சாம்சங் தொழிற்சாலையின் சி ஐ டி யு சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தொழிலாளர்கள் நலனை விட அங்கீகாரம் முக்கியமா ? -சாம்சங் தொழிலாளர்கள் .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram

சாம்சங் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தொழிலாளர்களும், தங்களுடைய குடும்ப நலன் கருதி போராட்டத்தில் ஈடுபடாமல், வேலைக்கு செல்வதுதான் உங்களின் எதிர்காலமும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலமும் பாதிக்காது .

நாட்டில் தொழில் நடத்துவது என்பது பெரிய நிறுவனமாக இருந்தாலும், சிறிய நிறுவனமாக இருந்தாலும், தற்போது அது மிகப்பெரிய போராட்டம் தான். இதற்கு முக்கிய காரணம் தொழிலாளர்கள். தொழிலாளர்கள் ஊதியம் என்பதை கேட்டு பெறலாம் .சலுகை என்பதை கேட்டு பெறலாம் .ஆனால், வாழ்க்கையை கேட்டு பெற முடியாது. அது காலத்தின் கையில் உள்ளது. அதனால் போராடுவதில் வெற்றி இருந்தாலும், தோல்வி இருந்தாலும் வாழ்க்கையின் எதிர்காலம் என்பது அவரவர்க்கு மிக முக்கியமானது.

இங்கே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை அனுப்பி பேச்சுவார்த்தையை போராடும் தொழிலாளர்களிடம் பேசிய பேச்சு வார்த்தை போராட்டம் முடிவுக்கு கொண்டு வந்தும், அதை முடிவுக்கு கொண்டு வராமல், சி ஐ டி யு  சங்கம் வரும் 21ஆம் தேதி சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேவையற்ற ஒன்று. 

இன்று பொருளாதார நெருக்கடியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாம்சங் கம்பெனி 2 வருடம் மூடிவிட்டு பிறகு திறந்தால் கூட, அதற்கு ஒன்றும் பெரிய அளவில் பாதிப்பு வந்து விடப் போவதில்லை. ஆனால், தொழிலாளர்கள் இரண்டு வருடம் வேலைக்கு போகவில்லை என்றால், அவர்களுடைய குடும்ப வருமானம், அவர்களுடைய வருமானம் நிச்சயம் பாதிக்கப்படும் .இங்கே தொழிலாளர்கள் இந்த யூனியன் பேச்சைக் கேட்டு ஏமாறுவது ,உங்கள் குடும்ப நலத்திற்கு நல்லதல்ல.

அவர்கள் ஏதோ யூனியன் அதிகாரத்தை வைத்து, அந்த கம்பெனி முதலாளியை மிரட்டலாம் என்றோ அல்லது அரசை நெருக்கடிக்கு தள்ளலாம் என்றோ நினைத்தால் ,அதனால் பாதிக்கப்பட போவது அவர்கள் அல்ல தொழிலாளர்களின் குடும்பங்கள் தான். இன்று படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல், போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேலை கிடைத்தவுடன் அந்த நிர்வாகத்தையே சீர்குலைக்கும் அளவுக்கு போராடிக் கொண்டிருப்பது தவறான ஒன்று. 

மேலும், சாம்சங் தொழிலாளர்களிடம் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகத்தில் சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. அதில் ஊழியர்கள் வசதிக்காக ஏசி பஸ்கள் இயக்குவது, ஐயாயிரம் ரூபாய் சம்பளம் உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகள் நிர்வாகத்தால் ஏற்கப்பட்டன. அதை ஒரு பிரிவு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால், சி ஐ டி யு சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என சாம்சங் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தீர்ப்பு வந்தவுடன் அதன்படி செயல்படும் என அமைச்சர் ராஜா தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார் . மேலும், இந்த கம்பெனியில் பிளஸ் டூ, ஐடிஐ, முடித்தவர்கள் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர். மேலும், தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் பேச்சைக் கேட்காமல், வேலைக்கு செல்வது உங்களுடைய எதிர்காலத்தின் நன்மை .

 இங்கே தொழிலாளர்களின் நன்மையை விட சி ஐ டி யு சங்கத்தின் அங்கீகாரம் தான் பெரிதாக உள்ளது. அதனால், இதை புரிந்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *