அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram
சென்னையில் ஹிந்தி மாத விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர். என். ரவி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள (தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் ) என்ற வார்த்தைகள் பாடலில் இடம்பெறவில்லை .
இதில் திராவிடம் என்ற சொல் நீக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு . மேலும், இந்த விழாவில் பேசிய ஆளுநர் ரவி கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தவிர, இந்து திணிப்பு என்று கூறி தமிழக மக்களை இந்தி கற்க விடாமல் தடை செய்கின்றனர் .
தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் உலகம் முழுவதும் தமிழைக் கொண்டு செல்ல என்ன செய்தார்கள்? தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர். நாட்டில் 23 மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மூன்றாவது மொழி அனுமதிக்கப்படவில்லை.இது ஒரு பிரிவினைவாத நோக்கம். இந்த முயற்சியில் ஈடுபடுபவர்களால், இந்தியாவை பிரிக்க முடியாது. இந்தியாவின் பலமான ஒரு அங்கமாக தமிழகம் எப்பொழுதும் இருக்கும் என கூறினார். ஆளுநரின் இந்த கருத்து அரசியலாக மாறியுள்ளது . இது உண்மையான கருத்து. நியாயமான கருத்து. இதில் தவறு ஒன்றும் இல்லை. உண்மையை தான் ஆளுநர் கூறியிருக்கிறார் . ஆனால், இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் .
மேலும், திமுக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு ஒரு படி மேலே சென்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது. ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்க நினைக்கும் அவரை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் .
ஆர் எஸ் எஸ் ரவி அவர்களே உங்கள் சித்தாந்தத்தை எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், செருப்பைக் கழட்டி அடிப்பாங்க என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் . பொறுப்பான பதவிக்கு தகுதி இல்லாமல் பேசுவது அந்தப் பதவிக்கு இவர் தகுதியானவரா? அடுத்தது, அதுவும் தமிழக மக்கள் செருப்பை கழட்டி அடிப்பாங்க அவர் பேசியது, தமிழக மக்களின் நெஞ்சங்களில் யாருக்கும் வலிக்காது.
நீங்கள் பேசுவது தான் வலிக்கிறது .காரணம், தமிழ்நாட்டையும், தமிழையும் உயர்த்தை தான் பேசியிருக்கிறார். தாழ்த்தி பேசவில்லை. இந்த தமிழ் சமூகம் உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் அதை மக்களுக்கு புரிய வைக்கவில்லை .தற்போது ஆளுநர் ஆர்.என் .ரவி புரிய வைத்திருக்கிறார் .