என்றைக்கு ஆன்மீகவாதி மகாவிஷ்ணுவை கல்வித்துறை கைது செய்ததோ கல்வி துறையில் தினம் ஒரு பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது . கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகிறதா? காற்றில் தவழுகின்றார் அதுவும் கண்ணுக்குத் தெரிகிறதா?என்று கண்ணதாசன் பாடல் வரிகள். இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்துகிறது
இதுவரையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்த கல்வித்துறை, இப்போது பாலியல் பலாத்காரம், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடைய சண்டை ,அதிகாரிகளுக்குள் புரிதல் இல்லாத நிலை, அச்சத்தில் பள்ளி கல்வித்துறை இயங்கி வருகிறது. கல்வி என்பது ஒழுக்கத்தின் மறு பிரதிபலிப்பு. கல்வி என்பது கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் இதை மையப்படுத்தி மாணவர்களிடையே கல்வியின் சிறப்பு அம்சமாக இருக்க வேண்டும்.
ஆனால், மாணவர்கள் இடையே கஞ்சா, போதை பொருள், மது, பாலியல் பலாத்காரம், சண்டை சச்சரவுகள், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மரியாதை, மதிப்பு இண்மை . இது தவிர, கல்வி கற்கும் மாணவிகள் படிக்கும்போதே கர்ப்பம், இப்படி பல சூழ்நிலை கல்விக்கும்,மாணவர்களின் எதிர்கால நலனுக்கும், எதிராக இருந்து வருகிறது.
இதையெல்லாம் பள்ளி கல்வித்துறை கண்டும், காணாமல் இருந்து வந்ததால், இந்த செய்திகள் வெளியில் வராமல் மறைக்கப்பட்டுள்ளது. இப்போது மகாவிஷ்ணுவிடம் பள்ளிக்கல்வித்துறையில் ஆரம்பித்த பிரச்சனைகள், தினம் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது திமுக அரசு பள்ளி கல்வித்துறை ஒழுங்கு படுத்த முடியாத நிலைமையா?அல்லது இதை அலட்சியப்படுத்தும் நிலைமையா? ஒரு பக்கம் ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்களுக்கு பிரச்சனை வருகிறது.
அவர்கள் கேட்கக் கூடாது என்று சட்டம் போட்டு விட்டார்கள். இப்போது அந்த மாணவர்களை யார் ஒழுங்கப்படுத்துவது? கல்வியில் படிக்கும் போது ஒரு மாணவன் ஒழுக்கம் இல்லாதவனாக அவன் சமூக குற்றவாளியாகவும் இந்த தேசத்திற்கு எதிரான குற்றவாளியாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது . அதை தான் கல்வி என்பது ஒழுக்கத்தின் மேன்மை என்று அறிஞர்கள், கல்வியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை இந்த பகுத்தறிவாதிகள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்.
ஏனென்றால் இந்த பகுத்தறிவுவாதிகளே ஒழுக்கத்தின் மேன்மையை அறியாதவர்கள். எப்படியும் பேசுவது ஒழுக்கம் அல்ல. இப்படித்தான் பேச வேண்டும் என்பதுதான் ஒழுக்கம் .அதனால், இந்த கல்வித்துறை மாணவர்களை சீரழித்து வருகிறது. ஏழை, நடுத்தரமானவர்கள் இவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். பணக்கார வீட்டு பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிப்பார்கள்.
அங்கு ஓரளவுக்கு கண்டிப்பு, ஒழுக்கம் இதை எல்லாம் செயல்படுத்துவார்கள். அங்கேயும் தவறுகள் இருக்கிறது. அங்கேயும் பிரச்சனைகளை சரி செய்து கல்வித்துறையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த பிரச்சனை எல்லாம் திமுக அரசு எப்படி சரி செய்யப் போகிறார்கள்? – சமூக ஆர்வலர்கள் .