திருமாவளவன் நிலைமை சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாகி விட்டதா ? திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப் போவதாக சொல்ல,அது மிகப்பெரிய அளவில் மக்களிடையே வைரலானது. இது ஒரு விளம்பரத்திற்காக கூட எடுத்துக் கொண்டாலும், மதுவை ஒழிக்க முடியாது என்பது திருமாவளனுக்கும் தெரியும். அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.
ஆனால், மதுவை விற்பனை செய்து கொண்டிருக்கும் ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு போட்டால், இது திமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவு ஆகிவிடும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து .இதை திமுகவின் தலைமைக்கு அரசியல் கட்சியினர் முக்கியத்துவமாக ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் முதல் ஆளாக திருமாவளன், ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது.
அதன் பின்னால் என்ன நடந்தது? என்றால் ஸ்டாலின் எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள். அதாவது கட்சியை பிளவு படுத்தி, ஒன்றுமில்லாமல் ஆக்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். இது ஒரு புறம், அடுத்தது திருமணவளவன் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி இடம் கூட்டணிக்கு ரகசிய பேரம் நடத்தி இருக்கலாம் என்பது ஊர்ஜிதமாகவில்லை என்றாலும், இந்த மது ஒழிப்பு மாநாடு கூட்டணி பேரம் தான் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்ற பேச்சு.
இங்கேயும் திருமாவளவனுக்கு ஒரு சிக்கல், அதாவது திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தாலும், அதில் குறிப்பிட்ட சிலர் அடுத்த தேர்தலில் அதிமுக பக்கம் போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசுகின்ற பேச்சு. இப்படி திருமாவளவன் நிலைமை இந்தப் பக்கம் போனால் இடிக்கிறது. அந்த பக்கம் போனாலும் உதைக்கிறது. இப்படி பட்ட நிலைமையில் திருமாவளவன் சும்மா கிடந்த சங்கை கூதி கெடுத்த கதையாகி விட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள்.