அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram
திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் உள்ள ஏரிகளில் தொடர்ந்து 30 ஆண்டு காலமாக நீர்வளத் துறையின் அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழல்களை தட்டி கேட்டால், கேட்கும் பொது மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நடக்கும் போராட்டங்களாக தொடர்ந்து இது இருந்து வருகிறது .
இதை மாவட்ட ஆட்சியரே கிராம மக்களிடம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் . மேலும், தொடரும் இந்த ஊழலை தடுக்க மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இந்த இரண்டு ஏரிகளையும், வனத்துறை எடுத்து அதன் பாதுகாப்பில் முக்கிய செடிகளை வைத்து, அவர்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இந்த ஊழல் பிரச்சனைக்கு முக்கிய தீர்வாக அமையும். அதுவரை இந்த நீர்வளத் துறை அதிகாரிகள், இந்த கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக தான் இருந்து வருவார்கள் .
தவிர, இந்த கருவேல மரத்தின் மதிப்பு தெரியாமல் அரசாங்கத்தை தொடர்ந்து 30 ஆண்டுகளாக நீர்வளத்துறை அதிகாரிகள் குறைந்த மதிப்பீடு செய்து ஏமாற்றி வருகிறார்கள். இது சார்கோல் பிசினஸ் செய்பவர்கள் .இந்த மரங்களை தொடர்ந்து ஏலம் எடுத்து வருகிறார்கள். இது பற்றி எமது இணையதளத்திலும், பத்திரிகைகளிலும், செய்திகள் வெளி வந்துள்ளது . முன்னாள் இருந்த மாவட்ட ஆட்சியர் இந்த புகார்களை எல்லாம் கிடப்பில் போட்டு, அவரும் இந்த கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும் .
அதனால்,இந்த கிராம பஞ்சாயத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் நீர் வளத் துறை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இது பற்றி கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பிலும், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக கிராமத்திற்கு வந்து, இதுபற்றி கிராம மக்களிடம் விசாரணை செய்ய இச் செய்தியின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர் .
மேலும், நீர்வளத்துறை அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை, இந்த கிராமத்தின் ஆர்வலர்களுக்கும், அவர்களுக்கும் உள்ள போராட்டமாக தான் இது தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தற்போது இந்த கிராமத்தில் உள்ள சித்தேரி, பெரிய ஏரிகளில் நடந்துள்ள கருவேல மரங்கள் ஊழல் தான். இப்படி 300 ஏக்கரில் சுமார் ஐந்து கோடி மதிப்புள்ள கருவேல மரங்கள், தற்போது வெறும் 50 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இது கிராமத்தில் மீண்டும் இந்த பஞ்சாயத்து நிர்வாகிகளால் 60 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இது கிராம மக்களுக்கு தெரிந்த உண்மை. அந்தப் பணம் கிராம கணக்கில், இதுவரை வரவு வைக்கவில்லை என்று கிராம மக்கள் பேசி வருகின்றனர். மேலும் ,இது சம்பந்தமாக இந்த ஏலத்தில் முக்கிய புள்ளியாக இருந்த நீர் வளத்துறை அதிகாரி ரமேஷ் மாற்றப்பட்டார்.
தற்போது அந்த ஏரி மரங்கள் முழுதும் வெட்டப்பட்ட பிறகும் கூட, தற்போது வருவாய்த் துறைக்கு சொந்தமான ஆற்றில் உள்ள கருவேல மரங்களை வெட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப்பற்றி முழுமையாக கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தால் உண்மை என்ன? என்று கிராம மக்கள் தெரிவிப்பார்கள்.
மேலும், தொடரும் இந்த கருவேலம் மரம் ஊழல் மாவட்ட ஆட்சியருக்கு இச் செய்தியின் வாயிலாக நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுப்பாரா?