செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram
ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே சமூக நன்மைக்காக 18 சித்தர்களுக்கு ஒரே இடத்தில் கோயில் அமைத்துள்ளார். இந்த கோயிலின் சிறப்பு, சித்தர்களின் வாழ்வியலை பற்றியும், சித்தர்கள் எப்படி உலக நன்மைக்காக பிறவி எடுத்து, என்னென்ன நன்மைகள்? மக்களுக்கு செய்தார்கள்? சகல விதமான நோய்களுக்கும், பச்சிலை மூலிகைகளை அவர்கள் படைப்பால் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.அதை எல்லாம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அதேபோல், இந்த ஆலயத்தில் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள் எதுவானாலும், சித்தர்கள் கருணையால் அவை தீர்க்கப்பட வேண்டும். இங்கே எப்படிப்பட்ட பிரச்சனைகளில் ஒருவர் வந்தாலும், அவருக்கு தொடர்ந்து 4,5 வாரங்கள் வரும்போது, பிரச்சனைகள் தீர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இக்கோயிலில் தல விருட்சமாக அரசமரம், வேப்பமரம் ஒன்றாக இணைந்து வளர்ந்துள்ளது.
மேலும், இங்கே காலபைரவர், ராகு, கேதுக்கள், ஸ்ரீ அம்பாள்வேதநாயகி, சிவன், முருகன், விநாயகர், மகா அவதார் பாபா, 18 சித்தர்கள் ,ஆஞ்சநேயர், பெருமாள், சப்த கன்னிகைகள், வராகி அம்மன், சைவ கருப்பண்ணசாமி, இப்படி 51 சிலைகள் நிரூபிக்கப்பட்ட கோயில் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம். இங்கே மாதம் ஒருமுறை இலவசமாக யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெறும். தினம் மூன்று வேளை அன்னதானம்.
மேலும், சுற்றியுள்ள 26 கிராமங்களில் மாதம் ஒரு நாள் பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் கற்றுத் தரப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், சித்தர்களின் மருத்துவத்தையும், மகத்துவத்தையும் கொண்டு செல்கிறோம். ஸ்ரீ யோக தனா உலக சேவா அறக்கட்டளையின் சார்பில், இங்கே பொது சேவை மற்றும் கோயில் சேவைகளும் செய்து வருகிறோம்என்கிறார் ஸ்ரீ யோக சித்தர்.
இது தவிர, ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் பூஜை, அமாவாசை அன்று பிரத்யங்கரா பூஜை, பௌர்ணமிக்கு மகா மேரு பூஜை,பஞ்சமி திதிக்கு ஜுவாலை வாராகி பூஜை, அஷ்டமி திதிக்கு மகா கால பைரவர் பூஜை,பிரதோஷ வழிபாடுகள், இப்படி மேற்கண்ட பூஜை, வழிபாடுகள் அனைத்தும் மாலை 4 மணிக்கு துவக்கப்படும் .அதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும்,இக் கோயிலில் ஸ்ரீ யோக சித்தர் குடும்பப் பிரச்சனை, குழந்தையின்மை, திருமண தடை ,தொழில் மேன்மை, பதவி,படிப்பு, கணவன் மனைவி ஒற்றுமை, எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி போன்ற மேற்கண்ட பிரச்சனைகளுக்கு யாகம் மற்றும் முறையான பூஜை முறைப்படி எந்திரங்கள் செய்து தரப்படுவதாக தெரிவித்துள்ளார் .
மேலும், அனைத்து விதமான நோய்களுக்கும், பச்சிலை மூலிகை பாரம்பரிய வைத்திய முறையில் இங்கு நோய் தீர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார் .
இது தவிர, ஸ்ரீ யோக சித்தர் தன்னுடைய தவநிலையால் சித்தர்களைப் பற்றிய உபதேசம், மூலிகை வைத்தியம், ஹீலிங், தியான பயிற்சி, யாகம் மற்றும் பூஜை வழிபாடுகள், சோழி பிரசன்னம், எந்திர பூஜைகள் போன்ற அனைத்தும் மக்களுக்காக செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இவரிடம் கட்டணம் என்பது கிடையாது. மக்கள் கொடுக்கின்ற நன்கொடை தான் இந்த கோயிலை நிர்மாணித்துள்ளார் .யாரிடமும் எந்த நிர்பந்தமும் கிடையாது .இங்கு வரும் பக்தர்கள் அவர்கள் இஷ்டப்பட்டு காணிக்கைகள் கொடுப்பதுதான் இக்கோயிலில் உள்ள மிகப்பெரிய சிறப்பு .
மேலும், 18 சித்தர்கள் மற்றும் சிவாலயம் திருப்பணிகள் தொடர்பாக இறை நேய அன்பர்களும் ,பொதுமக்களும், இத்திருப்பணிகள் நிறைவடைய பக்தர்கள் ,ஆன்மீக அன்பர்கள், இறை நம்பிக்கையாளர்கள், தங்களால் இயன்ற அளவு பொருள் உதவியும், நிதி உதவியும் நேரிலோ அல்லது அறக்கட்டளை வங்கி கணக்கிலோ செலுத்தலாம் .என்று ஸ்ரீ யோக சித்தர் தெரிவித்துள்ளார். மேலும்,இதற்கு வரி விலக்கு உண்டு .
ஸ்ரீ யோக தனா வேர்ல்ட் சேவா டிரஸ்ட் வங்கி ஐடிபிஐ கணக்கு
எண்: 1736102000005395., IFSC code: IBKL0001736.