அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram
சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய நூற்றுக்கு 95 சதவீதம் அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இது சில கட்சிகளில் அதிகமாகவும், சில கட்சிகளில் குறைவாகவும் உள்ளது . இவர்கள் எப்படி ஏழை நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபடுவார்கள்? மேலும், இதற்கு உடந்தையாக இருப்பது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் உழைக்கும் மக்களையும், ஏழை எளிய, நடுத்தர மக்களையும் முட்டாளாக்கி, அரசியலில் பத்திரிக்கை வியாபாரம் செய்கிறதா ? தவிர,
இதுதான் தமிழ்நாட்டு கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் (நான்காவது தூண்) அரசியல் பத்திரிகை, வியாபாரம். இதை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு, இந்த உண்மையை தெரிவிக்கிறேன் . மேலும், இவர்களால் ஊழல் ஆட்சி தான் ஏற்படுத்த முடியுமே ஒழிய, நேர்மையான ஆட்சி ஏற்படுத்த முடியாது . இதற்கு என்ன காரணம்? ஒருவன் சமூகத்திற்கு அல்லது இந்த நாட்டிற்கு தன் உழைப்பை அர்ப்பணிக்க வேண்டும் என்றால், அவனுடைய தியாகம் அதில் இருக்க வேண்டும். அப்படி தியாகம் செய்ய அரசியல் கட்சிகளில் இருக்கின்ற ரவுடிகள் கிரிமினல்கள் சுயநலவாதிகள் முன் வருவார்களா? எந்த எந்த அரசியல் கட்சியில் தங்கள் வாழ்க்கையை சமூக மக்களுக்காக அர்ப்பணிக்க கூடியவர்கள் இருக்கிறார்கள்? என்பதை தெரியாமல், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களை ஏமாற்றி பத்திரிக்கை அரசியல் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.மேலும்,
பேசுவதற்கு ஊழல்வாதிகளும், அடியாள் அரசியல்வாதிகளும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், செயல்பாட்டில் எதுவுமே இருக்காது. அதாவது திருடன் கையில் சாவியை கொடுத்தால், வீட்டுக்காரன் எப்போது தூங்குவான்? என்ற நோக்கத்திலேயே தான் இருப்பான். அது தான் இன்றைய அரசியல் கட்சியினர் நிலைமை. அதனால், மக்கள் இவர்களிடம் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் .ஆயிரம், ஐநூறுக்கு, பிரியாணிக்கு, பாட்டிலுக்கு போகின்ற கூட்டம் அவர்களும் ஒரு சமூக விரோதி தான். ஏனென்றால், இந்த ஊழலுக்கு முக்கிய காரணமானவர்கள்.இவர்களையெல்லாம் கட்சிக்காரர்கள் என்று இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள், அரசியல் கட்சிகளும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் கூட்டத்தை காண்பித்து பொதுமக்களை ஏமாற்றும் வேலை .
அதாவது போலி அரசியல் பிம்பத்தையும் , போலி ஊடகம் பிம்பத்தையும் இருவரும் சேர்ந்து மக்களிடம் அரசியலில் மக்களை ஏமாற்றும் வேலை தான் இருவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்திய மாநில அரசின் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா முக்கிய ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் .
மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், இணையதளத்தில் இந்த செய்திகளை, செய்தி துறை உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றும், ஏன் நடவடிக்கை அவர்களால் எடுக்க முடியவில்லை? எத்தனையோ சட்டங்கள் இவர்களுக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்ளும் போது, இந்த சட்டங்களை மாற்ற முடியாதா? நான் சொல்வது இந்த பத்திரிகைகளின் சட்டத்தை சமூக நன்மைக்காக, இந்த நாட்டு மக்களின் நன்மைக்காக, இந்த தேசத்தின் நன்மைக்காக, இந்த சட்டங்களை மாற்றுவது அவசியம் . இதையும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ஆய்வு செய்யுங்கள்.மேலும்,
இங்கே அரசியல் கட்சி என்று அடியாட்கள் கூட்டம் கூட்டி, மாநாடு! அதிலும் சமூக மாநாடு, அந்த மாநாடு எல்லாம் போஸ்டரில் தான் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் . கூலிக்கு கூவும், கூட்டமாக பல பத்திரிகைகளும்,தொலைக்காட்சிகளும், இதில் சமூக நலனுக்காக இல்லாமல், அவர்களை மக்களிடம் தியாகிகள் போல், விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் அவரவர் கட்சியின் பத்திரிக்கை தொலைக்காட்சிகளும் அதில் அடங்கும் .அதாவது, இது ஒரு போலியான ஊடக பிம்பம். இதில் பொதுமக்கள் ஏமாறாதீர்கள் . அதிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும்.
