நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram

நாட்டில் போலி அரசியல்வாதிகளால் படுகின்ற துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு! போலி பத்திரிகைகளால், போலி  செய்தியாளர்களால் இன்று அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். இது தவிர இவர்களால், பத்திரிகை துறையின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்றால் மத்திய அரசின் (RNI) ஐ தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த சிறிய பத்திரிகைகள், 

பெரிய பத்திரிகைகள் சர்குலேஷன் (விதியை) சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . இப்படி பத்திரிகைத்துறை கடினமான போராட்டங்களுக்கு இடையே தகுதியான பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் பத்திரிகை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

ஒரு பக்கம் பெரிய பத்திரிகைகளின் அரசியல் எதிர்த்து உயர் அதிகாரிகளால் கூட தகுதி வாய்ந்த பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், சலுகை, விளம்பரங்களை கொடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் அமைச்சர்கள் செய்தி, டிவிக்களில், பெரிய பத்திரிகைகளில் வந்தால் அதை தான் இந்த செய்தி துறை மற்றும் அமைச்சர்கள் விரும்புகிறார்கள். அதாவது போலி அரசியல் பிம்பத்தை தான் விரும்புகிறார்கள்.

எளிமையாக இருக்க வேண்டிய இடத்தில் ஆடம்பரமும், அதிகாரமும் ஆட்டம் போட்டால், மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றம். ஓட்டு கேட்கும் போது தான் 100 முறை கையெடுத்து கும்பிட்டு, நூறு முறை காலில் விழுந்து, வண்டி, வாகனங்களில் கத்திக்கொண்டு, பந்தா காட்டிக் கொண்டு, கட்சி கொடிகளை பறக்க விட்டுக் கொண்டு, இதை எல்லாம் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் காட்டினால்! மக்கள் ஏமாந்து,வாக்களித்தால், அரசியல் என்பது ஏமாற்றம். அரசியல் என்பது !

அது உங்கள் வளர்ச்சிக்காக, உங்கள் உழைப்புக்காக, உங்கள் திறமைக்காக இருக்க வேண்டிய அரசியல்! இன்று ஊழல்வாதிகளின், ரவுடிகளின் வளர்ச்சிக்காக, அரசியல் ஆகிவிட்டது. அதனால்தான் உழைப்பவர்கள் முன்னேற முடியவில்லை. இதை இளைய தலைமுறைகள், அரசியல் தெரியாதவர்கள், இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.மேலும்,

குடிகாரர்களுக்கு குடியிருந்தால் மட்டும் போதும். அவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றியோ அல்லது குடும்பத்தை பற்றியோ கவலையில்லை. யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்பவர்கள். இலவசங்கள் இவர்கள் கொடுக்க வேண்டிய தேவையே இருக்காது.இலவசத்தை ஏன் கொடுக்கிறார்கள்? ஊழல் செய்வதற்காக கொடுக்கிறார்களா? 

மக்களின் உழைப்புக்கு ஊதியம் கிடைத்தாலே போதும், நாட்டில் இலவசங்கள் தேவை இல்லை. ஏனென்றால் எந்த நாட்டிலும் இலவசம் என்பது கிடையாது. இங்கே உழைப்புக்கு ஊதியம் கிடைத்தால் போதும் என்று தான் உழைப்பவர்கள், தகுதியானவர்கள், நினைக்கிறார்கள். அதை தான் அரசியலில் விரும்புகிறார்கள். 

இங்கே உழைக்காமல் எப்படி அரசியலில் கோடீஸ்வரர் ஆகலாம்? உழைக்காமல் எப்படி பத்திரிகையில் லட்சங்களையும், கோடிகளையும் பார்க்கலாம் ?இவை எல்லாம் ஒரு போலியான பிம்பத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி வைத்துள்ளது . அதுதான் இந்த அரசியலில் மக்களுக்கு அரசியல் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்ல, இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பணியாற்றக்கூடிய நிருபர்களும், சுயநலவாதிகளாக இருப்பதால், தானும் இந்த அரசியல் ஊழல்வாதிகளோடு சேர்ந்து கொண்டு, எப்படி கோடீஸ்வரர் ஆகலாம் ?என்று போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக அக்கரை கிடையாது.போலி அரசியல்வாதிகள் சமூக அக்கறை காட்டுவது போல, இவர்களும் காட்டிக் கொண்டிருப்பார்கள்.மேலும், இவர்களுக்கு இவர்களுடைய

