அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram
நாட்டில் போலி சாமியார்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதேபோல் தான் போலி அரசியல்வாதிகளால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி அழிவு . வாழ்க்கையில் உண்மையை தேடினால்! சந்தோஷம், நிம்மதி .
நாட்டின் ஆன்மீகவாதி என்று போலி சாமியார்கள் கடவுளையும், அதன் நம்பிக்கையையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் . ஆடம்பரத்திற்கு ஆண்டவன் இல்லை . கடவுள் மனிதனை படைத்தார். படைத்த மனிதன் இடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தார். ஆடம்பரங்களை அவர் எதிர்பார்க்கவில்லை. உண்மையான பக்தியும், தூய்மையான உள்ளமும், எதிர்பார்ப்பற்ற இறைவழிபாடும், இது மட்டும் தான் இறைவனுக்கு தேவை.ஆனால்,கோயிலுக்கு என்று நன்கொடை வசூல் செய்வது, உண்டியல் வைத்து வசூல் செய்வது, குறி சொல்லி ஏமாற்றுவது, இவையெல்லாம் கடவுள் பெயரால் செய்யும் பாவங்கள். இதற்கு அதிகப்படியான தண்டனை தான் இருக்கும் .மேலும்,
நாம் செய்த முன் வினைகளில் இருந்து நல்லதும், கெட்டதும் அதற்கு தகுந்தார் போல் கொடுப்பார். அதில் பக்திக்கு என்று ஒரு தனித் துவம் உள்ளது . அதுதான் மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு . விதி மார்க்கண்டேயனுக்கு 16 தான் . ஆனால், இறைவன் அவனை என்றும் 16 ஆக்கிவிட்டார். இறையருள் இல்லாமல் மனித வாழ்க்கை! சந்தோஷம், நிம்மதி எதுவுமே இல்லை .விஞ்ஞான உலகம், பகுத்தறிவு உலகம், ஒரு பொய்யும், ஏமாற்றமும் தான். அதில் மக்களுக்கு போலி வாழ்க்கையும், ஏமாற்றமும் தான் மிஞ்சும் . இன்றைய விஞ்ஞான நாகரிக உலகத்தில், ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை.
தற்போதுள்ள எத்தனையோ குடும்பங்களில் கணவனுக்கு, மனைவி மீது நம்பிக்கை இல்லை. மனைவிக்கு, கணவன் மீது நம்பிக்கை இல்லை. பெற்ற பிள்ளைகள் மீது நம்பிக்கை இல்லை. கல்யாணம் செய்து ஆறு மாதம் காலம் கூட வாழ்க்கை நடத்தாமல், பிரிந்து விடுகிறார்கள் .இப்படி பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாம் விஞ்ஞான வாழ்க்கையின் நாகரீக உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எது நாகரீகம்? அநாகரிகம்? எல்லாம் இப்போது நாகரீகம் ஆகிவிட்டது.
அந்த கால குடும்பங்கள் ,அதற்கு முன்பு வாழ்ந்த காலத்தில் எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லை .ஆனால், மனிதன் உண்மை, அன்பு, நேசம், பாசம் இது எல்லாவற்றையும் அனுபவித்து, இயற்கையோடு, இயற்கையாக வாழ்ந்தான். ஆனால், விஞ்ஞான உலகம், இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதன் சத்தியம், தர்மம், நேர்மை, உண்மை இதன் அடிப்படையில் வாழ்ந்தான், மனசாட்சியோடு வாழ்ந்தான், மனசாட்சியோடு பேசினான், கடவுள் அவனுக்கு அருகிலே இருந்தார். அவனுடைய பிறவி முடிந்ததும் இறைவனுடைய பாதங்களில் சென்று சரணடைந்தது.மேலும்,
இந்த கலியுகத்தில் பிறப்பதே மிகப்பெரிய பாவம். அதுவும் இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மக்கள் பொய் ,ஏமாற்றி பிழைப்பது, வஞ்சகம், சூழ்ச்சி, போட்டி, பொறாமை,மிருகங்களை விட கேவலமானவர்களாக , அதுவாவது பழகிவிட்டால் கடிக்காது. ஆனால், மனிதன் எத்தனை வருடம் பழகினாலும், பணத்திற்காக, பொருளுக்காக துரோகம் செய்கிறார்கள். ஒருவர் பொருளை ஒருவர் அபகரித்துக் கொள்வது, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாமல் வாழ்வது, இவை அத்தனையும் இன்றைய கலி காலத்தின் சாபங்கள்.
இதிலிருந்து மக்கள் வெளி வருவதற்கு, இறைவனுடைய அருள் இன்றி முடியாது. இந்த அருளை பெறுவதற்கு கூட, சூழ்நிலை அதாவது இவர்களுடைய கர்மா தடுக்கும். ஒரு பக்கம் போலி சாமியார்கள், போலி ஜோதிடர்கள் அறிவுரை, மற்றொரு பக்கம் சமூகத்தில் போலியான அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், அவர்களுடைய பேச்சுக்கள், ஜாதி, மதம் இவை எல்லாம் ஒரு ஆணவத்தையும், மாயையும் மக்களிடம் உருவாக்கி பேசுவது, பிற ஜாதிகள், மீது வன்மத்தை உருவாக்கி, சண்டைகளையும், மோதல்களையும், இதை தான் இந்த மக்கள் பார்த்துக் கொள்ளும் முடியும்.நாட்டில் போலி அரசியல்வாதிகளால் ஊழலும், சமூக குற்றங்களும் தான் அதிகரிக்கும் .மேலும்,
ஒருவன் இப் பிறப்பில் உயர்வடைய வேண்டும் என்றால், இறை பக்தியைத் தவிர, வேறொன்றும் இல்லை. அவன் எந்த ஜாதியில் பிறந்தாலும், எந்த மதத்தில் பிறந்தாலும், அந்த உயிர் உயர் நிலைக்கு அடைய முடியும்.தகுதி என்பது, தரம் என்பது ஜாதியால் வாங்க முடியாது. அவரவர் குல மேன்மையால், குடும்ப முன்னோர்களால், செய்த புண்ணிய பலனால், பிறருக்கு உதவியும், நன்மையும் செய்யக்கூடிய உள்ளங்கள் இருக்குமே ஒழிய, உயர்ந்த ஜாதியில் பிறந்ததால், தாழ்ந்த ஜாதியில் பிறந்ததால், இவை ஒரு பொருட்டல்ல. தாழ்ந்த ஜாதியில் பிறந்த நந்தனாருக்கு இறைவன் காட்சி கிடைத்தது. உயர்ந்த ஜாதியில் பிறந்த பிராமணனுக்கு அது கிடைக்கவில்லை. இன்று வரை தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளக் கூடிய பிராமண ஜாதிகள், தெய்வநிலை அடையாமல் இருக்கிறார்கள் என்று தான் நமது சித்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,
திமுக ,தி க, அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள்,சீமான் போன்ற பல அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டில் ஜாதி வேற்றுமைகளை, அரசியலில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . ஆண்டவனுக்கு ஜாதி, மதம், கட்சி எதுவுமே இல்லை . ஆடம்பரமே இல்லாத ஒரு இடத்தில், ஆடம்பரத்தை தேடி கடவுளை அடைய முடியாது . கடவுள் அன்பின் எளிமை. ஒரு சாதாரண விளக்கு ஏற்றி வைத்து கும்பிட்டாலே போதும், அங்கே இறைவன் இருப்பான். கோவிலுக்கு போய் தேங்காய் உடைத்து, வழிபாடு செய்துதான், இறைவன் அருளைப் பெற முடியும் என்பது இல்லை. அது அவர்களின் நம்பிக்கை .
அந்த நம்பிக்கையும் தவறு என்று சொல்ல முடியாது. வேண்டுதல், நம்பிக்கை, பக்தி, பிராத்தனை உண்மையானதாக இருந்தால், இறையருள் நிச்சயம் உண்டு. அந்த அருளும், அவன் அருள் இன்றி அவனை வணங்க முடியாது . இறைவனை பணத்தால் விலைக்கு வாங்க முடியாது. பொருளால் விலைக்கு வாங்க முடியாது . அப்படி இருக்கும்போது,அப்படி பல லட்சங்களால், கோடிகளால், தங்க ஆபரணங்களால், உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு, இறைவனை விலைக்கு வாங்க முடியுமா? மேலும்,
ஒழுக்கம் இல்லாமல், வாய்க்கு வந்ததெல்லாம் பேசி, தர்மத்திற்கு உதவாத கருத்துகளை எல்லாம் பேசி,மனசாட்சிக்கு விரோதமாக பேசி, கடவுளை ஒருகாலும் அடைய முடியாது. அவனுடைய ஒரு சிறு துரும்பு பகுதிக்கு கூட போக முடியாது. இந்த உலகம் விஞ்ஞான வளர்ச்சியால் இன்று பறக்கும் அளவில் வந்திருக்கிறது. எவ்வளவு பறந்தாலும், எங்கே போனாலும் ஒவ்வொரு நிமிஷத்திலும், மனித வாழ்க்கை விஞ்ஞானத்துடன் ஆபத்துக்கள் அதிகம் என்பதை மறந்து தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒருவன் நடந்து போகும்போது, அவனுடைய ஆபத்து மிகவும் குறைவானது, சைக்கிளில் போகும்போது அதைவிட கொஞ்சம் அதிகம், அதுவே மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி ,ரயில் ,ஆகாய விமானம், இதில் எல்லாம் மனிதனுடைய பயணம் விபத்து என்று வந்துவிட்டால், நினைப்பதற்கு கூட அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த அளவிற்கு விஞ்ஞான வாழ்க்கை . போய் சேரும் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். இதுதான் விஞ்ஞானத்தின் உண்மை.
ஆனால், அந்த காலத்தில் மாட்டு வண்டியில், குதிரை வண்டியில் பயணம் செய்தார்கள். அது விபத்துக்கள் எதுவும் இல்லை. இவ்வளவு மக்கள் நெருக்கமும் இல்லை. சந்தோஷம், நிம்மதி, போலியான வாழ்க்கை, போலியான ஆடம்பரம், போலியான கௌரவம், எதுவுமே அந்த மக்களுக்கு தெரியாது. உழைப்பு, உண்மை ,நேர்மை, சத்தியம் இதன் அடிப்படையில் தான் மனித வாழ்க்கை இருந்தது. இயற்கையோடு வாழ்ந்தார்கள், விவசாயத்தை வியாபாரத்தை மட்டுமே நம்பினார்கள்.இன்று,
பல கோடிகள் வைத்திருக்கலாம், பல சொகுசு கார்கள் வைத்திருக்கலாம், பல மாடி வீடுகளை வைத்திருக்கிறான், கட்சியில் பெரிய பதவி என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம், அதுவும் தவிர, அரசாங்கத்தில் உயர்ந்த பதவி, அதிகாரத்தில் உயர்ந்த பதவி ,எத்தனை பதவி இருந்தாலும், வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் இருக்கிறதா? வெளி வேஷங்கள் பிறருக்காக, வாழ்வது வாழ்க்கை அல்ல, தனக்காக வாழ்கின்ற வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் இருக்க வேண்டும். அது அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும், நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், அதில் மனசாட்சியுடன் வாழ்ந்தால் அதுவே போதும். இன்று மனசாட்சி இல்லாமல் பணத்திற்காக, வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பணத்திற்காக எப்படியும் பேசுகிறார்கள். பணத்திற்காக, பதவிக்காக, அரசியலில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டி கூட எதுவுமே,மக்களுக்கு செய்யாமல், போராட்டம் என்று வாயிலே பேசிவிட்டு, பேட்டி என்று எதிர்த்து குரல் கொடுத்து விட்டு, இதுதான் அரசியல் என்று படித்த பட்டதாரிகள் முதல் படிக்காதவர்கள் வரை ஏமாந்து கொண்டிருக்கிற அரசியல் .இதைதான் பெரிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் என்ற கார்ப்பரேட் ஊடகங்கள் போலியான ஊடக பிம்பத்தை அரசியலில் உருவாக்கி வைத்துள்ளது. என்பதை மக்கள் இப்போதாவது உண்மையை உணருங்கள்- சமூகநலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.மேலும்,
வாயிலே பேசிவிட்டு, அதற்கு ஒரு தலமான பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பேசி விட்டு, வீடியோ போட்டு விட்டு, சீமான் மாதிரி, திருமாவளவன் மாதிரி, இந்த சமூக மக்கள் அரசியல் தெரியாதவர்களாக இருப்பார்கள். இவர்களை எளிதில் ஏமாற்றுவது கைவந்த கலையாக உள்ளது. வன்னியர் சமுதாயம் ராமதாஸ் ஏமாற்றியதால் அவரைத் தூக்கி, சமுதாயம் வெளியில் போட்டு விட்டார்கள். அதுபோல்,ஏமாந்த மக்கள் இவர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமுதாயங்கள் இன்னும் ஏமாந்துக் கொண்டிருக்கிறது.மேலும்,
நீங்கள் எந்த சமுதாயத்தில் பிறந்திருக்கிறீர்களோ, அந்த சமுதாயத்தில் உழைத்து முன்னேற வேண்டும். அதை விட்டுவிட்டு, அடுத்த சமுதாயத்தைப் பார்த்து உழைக்காமல், நானும் அதைவிட அதிகமாக வர வேண்டும் என்றால், அது ஏமாற்றி தான் வர முடியும். இப்போது ஏமாற்றுவதற்கு தான் இந்த அரசியல் கட்சிகள் கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கின்ற ஒரு கூட்டம், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி வாழ நினைக்கிறார்கள். இப்படி வாழ நினைப்பது தவறான ஒன்று.
உழைக்காமல் வருகின்ற எந்த பொருளும், ஒரு மனிதனுக்கு சந்தோஷத்தை கொடுக்காது. நீ அரசியல் கட்சியில் சம்பாதித்தாலும், அதுவும் உனக்கு எந்த சந்தோசத்தையும் கொடுக்காது .அது உழைப்பில்லாமல் வந்தால், நிம்மதையும், நிறைவும் எந்த காலத்திலும் அதில் இருக்காது. அதை அனுபவிக்க கூடிய உன்னுடைய குடும்பம், மனைவி, மக்கள், உறவுகள் எல்லாம் அந்த பாவத்தின் கணக்கில் அவர்களுக்கும் பங்கு உண்டு. இது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இயற்கையின் கணக்கு வேறு, நாட்டின் சட்டம் வேறு, சட்டத்தை ஏமாற்றலாம். இயற்கை என்று கடவுளை ஏமாற்ற முடியாது. உன்னை படைத்த ஆண்டவனுக்கு உன்னை எங்கே வைக்க வேண்டும்? என்பது அவருக்கு தெரியும்.
அதனால், ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்துவிட்டு, முட்டாள்களுக்கு தலைவனாகி விட்டோம் என்று கர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தால், அறிவாளிகள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அரசியல் தெரிந்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாட்டில் உள்ள அத்தனை முட்டாள்களும் சேர்ந்து பதவிக்கு வந்தால், அங்கே ஒரு அறிவாளி என்ற ஒருவன் இருந்தால் தான், அதை உங்களால் எந்த நல்லதையும் செயல்படுத்த முடியும். அப்போதும் அங்கே ஒருவன் படித்த ஒரு அறிவாளி தேவைப்படுகிறான். இப்போது ஸ்டாலினுக்கு அதே நிலைமைதான். மத்திய அரசில் மோடியின் திறமை, சாணக்கியதனம் ஸ்டாலின் இடம் இல்லை .அப்படி தான் இருக்கும். ஒரு மனிதனுக்கு,ஒரு மனிதன் வித்தியாசம் இருக்க தான் செய்யும்.மேலும்,
பறையடிப்பதாலோ அல்லது வெட்டியான் வேலை செய்வதாலோ, அவர்கள் தாழ்ந்தவர்கள் ,கேவலமானவர்கள் என்று சொல்லுகின்ற திருமாவளவன் கருத்து தவறானது. கடவுள் இப்படிப்பட்டவர்களுக்கு தான் இறை அருளை எளிதில் கொடுப்பார். ஏனென்றால் ஒருவன் சுடுகாட்டில் பிணத்திற்கு செய்கின்ற சடங்குகள் இறைவனுக்கு செய்கின்ற சேவை. அதை அரசியலுக்காக அசிங்கப்படுத்தக் கூடாது. கடவுள் அவர்களுக்கு இட்ட ஒரு வேலை . அந்த வேலையும் கூலி வாங்கிக் கொண்டுதான் செய்கிறார்கள் . அதை செய்பவர்களை அரசியல் லாபங்களுக்காக, அதை செய்வதால் கேவலமானவர்கள் என்று அரசியலுக்காக பேசுகின்ற கருத்து தவறானது. இது ஆண்டவனின் கணக்கில் உயர்ந்தது .அனாதை பிணத்தை அடைக்கம் செய்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்கிறார்கள் .
மேலும்,இன்றைய சினிமா, இன்றைய தொலைக்காட்சிகள் எதுவுமே மக்களுடைய நன்மைக்கும், வாழ்க்கையின் வழிகாட்டிக்கும் தகுதியானது அல்ல. அவையெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி காலத்தோடு முடிந்து விட்டது . சினிமாவையும், சீரியலையும் பார்த்து வாழ்க்கையில் ஏமாறும் மக்கள் தான் அதிகம். எதிர்பார்ப்புகள், தவறான வழிகாட்டுதல் எந்த மக்களுக்கும் பயன் தராது. இன்று தவறானவர்களுக்கும், தகுதி இல்லாதவர்களுக்கும் வாக்களித்துவிட்டு எவ்வளவு துன்பங்களை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள்? என்பது மனசாட்சி உள்ள மக்களுக்கு தெரியும் .மனசாட்சி இல்லாமல் பேசுகின்ற உன்னிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது. மனசாட்சி இல்லாமல் எழுதுபவனிடம், சமூக நலனை எதிர்பார்க்க முடியாது .
மனசாட்சி இல்லாமல் வாழ்பவன் இடம், உதவி எதிர்பார்க்க முடியாது . இதிலிருந்து ஒவ்வொரு அரசியல் கட்சியினருடைய அடிப்படை தகுதிகள்? தலைவரின் அடிப்படைத் தகுதிகள் ?இந்த அடிப்படை குணங்கள் உள்ளவர்கள்? எத்தனை கட்சிகளில்? எப்படி இருக்கிறார்கள் ?என்பதை அது உங்கள் ஜாதியாக இருந்தாலும், உங்கள் மதமாக இருந்தாலும், நீங்களே புரிந்து கொள்ளுங்கள் . இது யாரையும் குறை சொல்லவோ அல்லது விமர்சனம் செய்யவோ, சொல்லப்பட்ட கருத்து அல்ல. மக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட கருத்து .