இல்லை என்றால், தொடர்ந்து இந்த பத்திரிகைகள் காட்டுகின்ற ஊழல்வாதிகள், கிரிமினல்கள், அடியாட்கள் இந்த நாட்டை அரசியல் கட்சியினர் என்று சொல்லிக் கொண்டு,செல்லரித்துக் கொண்டிருப்பார்கள். தகுதியான அரசியல்வாதிகள், போலி விளம்பரங்களை விரும்புவதில்லை.சமூக நலனிலும், தேசத்தின் நலனிலும் அக்கறை கொண்டவர்கள்.அவர்களுக்கு நாட்டை கொள்ளை அடிக்க தெரியாது. சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தெரியாது. பொது சொத்துக்களை அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க தெரியாது.பொதுமக்களின் வரிப்பணத்தை போலி கணக்குகள் எழுதி சாப்பிடத் தெரியாது. இவர்கள்தான் தகுதியான அரசியல்வாதிகள்.மேலும்,
எப்போது கார்ப்பரேட் ஊடகங்களில் பேசிவிட்டு போகின்ற அரசியல் தமிழ்நாட்டில் ஏற்பட்டதோ, அப்போதே நாட்டில் ஊழல் ஆரம்பித்து விட்டது. இந்த பேட்டி எல்லாம் ஊழல்வாதிகள் பேச்சில், தங்கள் திறமையை காட்டுவதற்கு கார்ப்பரேட் ஊடக பத்திரிக்கை, வியாபாரத்தை பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் பெரிய கௌரவமாகவும், பெருமையாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .இந்த பெரிய பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் மைக் முன்னாடி பேசி விட்டால் சினிமாக்காரர்கள் ,கற்பனை உலகில் நடிப்பது போல, ஏதோ பெரிய சாதனை சாதித்து விட்டது போல அவர்கள் நினைப்பு.சமீபத்தில் கூட துரைமுருகன் நடிப்பு ஒரு தொலைக்காட்சியில் நன்றாக இருந்தது.
சினிமா வேறு, அரசியல் வேறு, சமூகம் வேறு இவை அத்தனைக்கும் இந்த போலியான அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளை பயன்படுத்துகிறார்கள். அதனால், அரசியல்வாதிகள் இந்த காட்சிப்படுத்துகின்ற ஊடகங்களை வைத்துக் கொண்டு, மக்களை முட்டாளாக்க அரசியலை தேர்ந்தெடுக்கக் கூடாது.அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வேலை அல்ல. அதனால்,
மக்களுக்காக உழைப்பவர்கள் யார்? என்பதை மக்கள் முடிவு செய்யுங்கள். இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பேசுபவர்கள் எல்லாம் மக்களுக்காக உழைப்பவர்கள் போல் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் .இங்கே இன்டர்நேஷனல் பிராடு முதல் தமிழ்நாட்டு பிராடுகள் வரை அரசியல் கட்சிகளில் தங்களை மக்கள் சேவகனாக காட்டிக்கொண்டு, பேசிக்கொண்டு, ஏமாற்றுவது அரசியலா? அதற்கு தான் அரசியல் கட்சியா? அதற்குத்தான் அரசியல் கட்சித் தலைவரா? ஒவ்வொரு அரசியல் கட்சியிலும்,உழைக்கும் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? இலவசமாக பேசியிருப்பார்கள் .
அதனால், அரசியலில் படித்தவர்கள் ஒரு பக்கம், படிக்காதவர்கள், உழைக்கும் மக்கள் ஒரு பக்கம், யாருக்கு வாக்களிப்பது? தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, திமுக செய்வதுபோல் காட்டி, இவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள் .அதாவது மக்களுக்கு இலவச பிச்சை போட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த இலவச பிச்சை, படித்த மக்களுக்கும், பண்பாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் தேவையில்லை என்கிறார்கள்.
அதனால்,ஓட்டுக்கு பணமும் ,இலவசமும் எந்த மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது. இந்த அரசியல் கட்சிகளுக்காக போலி செய்திகளையும், பொய்களையும், அவர் இதைப் பேசினார், இவர் இப்படி பேசினார் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் ஊடகம்பத்தை நம்பி அரசியலில் ஏமாறாதீர்கள் .அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும் அவசியமான ஒன்று. இங்கே அவர்களுக்கு நல்லது செய்வதற்கு பதிலாக, அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய அடியாட்களை, கிரிமினல்களை கோடீஸ்வரர்களாக மாற்றுகிறது.இவர்களால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. தீமைகள் தான் அதிகம். இது தவிர, தற்போதைய அரசியலில்,
கார்ப்பரேட் கம்பெனி மற்றும் பிசினஸ் மேன், தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள், இவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்குவதற்கு தான் மந்திரி பதவி, எம்எல்ஏ பதவி ,எம்பி பதவி நாட்டில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சாமானிய ஏழை, நடுத்தர மக்கள், உழைக்கும் மக்கள், இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு எந்த கட்சியிலும் தமிழ்நாட்டில் ஆளே இல்லை . நாட்டில் எப்போது கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் இந்த அரசியல்வாதிகள் பேசிவிட்டு ஊழல் செய்ய ஆரம்பித்தார்களோ, அப்போது இருந்து நாடு மிக மோசமான நிலைக்கு அரசியலை கொண்டு வந்து விட்டார்கள் .
இன்றைய அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், அரசியல் எட்டக் கணியாகி விட்டது. இது பற்றி படித்த இளைஞர்கள் இவர்களிடம் சிபாரிசுக்கு சென்று பாருங்கள். உண்மையை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நன்றாக ,அழகாக பேசி அனுப்புவார்கள். தம்பி இன்டர்வியூ வந்தா வாப்பா . எப்படியோ டிஎன்பிஎஸ்சி ஒன்று இல்லை என்றால் ஏழை நடுத்தர மாணவர்கள் அரசு வேலைக்கு எட்டி கூட பார்க்க முடியாது. அதிலும் எந்த அளவுக்கு நேர்காணலில் திருப்பி அனுப்ப முடியுமோ திருப்பிக் கொண்டே தான் இருக்கிறார்கள் .
அதனால், பணத்திற்காக வாக்களிக்காதீர்கள்.அதை உங்கள் அப்பா, அம்மா முதல் உங்கள் குடும்பத்தினர் வரை அந்த நிலையிலிருந்து அவர்களை மாற்றுங்கள். ஏனென்றால், 50 ஆண்டு காலமாக இதை தான் அதிமுகவும், திமுகவும் ஓட்டுக்கு பணம் வாங்கும் பழக்கத்திற்கு ஆளாக்கி விட்டார்கள். ஊழல் செய்த அமைச்சர்களை சட்டத்தின் முன் நிறுத்தினாலும், ஜெயிலுக்கு போக வேண்டியவர்களை நீதித்துறை அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதா?
ஊழல் செய்த ஒரு அமைச்சரை உச்ச நீதிமன்றம் வரைக்கும் போய் கூட, செந்தில் பாலாஜி போன்றவர்கள் திமுகவில் மீண்டும் அமைச்சர்களாக ஆக்குகிறார்கள் என்றால், இவர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்? மக்கள் சிந்தியுங்கள். அதனால்தான் ,உங்களை போதைக்கு அடிமையாக்கி கொண்டிருக்கிறார்கள். நீங்கள் போதைக்கு அடிமையானாலும், உண்மையை சிந்தியுங்கள். அது உங்கள் குடும்ப நலனுக்காவது இருக்கட்டும். மேலும், நீங்கள் தேர்வு செய்யும் அரசியல்!
உங்களுக்கான அரசியல் !அரசியலில் உழைக்கக் கூடியவர்கள் யார்? நடுத்தர மக்களுக்காக யார்? அது எந்த அரசியல் கட்சி? பேசுபவன் எல்லாம் செய்பவன் அல்ல, செய்பவன் எல்லாம் பேசுபவன் அல்ல, என்பதை உணர்ந்து, புரிந்து செயல்பட வேண்டும். அதுதான் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கையின் வெற்றி .