செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram
ஆன்மீகம் மூடநம்பிக்கை என்றால்! கடவுள், மதம், கோயில்கள் இவை எல்லாம் மூடநம்பிக்கையா? மூடநம்பிக்கை என்று பேசியவர்கள் பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி, திமுகவில் அமைச்சர் அன்பின் மகேஷ் .ஆன்மீகம் இந்த நாட்டில் அழியாத பொக்கிஷமாக சித்தர்கள், மகான்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு விட்டுப் போனவர்கள்.
அதை தான் இன்று வசிஷ்டர் நாடி, அகத்தியர் நாடி என்று ஓலைச்சுவடிகளில் ஜோதிடம் பார்க்கிறோம். மேலும், இந்த மக்களுக்கு ஏன்? குழந்தைகளுக்கு கூட தெரியாத ஒன்று, இப்போது மகாவிஷ்ணுவின் பேச்சு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது? இது எப்படி அரசியல் ஆனது? இது ஒரு சாதாரண விஷயம் தான் .இந்த அளவுக்கு இதை கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை. பிறப்பு, மறு பிறப்பு அடுத்தது போன பிறவியில் செய்த நல்ல கர்மா, கெட்ட கர்மா இதன் விளைவு இன்று ஊனமுற்றோராகவோ, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் பிறப்பு ஏற்படுகிறது.
அதை தான் அவ்வை சொல்கிறார். அரிதரிது பிரித்தல் அரிது, மானிடராய் பிறத்தல் அரிது. அதிலும் கூன், குருடு, நொண்டி, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது. இதில் என்ன தவறு ?அவ்வை என்ன சொன்னார்? மானிடராய் பிறப்பதறிது ,அதிலும் குருடு ,செவிடு, நொண்டி இல்லாமல் பிறத்தல் அரிது. அப்படி என்றால், அவர்களுடைய பிறப்பு கர்மாவை ஒட்டி தீர்மானிக்கப்படுகிறதா? அந்த கர்மாவின் கணக்கு பற்றி தான் மகாவிஷ்ணு பேசியிருக்கிறார்.
இங்கே ஆன்மீகம்! அரசியலில் எப்படி உள்ளே வந்துவிட்டது? இதுதான் கேள்வி? இது இந்த பிரபஞ்சம் இதை கொண்டு வந்திருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன் .இல்லையென்றால் திடீரென்று யாரோ ஒருவர் ,ஒரு பள்ளியில் பேச, இப் பிரச்சனை தமிழக முழுதும் போட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு அடுத்தது, இங்கே பகுத்தறிவு பகல் வேஷதாரிகள், இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ளலாம் ?அது அவர்களுடைய அரசியல். இங்கே பிஜேபி ஆன்மீக அரசியலை கையில் எடுக்கிறது. இதில் என்ன தவறு?
இப்படி ஒரு பேச்சுக்கு பல கற்பனைகளை புகுத்தி, காட்டிக்கொண்டு, புதிய தலைமுறையில் ஒரு பெண் பேசினார், என் பையன் மருத்துவவனாக நான் வர வேண்டும் என்று நினைப்பேனா? அல்லது அவன் ஒரு ஜோதிடராக வரவேண்டும் என்று நினைப்பேனா? கதை கற்பனையில் எப்படி வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு போகலாம். பேசலாம். அதிலும் இந்த திராவிடம் மாடல் கூட்டங்களுக்கு பேச்சே கைவந்த கலை .இது பேசி ஆட்சி பிடித்த ஒரு கட்சி.
அதனால், இவர்களுக்கு பேசுவது மனசாட்சி படியோ, தர்ம நியாயப்படியோ பேசுவதும் முக்கியமல்ல ,அவர்களுடைய கொள்கையே, எப்படியும் பேசுவது, அதில் கைத்தேர்ந்த வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர்கள் . இந்த வித்தை எல்லாம் ஒன்னும் தெரியாத முட்டாள்களிடம் தான் பேச முடியும். சுயநலவாதிகளிடம் தான் பேச முடியும். இது எங்கும் இவர்களால் பேச முடியாது. இதே கருத்து பழனியில் முருகனுக்கு மாநாடு நடத்தினார்கள். அது என்ன மாநாடு? ஆன்மீகமானடா? இல்லை அரசியல் மாநாடா?
நீங்கள் வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாம் என்றால் அது வேண்டாம். என்ன பைத்தியக்கார ஆட்சியா? இல்லை மக்கள் எல்லாம் முட்டாள்களா? என்ன நினைக்கிறீர்கள்? அரசியல் தெரியாத ஓட்டு போட்டவன் எல்லாம் அதிகாரம் கையில் கொடுத்து விட்டார்கள் என்று, எப்படி வேண்டுமானாலும் ஆடிக்கொண்டு, பேசிக்கொண்டு இருக்கலாம் .இப்படித்தான், உதவாதன் ஊர்ல தலைவரா வந்துட்டா? கூட அவன் கூட அப்படித்தான் பண்ணிட்டு இருக்கான். பெரிய அதிகாரம் கையில் கொடுத்துவிட்டார்கள்.இதுக்கு எல்லாம் காரணம் காவல்துறை தான் மிகப்பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் மக்களுக்காக காவல்துறை இல்லை. ஆட்சியாளர்களின் உடைய எடுபிடியாக காவல் துறை இருக்கிறது.
