ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் பொதுக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி 6000 இலிருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தப்படும் – பிரதமர் நரேந்திர மோடி .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram

பிரதமர் நரேந்திர மோடி சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் பொதுக்கூட்டத்தில் ,ஜம்மு காஷ்மீர் சுதந்திரத்திற்கு பிறகு வெளிநாட்டு சக்திகளால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டது .இந்த முறை சட்டப்பேரவை தேர்தல் ஜம்மு காஷ்மீரின் தலைவிதையை தீர்மானிக்க போகிறது என்று தெரிவித்துள்ளார் .

மேலும், குடும்ப அரசியல் செய்பவர்கள் இந்த அழகான மாநிலத்தை குழி பறிக்க தொடங்கினார்கள். நீங்கள் நம்பிய இந்த அரசியல் கட்சிகள், உங்கள் குழந்தைகளை பற்றி கவலைப்படவில்லை. அந்த அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்தக் குழந்தைகள் மட்டுமே உயர்த்தி கொண்டன. ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டனர். குடும்ப அரசியலை ஊக்கிவிக்கும் அரசியல் கட்சிகள், உங்களை தவறாக வழிநடத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறன.ஜம்மு காஷ்மீரின் எந்த பகுதியிலும், புதிய தலைவர்கள் உருவாக இவர்கள் அனுமதிக்கவில்லை. 

இரண்டாயிரத்திற்கு பிறகு இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படவில்லை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் முன்னேறுவதை இங்கு உள்ள குடும்ப அரசியல் கட்சிகள் அனுமதிக்கவில்லை. அதனால் தான் 2014 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் புதிய தலைமையை கொண்டு வர முயற்சித்தேன். பின்னர் 2018-ல் இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 2018 பதில் பிடிசி தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2020இல் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டன. எதற்காக இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டன? எனில் இந்த தேர்தல்களால் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை சென்றடைகிறது.

மேலும், ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு கடந்த காலங்களில் அமலில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் .மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சரை கூட லால் செல்ல பயப்படும் சூழலில் இருந்தது .ஆனால், பயங்கரவாதம் இன்று தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பாஜக அரசு திறந்து வைத்துள்ளது.

தோடாவில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இங்குள்ள இளைஞர்கள் சிறந்த கல்விக்காக நாட்டின் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஒரு காலத்தில் இருந்தது .இன்று மருத்துவ கல்லூரி  அல்லது ஐஐடி என எதுவாக இருந்தாலும், ஜம்மு காஷ்மீரில் இடங்கள் விலை உயர்வு பன்மடங்கு உயர்ந்துள்ளன. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படும். இங்கு கல்லூரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு பயண படியும் வழங்கப்படும்.

 பயங்கரவாதம் இல்லாத சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக இருக்கும். அத்தகைய ஜம்மு காஷ்மீரை பாஜக உருவாக்க போகிறது. சுற்றுலாவை மேலும் விரிவு படுத்தவும், நீங்கள் பயணிக்க எளிதாகவும் இருக்கும் வகையில் மத்திய பாஜக அரசு இங்கு போக்குவரத்து இணைப்பை பலப்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு குடும்பமும், ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சைக்கான காப்பீடு வசதியை கொண்டுள்ளன. அதனை ஏழு லட்சம் ஆக உயர்த்த ஜம்மு காஷ்மீர் பாஜக அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

 மேலும், குடும்பத்தின் மூத்த பெண்ணின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு 18000 டெபாசிட் செய்வதாகவும் அறிவித்துள்ளது . இது தவிர, விவசாயிகள் பிரதமரின் நிதியின் கீழ் ரூபாய் 6000 பெறுகிறார்கள். இப்போது அதை பத்தாயிரம் ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *