ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் வட்டார காவல் ஆய்வாளராக சாலமன் ராஜா பணிசெய்து வருகிறார் இவரின் மேற்பார்வையில் உள்ள வாலாஜா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்
சட்டத்துக்கு விரோதமான முறைகேடுகள் நடந்து வருவதாக பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர்கள் மனம் திறந்தனர்
காட்டன் சூதாட்டம் நடைமுறையில் தலை விரித்து ஆடுகிறது சூதாட்ட ஏஜென்ட்கள் மீது அவ்வப்போது வாலாஜா போலீசார் பெட்டி கேஸ் போட்டுவிட்டு அதனைத் தடுத்து நிறுத்தியது போல பாவனை செய்கின்றனர் இந்த செயல் போலீஸ் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட மட்டுமே பயன்படுத்துகின்றனர் ஏஜென்ட்களுடன் ஆய்வாளர் சாலமோன் ராஜா ரகசியமாக கைகோர்த்து இருப்பதால்தான் வாலாஜாவில்
காட்டன் சூதாட்டம் தொடர்கதையாகி வருகிறது.
இது மட்டுமா? வயிற்றில் மருந்து எடுக்கும் தொழிலை செய்பவர்கள் வாலாஜாவில் சுமார் 10 குடும்பத்தினர் உள்ளனர் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து பலதரப்பட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றனர் இவர்களை அழைத்து செல்வதற்கு ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர் கஸ்டமர்களிடம் ஆட்டோவில் ஏற்றி செல்வதற்கு வாடகை வாங்கிக்கொண்டு வயிற்றில் மருந்து எடுப்பவர்களிடம் தனி கமிஷனும் பெற்றுக் கொள்கின்றனர்.மேலும்,
மருந்து எடுக்கும் தொழில் செய்பவர்கள் நாளடைவில் இவர்கள் சங்கம் கூட ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்
இரவு நேரங்களில் குடிமல்லூர் பாரலாற்றில் மணல் கொள்ளையர்கள் டிராக்டர் மற்றும் லாரிகளில்
மணல் அள்ளிச் செல்கின்றனர் இந்த செயல் போலீசாருக்கு தெரிந்தே நடக்கிறது
வாலாஜா போலீசார் மாமுலுக்கு ஆசைப்பட்டு ஆற்காட்டில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை வாலாஜாவில் கஞ்சா விற்பவர்களுடன் இணைத்து தொழில் செய்ய வைக்கின்றனர்
என்றவர்கள் .மேலும்,போதாதக் குறைக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா குட்கா,ஹான்ஸ்,கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெரும்பாலான கடைகளில் விற்கப்படுகிறது மாமுல் கொடுக்கும் கடைகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டு சரிவர மாமுல் கொடுக்காத கடைக்காரர்களை
குறி வைத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பார்…..பார்….. நாங்கள் புகையிலை விற்கிறவர்களை பிடித்து விட்டோமென்று காவல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கின்றனர்.மேலும்,
இன்னொரு கூத்து என்னனா? வாலாஜாவில் கலால், காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது இவர்கள் கள்ளச் சந்தையில் பிடிக்கும் மது பாட்டில்களை தேவையானதை கணக்கு காட்டி விட்டு, மீதமுள்ளதை காவல் நிலையத்திலேயே! விற்கிறார்கள் என்பதுதான் வெட்கக்கேடு என்றனர்
வாலாஜா நிலைமை இப்படி இருக்க ஆற்காடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான தக்காண்குளம், புதுப்பாடி, எசையனூர் கிராமங்களில் முன்னாள் இந்நாள் ஊராட்சி பதவியில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சில தனிநபர்கள் ,இரவு நேரங்களில் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்களில் மணல் அள்ளி செல்கின்றனர். மாமுலில் மயங்கி இருக்கும் போலீசாரோ, வருவாய் துறையினரோ! இதனைக் கண்டு கொள்வதே? இல்லை.
மேலும், வளவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச் சந்தையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அரசு மது பாட்டில்கள் விற்பனையும் ஜோரா நடைபெறுகிறது என்றனர்.
இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை சமூக ஆர்வலர்களோ! அல்லது பொது மக்களோ! தகவல் அல்லது புகார் தெரிவித்தால் தகவல் கொடுத்தவரின் முழு விவரங்கள் மற்றும் போன் நம்பர்,புகைப்படம் முதற்கொண்டு போலீசாரே! சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களை எந்த? விதத்தில் எப்படி? பழி வாங்குவது என்ற ஆலோசனையும் கொடுத்து அனுப்புகின்றனர். மீண்டும் அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவாறு தீர்வு கானும் வகையில் எவ்விதமான நடவடிக்கையும் துறை சார்ந்த அதிகாரிகள் எடுப்பதே? இல்லை.மேலும்,
வாலாஜா மற்றும் ஆற்காடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் மாமுல் வாங்கிக்கொண்டு, துணை போகும் ஒஸ்ட் அதிகாரியான சாலமன் ராஜாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி அவ்வப்போது தனது கரங்களால் பெஸ்ட் சான்றிதழ் வழங்குவதை பார்க்கும்போது மன வருத்தமாயிருக்கிறது. இது அடுக்குமா? என்ற கேள்வியோடு சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர் .
செய்தியாளர் கார்த்திக்
ராணிப்பேட்டை மாவட்டம் .