சட்டத்தை மதிக்காத காவல்துறை மீது, சட்ட நடவடிக்கை எடுத்தால் முக்கியமாக நாட்டில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். ஏனென்றால் வாக்களித்த மக்கள் இந்த நாட்டில் ஒரு செல்லாக்காசு போல ஆகி விடுகிறார்கள் . எதற்கு தேர்தல்? எதற்கு ஜனநாயகம்? எதற்கு பேச்சுரிமை? எதற்கு கருத்துரிமை? உங்களுக்கு தேவைப்பட்டால்! அங்கே கருத்துரிமை, பேச்சுரிமை, ஓட்டு போட்டு உங்களை உட்கார வைத்தவனுக்கு அது தேவையில்லையா? மக்கள் ஓட்டு போட்டதனால் நீ மந்திரி. உனக்கு ஓட்டு போட வில்லை என்றால் நீ யார்? ரோட்ல போற ஒரு ஆள்?
இங்கே மக்கள் மனசாட்சிப்படி வாழவில்லை. மனசாட்சிப்படி பேசவில்லை. அதிகாரம் யார் கையில் இருக்கிறது? அவர்களுக்கு சாதகமாக போனால் நமக்கு என்ன கிடைக்கும்? இப்படி பத்திரிகைகளே, தொலைக்காட்சிகளே இருக்கும்போது, சாமானிய மக்கள் எப்படி இருப்பார்கள்? இங்கே ஒரு பள்ளியில் பகுத்தறிவா ?அல்லது ஆன்மீகமா?மூடநம்பிக்கையா? இந்த போட்டியையும், சர்ச்சையும் கிளப்பிவிட்டார். மகாவிஷ்ணு. கிளப்பிய பிரச்சனை அரசியல் ஆகிவிட்டது.அதனால்தான் அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை மக்கள் ஒரு நிமிஷம் சிந்தித்துப் பார்த்தால், அந்தக் குழந்தைகளுக்கே நன்கு புரிந்து இருக்கிறது என்று பேட்டி தருகிறார்கள். நமக்கு மேல ஒரு சக்தி இருக்கிறது என்று தான் நினைத்தோம். ஆனால், கடவுள் நமக்குள்ளே இருக்கிறார் என்று அந்த குழந்தைகள் தெரிவிக்கிறது. இங்கே ஒரு ஊனமுற்ற ஆசிரியர் ,பள்ளியில் எப்படி நீங்கள் ஆன்மிகத்தை பேசலாம்? அப்படி என்றால் ஆன்மிகமா? அறிவியலா? அறம் சார்ந்தது ஆன்மீகம். அறிவு சார்ந்தது ஆன்மீகம். அறிவியலும் கல்வி அறிவு சார்ந்தது.
நீங்கள் எவ்வளவு பெரிய பட்டங்களை கல்வியில் பெற்று, உயர்ந்த நிலைக்கு போனாலும் ஒழுக்கம் என்பது இல்லாமல் போனால், நீங்கள் பெற்ற பட்டம் குப்பைக்கு சமம். அது ஒரு குப்பை. ஒரு மனிதன் பெரிய விஞ்ஞானியே என்று வைத்துக் கொள்வோம், அவர் ஒரு கண்டுபிடிப்பாளர். பல விஷயங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார். ஆனால், அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு முன், அவர் போதைக்கு அடிமையாகி விட்டார். 24 மணி நேரமும் போதையிலே இருந்து வருகிறார்.
இதை ஒரு அதிகாரியாக கூட எடுத்துக் கொள்ளலாம். அல்லது அரசியல்வாதியாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஏன் ஒரு பத்திரிகையாளராகவே கூட எடுத்துக் கொள்ளலாம்.இவர்கள் முழுநேர குடிகாரர்களாக மாறிவிட்டால், அவர்களால் எந்த பயனும் இருக்காது. திறமையிருந்து, தகுதி இருந்து ,ஒழுக்கம் என்பது இல்லை என்றால், இவை அத்தனையும் வீண் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி என்றால், இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கம் என்பது மிக முக்கியம். அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார் ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது என்கிறார்.
திருவள்ளுவரின் அறிய புகைப்படம்
ஆன்மீக சிந்தனை, அறிவு, இதற்கு அடிப்படையில் முக்கியத்துவமாக இருப்பது ஒழுக்கம். மக்கள் ஒழுக்கத்தின் மேன்மையை புரிந்து கொள்ளாமல் ஆன்மீக அறிவை தொட முடியாது. மேலும்,சாயந்திரம் ஆனால் ஒரு அப் போடுகின்ற மதுப் பிரியர்கள், இதைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்? இதெல்லாம் ஒரு பெரிய பேச்சா ?அப்படி என்றுதான் நினைப்பார்கள். இன்றைய பகுத்தறிவாளர்கள் எத்தனை பேர் குடிக்காமல் மந்திரிகளாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் திராவிட கட்சியில் குடிக்காமல் இருக்கிறார்கள்? எத்தனை பேர் அண்ணா திமுகவில் குடிக்காமல் இருக்கிறார்கள்? இந்த லிஸ்ட் எடுத்தாலே, இந்த பகுத்தறிவுவாதிகள் பேச்சு மக்களுக்கு புரியும்.சாயந்திரம் ஒரு பேச்சு பேசுவார்கள், காலையில் ஒரு பேச்சு பேசுவார்கள். இது எல்லாம் அரசியலில் சகஜமப்பா.
ஏனென்றால், உபதேசம் ஊருக்கு! எனக்கில்லை .என் குடும்பத்திற்கு இல்லை. இதுதான் கருணாநிதியும், கருணாநிதி மகன் ஸ்டாலின்னும், வழி வழியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை பேசக்கூட தகுதி இல்லாத ஊடகங்கள், பெரிய ஊடகங்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. யாராவது ஸ்டாலின் குடும்பத்தை பற்றி பேசி இருக்கிறார்களா? அந்த உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்களா? மக்களிடம், ஏனென்றால் அதிகாரம், ஆட்சி இதே வேறு ஒருவரிடம் போனால் அவர்களை புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் நடுநிலையான ஊடகம் என்று ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?
ஏன் மக்களுடைய வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதை நீதிமன்றம் தான் இப் பிரச்சனையை கேள்வி கேட்க முடியும். மக்களிடம் டிவி விவாத மேடையில் ஒரு பக்கம் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக பேசும் ஒருவரை உட்கார வைத்து விட்டு, இன்னொரு பக்கம் அதற்கு எதிரானவர்களை உட்கார வைத்துவிட்டு ,நெறியாளர் என்று ஒருவர் அதை பார்த்துக்கொண்டு, இதற்கு என்ன தீர்வு? என்ன உண்மை? மக்களிடம் சொல்லி இருக்கிறார்கள் ? அவர்கள் பேசுவது தான் தீர்வா?
அல்லது யூடியூபில் பேசும் பேச்சாளர்கள் பேசுவது தான் தீர்வா? ஆளுக்கு ஒரு கருத்து? உண்மை எது? என்று விளக்கத் தெரியாமல் ஊடகங்களின் அரசியல். இங்கே அறிவியலா? ஆன்மீகமா? அறிவியலில்லாமல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் இல்லாமல் அறிவியல் இல்லை. ஒழுக்கம் இல்லாத ஒரு மனிதன் உயர்ந்த கல்வியை பெற முடியாது .அது விஞ்ஞான கல்வியாக இருந்தாலும், ஆன்மீக கல்வியாக இருந்தாலும், அங்கே ஒழுக்கம் என்பது அவசியம். ஒழுக்கத்தின் அடிப்படை ஆன்மீகம். அது இல்லை என்றால் அறிவியலும் இல்லை. வாழ்க்கையும் இல்லை. உதாரணத்திற்கு 24 மணி நேரமும், ஒருவன் போதையில் உலா வந்தால், அவன் ஒரு மனிதனாக இருப்பானா? மனிதன் வாழ்வதற்கே ஒழுக்கம் அவசியம்.
இங்கே மகாவிஷ்ணுவும் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ஊனமுற்ற ஆசிரியரும் பேசிக் கொண்டிருக்கிறார். இருவர் பேசும் போது, ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது? என்ன கௌரவ குறைச்சல் வந்துவிட்டது?ஊனமுற்றோருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ன மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது அவருக்கு மட்டும் ஏற்பட்டதா ?இல்லை ஒட்டுமொத்த ஊனமுற்ற சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளதா?
அதிகாரம் கையில் இருப்பதால் காவல்துறை! இவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் காவல் துறையின் தவறு. இதற்கு மத்திய அரசு ஒரு கடிவாளம் போட வேண்டும். அல்லது உச்ச நீதிமன்றம் ஆவது இதற்கு ஒரு கடிவாளம் போட வேண்டும். சட்டத்தை தவறாக பயன்படுத்தும் காவல்துறையினர் மீது நிச்சயம் நடவடிக்கை தேவை அது நீதிமன்றம் போய் தான் இருக்கக் கூடாது. அது பற்றிய புகார் நீதிபதிக்கு அனுப்பினாலே,நீதியரசர் அதை வழக்காக எடுத்துக் கொள்ளாமல், புகாராக விசாரித்து சட்டப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் .