பத்திரிகை, தொலைக்காட்சிகள் எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்?எவ்வளவு விற்பனையாகிறது? என்ற ஒரு வியாபாரத்தை மட்டும் தான் அவர்கள் சிந்திப்பார்களே ஒழிய, மக்களுக்கு எவ்வளவு உண்மைகள் போய் சேர வேண்டும் ?அவர்கள் அரசியலில் ஏமாறக்கூடாது என்ற ஒரு அடிப்படை அறிவு கூட கிடையாது. என்னவோ இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் நாட்டை திருத்துவது போல ஒரு பிம்பம். ஆனால், திருத்துவதற்கு பதிலாக, மக்களிடம் போலியான அரசியல் கலாச்சார பிம்பத்தையும், போலியான ஊடக பிம்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.மேலும், 

இது பற்றி இந்த சிறிய பத்திரிகைகள் கூட கவலைப்படுவதில்லை. அவர்களும் மக்களிடம் எவ்வளவு உண்மைகளை கொண்டு சேர்க்க வேண்டும்? என்ற நோக்கம் இருக்குமா? இருக்காதா? தெரியவில்லை. இந்த நிலைமையில் பத்திரிக்கை துறை வியாபார நோக்கமும், போலியான ஊடக பிம்பமும், போலியான அரசியல் கலாச்சாரமும், இன்று ஊழல்வாதிகளுக்கும், அரசியல் கட்சி ரவுடிகளுக்கும், அது சாதகமாக உள்ளது. மக்கள் உண்மை தெரியாமல், ஒருவருடைய தகுதி தெரியாமல், கட்சியின் அர்த்தம் தெரியாமல், அரசியலில் வாக்களித்துக் கொண்டிருந்தால், இந்த நாட்டை சுரண்டி சாப்பிட்டு கொண்டிருப்பவர்கள். தான் முன்னேறுவார்கள் என்பதை புரிந்து மக்கள் வாழ வேண்டும்.மேலும்,  

இப்போது பொது சொத்துக்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் போய் உங்கள் உழைப்பிலே கொள்ளையடிப்பார்கள். இதைப் புரிந்து மக்கள் மாற்றத்தை நோக்கி அரசியல் வாதி என்றால் கட்சி முக்கியமல்ல, அவனுடைய செயல்பாடு, தகுதி ,நேர்மை ,உண்மை இதுதான் முக்கியம். பேச்சு முக்கியமல்ல,

பேசுபவர்கள் எல்லாம் ஊத்தமர்கள் அல்ல, ஊழல்வாதியும் உத்தமனாக பேசுவான், கிரிமினல்களும் உத்தமனாக பேசுவான், அதனால், மக்களுக்கு இந்த உண்மைகள் புரியாத வரை, அரசியல் என்பது இன்று வரை அது ஏமாற்றமாகத்தான் இருப்பதற்கு முக்கிய காரணம். இந்த ஏமாற்றத்திலிருந்து விடுபட இவர்களுடைய தகுதி என்ன? என்பதை தெரியாமல் வாக்களிப்பது ,எந்த காலத்திலும் அரசியல் என்பது ஏமாற்றமாகத்தான் இருக்கும். .அதிலிருந்து வெளி வாருங்கள். மேலும்,

இந்த போலி அரசியல், போலி அரசியல் கலாச்சாரம், போலியான ஊடக பிம்பம், இவை அனைத்தும் வாக்களிக்கும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய அரசியல் . இந்த அரசியல் பற்றி பட்டம் பெற்றவர்கள் கூட, அவ்வளவு எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு இது போலியா? அல்லது அசலா? என்று தெரியாத அளவிற்கு காட்டுகின்ற ஒரு போலியான ஊடக பிம்பம். இங்கே சால்வை கலாச்சாரங்கள், அதைக்கூட படம் பிடித்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரை, ஒருவர் தரக்குறைவாக பேசிக்கொள்வது, அதையும் படம் பிடித்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

