நாட்டில் அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள்,அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் மக்களுக்கு இனி உடந்தையாக இருப்பார்களா? – உச்ச நீதிமன்ற தீர்ப்பாணை.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

இன்று தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்து ,வீடுகளைக் கட்டிக் கொள்வது, அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகள், மாடி வீடுகள் கட்டிக்கொண்டு ,அதை இடிக்கும் போது எவ்வளவு வேதனைப் படுகிறார்கள் ?இது எல்லாவற்றிற்கும் யார் காரணம்?

ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் ,இன்னொரு பக்கம் அரசு அதிகாரிகள் ,இந்த ரெண்டு பேரால்தான் இந்த மக்கள் இப்படிப்பட்ட வீடுகளை 40 வருடமாக குடியிருந்தோம், 50 வருடமாக குடி இருந்தோம், எங்களை இன்று இந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்துகிறார்கள் என்று கண்ணீர் விடும்போது, இவர்களுக்கு தாங்கள் செய்தது தவறு என்பதை ஒருவர் கூட சிந்திப்பதில்லை .

மேலும்,அதே போல் இந்த தவறுகளுக்கு உடந்தையாக இருந்த அரசியல் கட்சியனர்களும் ,அரசு அதிகாரிகளும், முதலில் இவர்களுக்குத் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.

ஏனென்றால் ,இப்போது அரசு புறம்போக்கு நிலம் என்று தெரிந்து ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், கட்டும் வரை, அந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அதற்கு எப்படி ரசீது போட்டார்கள் ?அடுத்தது மின் இணைப்பு கொடுத்தார்கள்?பட்டா ,சிட்டா கொடுத்தார்கள்? கடன் வாங்க அனுமதி கொடுத்தார்கள்? இதற்கு துணைபோன அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் யார்? யார் ?இவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

இப்படிப்பட்ட தவறுகளால் தான் நாட்டில் அரசு நிலம் கையகப்படுத்தப்படுகிறது .ஒரு பக்கம் அரசு புறம்போக்கு நிலம் !இன்னொரு பக்கம் கோயில் நிலம் !இந்த இரண்டு நிலங்களிலும் ,இன்று மக்கள் வீடுகளைக் கட்டி விட்டு ,அதை இடிக்கும் போது ,அவர்கள் மிகவும் வேதனைப்படுகிறார்கள் .அந்த வேதனை உண்மையிலேயே வருத்தமாக தான் இருக்கிறது.

அது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகள் கழித்து, கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் போது ,அதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது ?என்பதை எல்லாம் சிந்திக்க வேண்டும். மக்கள் அரசியல் கட்சியினர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, குறைந்த விலைக்கு விற்று விடுவார்கள் .

அதை நம்பி வாங்கி ஏமாறும் மக்கள் ,வீடுகளை கட்டி குடியிருந்து பிறகு எடுக்கும்போது எவ்வளவு பாதிப்பு அவருக்கு அதன் மூலம் ஏற்படுகிறது. அப்படிதான் மேகமலை காட்டில் வசிக்கக்கூடிய மக்கள் ,அங்கு சகலவிதமான சுதந்திரங்களும், சொத்துக்களுடன் வாழ்ந்து விட்டு, இன்று அவர்களை அப்புறப்படுத்தும் போது, அவர்கள் மிகவும் வேதனைப்படுகிறார்கள். தங்கள் உயிரை கூட மாய்க்க துணிகிறார்கள்.

இதற்கு காரணம் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக எதையாவது ஒன்று பேசிக்கொண்டு, சட்டத்தை அவமதிக்கிற வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் இருந்து வருகிறது.

இன்று உச்சநீதிமன்றமே இதில் தீர்ப்பளித்து இருந்தாலும் ,அதைக் கூட குறை சொல்லிக் கொண்டு, இருக்கிறார்கள் .என்றால் நாட்டில் அரசியல் கட்சிகள் சட்டத்தை மதிக்காமல் வாழ்கிறார்களா? அல்லது இந்த அப்பாவி மக்களை ஓட்டுக்காக எப்படியும் பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களா? தவறு செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்ற அதிகாரிகள் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்கள் அதற்கு உடந்தையாக இருந்துவிட்டு, இப்போது அதை இடிக்கும் போது மக்கள் படுகின்ற வேதனைகளையும் ,துயரங்களையும் யார் பொறுப்பு ஏற்பது? அதனால் தான் நீதிமன்றம் இப்போது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேகமலை ஆக்கிரமிப்பு குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதிலிருந்து மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை கைமாற்றிக் கொள்வது ,👍விலைக்கு வாங்குவது போன்ற மனநிலை இருந்து வெளியேறுவார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *