நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக பள்ளிபாளையம் பகுதிகளில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக,சமூக ஆர்வலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு 3/9/2024 அன்று, மனு அளித்தனர்.
மனுவில் கூறியது,
நாமக்கல் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதால், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு தெரியப்படுத்தியும், அதற்கான தீர்வு கிடைக்காததாலும்,
1.RI, 2.கிராம நிர்வாக அலுவலர், 3. ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள், 4. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், 5. தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், 6. அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தை திருமணம் நடைபெற்றால் இவர்கள் மாவட்ட ஆட்சியாளருக்கும், காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தவும், பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவின் மீது இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது :
இன்று 23/09/2024 திங்கள் கிழமை, மதியம் 2. 00 மணி அளவில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், உதவி காவல் ஆய்வாளர், கலையரசி அவர்கள் மனு மீதான விசாரணையை மேற்கொண்டார்.
சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக,சமூக ஆர்வலர்கள் மனுவின் மீதான நிலையை கேட்டறிந்தனர்,காவல் ஆய்வாளர் அவர்கள், இந்த மாதத்தில் ஒன்பது வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும், மேலும் இதுபோன்று குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்,
அப்பகுதியில் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு நடத்தப்படும் எனவும், குழந்தை திருமணம் செய்யும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். குழந்தை திருமணம் நடைபெறும் பொழுது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தாமாகவே முன்வந்து தெரியப்படுத்தினால், உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உதவி காவல் ஆய்வாளர் அவர்கள், மனு மீதான விசாரணை நம்பிக்கை அளிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.!!