ஆனால், மக்கள் எதற்கு வாக்களிக்கிறார்கள்? ஏன் வாக்களிக்கிறார்கள்?அவர்களுடைய உழைப்புக்கு, அவர்களுடைய திறமைக்கு, தகுதிக்கு அரசியல் பயன்கள் போய் சேர்ந்ததா? என்பதை இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் எப்பதாவது பேசியிருக்கிறார்களா? இதற்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் அரசியல்வாதி என்கிறார்கள். ஒரு கட்சி துண்டு ஒன்று தோலில் போட்டுக் கொண்டால், நானும் அரசியல்வாதி. எப்படி பத்திரிக்கையில் அடையாள அட்டை, வைத்திருப்பவர்கள் எல்லாம் செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிவது போலவும்,அந்த பத்திரிகை செய்தி வந்தாலும், வராவிட்டாலும், அதை காட்டிக் கொண்டு, பேசிக்கொண்டு இருப்பது போல, இன்று இந்த அரசியல், போலி கலாச்சாரம் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றம் ஆகிவிட்டது.அதனால்,

இங்கே ஊழல்வாதிகளும், ரவுடிகளும், கிரிமினல்களும் அரசியல் கட்சிகளில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் . இவர்கள் அனைவரும் இந்த போலியான அரசியல் கலாச்சாரத்திற்கு தகுதியானவர்கள்.இவர்களுக்கு தகுதியானவர்கள் போலியான ஊடக பிம்பத்தை ஏற்படுத்தும் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் தான் என்று தீர்மானிக்கிறார்கள். மேலும்,

மக்களிடம் சேவையை மட்டுமே செய்யக்கூடிய அரசியல்வாதிகள், இந்த போலியான ஊடக பிம்பத்தை விரும்புவதில்லை. ஊழல்வாதிகளும், போலி அரசியல்வாதிகளும் இன்று அதிகமாக கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை விரும்புவதன் நோக்கமே இதுதான். ஏனென்றால் இங்கே நீங்கள் சொல்வது தான் செய்தி. நீங்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், ஊழல் செய்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும், குற்றவாளியாக இருந்து நிரபராதியாக பேசிக் கொண்டு, அரசியல் செய்யலாம். ஊழல்வாதியாக இருந்து இங்கே அரசியல் செய்யலாம். 

கொலை குற்றவாளி, கிரிமினல் குற்றவாளிகள் எல்லாமே கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடக பிம்பங்கள் இன்று மக்கள் அதை எல்லாம் பெரிதாக பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு தேவை எந்த முகமாக இருந்தாலும், பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது நல்ல முகமா? அல்லது கெட்ட முகமா? எந்த முகமாக இருந்தாலும், இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வந்தால், அது ஒரு பெரிய மரியாதைக்குரியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறானது. செய்தி தான் உண்மையின் முக்கியமே தவிர,

இங்கே பெரிய ஊடகத்தில் பொய்யும், போலி அரசியலும்,  இருந்தால் மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? இதனால் ,தகுதியான அரசியல் கட்சிகள், தகுதியான அரசியல்வாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து மக்களின் அதிகார வாக்குகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.அது மட்டுமல்ல, ஊழல்வாதிகள் நடத்தும் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள், அவர்களுடைய ஐ.டி. விங்குகள் ஊழலுக்கு ஒத்து ஊதி கொண்டு, அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கும்,மத்திய, மாநில அரசின் செய்தி துறை சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதைதான் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா முக்கியமாக கவனித்து! இந்த போலி ஊடக பிம்பத்தையும், போலி பத்திரிகைகளையும், போலி செய்தியாளர்களையும் முற்றுப்புள்ளி வைத்து, அதற்கு எப்படி முடிவு கட்ட முடியும்? என்பதை ஆய்வு செய்து, முக்கிய முடிவு எடுக்க ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், இங்கே வலியுறுத்துகிறோம் .

மேலும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் கார்ப்பரேட் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே சொந்தமானதா? அவர்கள் மட்டும்தான் அதிலே முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள பொறுப்புக்களை கொடுத்து விட்டு அங்கே எப்படி பத்திரிக்கை சுதந்திரம் அதில் இருக்கும்? எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்துவிட்டு, 

இது போன்ற கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து , பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைத்திருப்பது சுயநல நோக்கத்திற்கானது .அங்கே பொதுநல நோக்கம் இருக்காது.மேலும்,  இந்த சிறிய பத்திரிகைகளும், அதன் இணையதளங்களும் சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால், அவை நாட்டில் வளர்ச்சி பெறும் என்று அதை வளர விடாமல் தொடர்ந்து அரசியல் செய்யும் வித்தை தான் இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளின் வித்தை .

இதையும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ,ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *