அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ……!

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உட்பட 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது. இது 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மேற்படி உரிய நல வாரியங்களில் தங்களை உறுப்பினர்களாக https;//tnuwwwb.tn.gov.in என்ற ஆன்லைன் இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற பின்னர் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி ,வீட்டு வசதி திட்டம் ,ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் பணியிடத்து விபத்து மரணம், முதலான நிதி உதவி கோரி பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களை ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிதி உதவித் தொகை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக முதலமைச்சர் சுதந்திர தின உரையில் இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியம் 26 12 2023 அன்று உருவாக்கப்பட்டது. இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் (ISM) பதிவினை துரிதப்படுத்த திருவள்ளூர் தொழிலாளர்கள் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு மையம் 15 10 2024; 

22 10 2024 மற்றும் 29 10 2024 ஆகிய மூன்று நாட்களில் முற்பகல் 10. 00 முதல் 12 மணி வரை வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள்(ISM) மற்றும் கிக் (GIG) தொழிலாளர்களுக்கான பதிவுகள் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிடம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், பெரும்பாக்கம் கிராமம் தொழிலாளர் உதவி ஆணையர் (பொறுப்பு)  அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது .தொழிலாளர்களின் ஆவணங்களை நேரில் சமர்ப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும், உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, பிறந்த தேதிக்கான ஆவணம், பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் அடுத்தது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தவிர, இது தொடர்பான சந்தேகங்களுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண்  044 – 27 66 5 160 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், மேற்கண்ட தகவல் திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் செல்வராஜ் /(பொறுப்பு) தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *