஊழல் என்பது மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ,சகித்துக் கொள்ள முடியாத, ஒரு அரசியலாக தான் இன்று வரை இந்த திராவிட அரசியல் கலாச்சாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது அதிமுக செய்த ஊழல்களை திமுக வெளிப்படுத்தும், திமுக செய்த ஊழல்களை அதிமுக வெளிப்படுத்தும். இப்படி ஒருவரை ஒருவர் ஊழல் விமர்சனங்களில் தான் இதுவரை இந்த அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளில் இவர்கள் செய்த ஊழலை மக்கள் மறந்து விடுகிறார்கள்.

 பிறகு அதிமுக நல்லவர்களாகவும், திமுக கெட்டவர்கள் ஆகவும் மக்கள் நினைத்து ஓட்டு போட்டு விடுகின்றனர். அது போல் சில காலம் இவர்கள் செய்த ஊழலை, எல்லாம் அதிமுக வெளிப்படுத்தும் போது திமுக கெட்டவர்களாகவும், அதிமுக நல்லவர்களாகவும், இப்படி மாற்றி ,மாற்றி ஓட்டை போட்டுக் கொண்டு ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். இதற்கு என்னதான் தீர்வு? ஒரு பக்கம் கார்ப்பரேட் மீடியாக்கள், இந்த ஊழலுக்கு ஒத்துவதும் மீடியாக்களாக இருந்த வருகிறார்கள்.அதை தடுக்க வேண்டும் என்றால், நாட்டில் பத்திரிக்கை சட்டங்களை மாற்ற வேண்டும். வியாபார நோக்கமற்ற பத்திரிக்கைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்தி மக்கள் நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு மட்டும் தான், அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும் .

அதை தடுக்காத வரை, ஊழலுக்கு ஒத்து ஊவதும், இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் தொடர்ந்து இதே தவறை தான் செய்து கொண்டிருப்பார்கள். அடுத்தது  இவர்களுக்கு என்ன தண்டனை என்பதை சட்டப்படி,மனசாட்சி படி நீதி அரசர்கள் இவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஓரிரு வருடங்களுக்குள் அந்த வழக்கை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.கொடுக்கப்படும் தண்டனைகளால் தான் நாட்டில் கோடிகளில் ஊழல் செய்யும் மந்திரிகள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள்இவர்கள் செய்யும்  ஊழலில் இருந்து நாட்டை காப்பாற்ற முடியும் என்கிறார்கள்- சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *