திருவள்ளூர் வினோத் குமார் ஜெயின் நகைக் கடையில் மோசடி திருவள்ளூர் வட்டார பகுதி மக்கள் உஷார் ! உஷார் .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 21, 2024 • Makkal Adhikaram

திருவள்ளூர் நகரத்தில் உள்ள வினோத் குமார் ஜெயின் நகைக் கடையில் நம்பினால் ஏமாற்றி நகையை அபகரித்துக் கொள்வார்கள் . அப்படிதான் இந்த நகைக்கடையில் வைத்த மோதிரம் ஒன்று நம்பி ரசீதியை அவர்களிடமே இருக்கட்டும் என்று பத்திரிக்கை ஆசிரியரே சொல்லியுள்ளார் . அதன் பிறகு ஒரு வருடத்திற்குள் அந்த நகையை மீட்டலாம் என்று பத்திரிக்கையின் ஆசிரியர் வந்து அசோக்குமார் ஜெயினை கேட்டு உள்ளார்.

 அவர் ஒரு மணி நேரம் தேடிப் பார்த்துவிட்டு, இங்கே எந்த நகையும் வைக்கவில்லை என்று தெரிவித்துவிட்டார் . பிறகு சில தினங்களுக்கு முன் பத்திரிகையின் ஆசிரியருக்கு அசோக் குமார் ஜெயின் போன் செய்கிறார் . உங்களுடைய நகை ஏலத்தில் வந்துள்ளது. நீங்கள் வந்து மீட்டுக் கொள்ளலாம் என்கிறார். சரி என்று அவரும் அவரிடம் போய் இந்த விஷயம் குறித்து நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்து தங்களிடம் கேட்டபோது நகையே இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்.

இப்போது தெரிந்த அந்த போன் நம்பர், அப்போது எண் தெரியவில்லை? அதுவும் ஒரு மணி நேரம் தேடிப் பார்த்தீர்கள் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். இது தவிர, அவரிடம் கேட்டதற்கு நீங்கள் 11 மாதம் ஆனால் வீட்டுக்கு தபால் அனுப்பிவீர்களே, அது ஏன் அனுப்பவில்லை? மேலும், அதற்கு அவர் தபால் அனுப்பினோம் ரிட்டன் வந்து விட்டது என்கிறார். அதாவது திரும்பி வந்துவிட்டது என்கிறார். நான் சொன்னேன் எனக்கு மாதம், மாதம் டெல்லியில் இருந்து பத்திரிக்கை வருகிறது. திருவள்ளூரில் இருந்து விடையூருக்கு லெட்டர் வராதா? அதற்கு அவரால் சரியான பதில் தெரிவிக்க முடியவில்லை . 

மேலும், சரி இந்த நகையை நான் மீட்டுக் கொள்கிறேன் . அசல் பதினோராயிரம் வட்டி அதற்கு 12 ஆயிரம் போடுகிறார் அசோக் குமார் . நான் சொன்னேன் ,தவறு உங்களிடத்தில் அதிகமாக இருக்கிறது. நான் வந்து கேட்காமல் போயிருந்தால் பரவாயில்லை. நம்பிக்கையின் பெயரில் வைக்கப்பட்ட நகை. பிறகு தெரிந்தவர்கள், என்னை பற்றி தெரியும் .அதன் காரணத்தினால் தான், நகை உங்களிடம் வைக்கப்பட்டிருக்கிறது என்று வந்து கேட்டேன். நீங்கள் வைக்கவே இல்லை என்று சொல்லி விட்டீர்கள். ஒரு வருடத்தில் மீட்டு இருந்தால், எனக்கு அதிகப்படியாக ஒரு 2000 ரூபாய் அல்லது 3000 ரூபாய்க்குள் தான் வந்திருக்கும்.

 ஆனால், கொடுத்த அசலுக்கு மேலே வட்டியை கேட்கிறார்கள். அதுவும் எப்படி அசோக் குமார் பேசுகிறார் என்றால், நகையின் தற்போதைய மதிப்பு ரூ: 28,000 என்கிறார். எனக்கு ஒரு விதத்தில் மனசுக்கு சங்கடமாக தான் இருந்தது. ஒரு அவசரத்திற்கு நகை வைத்தோம். ஆனால் அதை மீட்கலாம் என்று வந்தாலும் இல்லை என்று சொல்லி விட்டீர்கள் . பிறகு, மூன்று வருடம் கழித்து நகை ஏலத்திற்கு வருகிறது என்று போன் செய்கிறார். தவிர, ஏங்க இந்த ஏல நோட்டீஸ் கூட ஒவ்வொரு 11 மாதமும் அனுப்பி இருக்க வேண்டும் அதுவும் அனுப்பவில்லை என்று கேட்கிறேன். அதற்கு அவர் அது டிமாண்ட் நோட்டீஸ் எங்களுக்கு எப்போது டிமாண்ட் இருக்குமோ, அப்போதுதான் அனுப்புவோம். என்கிறார் . இவருக்கு வட்டிக்கடையில் நகை வைத்தால் ஏலத்திற்கு வரும்வரை வாடிக்கையாளர்களுக்கு எந்த அறிவிப்பும் செய்யக்கூடாது என்று சட்டம் சொல்கிறதா ? 

மேலும், 11 மாதம் ஆனாலே வட்டி கட்ட சொல்லி கடிதம் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு வருகிறது . அல்லது போன் கால் வருகிறது. போஸ்ட் ஆபீஸில் பணம் கொடுத்தால், இந்த கடிதம் எல்லாம் அனுப்பியது போல் ரிட்டன் வாங்கிக் கொள்கிறார்கள் . இவர்களுடைய மோசடிக்கு தபால் அலுவலகம் ஒரு பக்கம் உடந்தையாக இருக்கிறது . மேலும், இவர் ஏல நோட்டீஸ் அறிவிப்பு கொடுத்தாலும், சட்டப்படி பதிவுத்தபால் அனுப்பி வைக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. அதைக் கேட்டாலும், எங்களுக்கு அப்படி ஒன்றும் சட்டம் இல்லை என்கிறார் . இது எல்லாம் தவிர்த்து மனசாட்சிப்படி நான் அந்த நகையை மீட்டுக் கொள்கிறேன். ரூ 18,000 கொண்டு போய் கொடுத்தால், முடியாது என்று திருப்பிக் கொடுத்து விட்டார் . 

ஒரு சாதாரண சிறிய நகைக்கே இவ்வளவு மோசடி வேலை பார்க்கிறார்கள் என்றால், இன்னும் பல ஆயிரக்கணக்கில் , லட்சக்கணக்கில் நகை வைத்தால் இவர்கள் ஏன் பாமர மக்களை மோசடி செய்ய மாட்டார்கள் ? மேலும், என்னைப் போன்ற பத்திரிகையாளர்களையே மோசடி செய்கிறார் என்றால், சாதாரண பாமர மக்கள் எவ்வளவு ? 

அதனால், இவர்களுடைய நகைக்கடை உரிமத்தை திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் நடவடிக்கை எடுத்து ரத்து செய்ய வேண்டும் . இதற்கான புகாரையும் ,நேரிலும் கொடுக்க உள்ளேன். மேலும், எவ்வளவு பேர் இவர்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?  வினோத் குமார் ஜெயின் நகைக்கடையில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்க புகார் எண் : 9344794091 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *