ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் லாலாபேட்டை அடுத்த கொண்டம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட பொதுமக்கள் நேற்று நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில்மாவட்ட. ஆட்சியரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறி இருப்பதாவது
எங்கள் ஊராட்சி பகுதியில் சுமார் 3000 திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பகுதியில் சுமார் 600 குடும்பங்களும், ஆதி திராவிடர் பகுதியில் 20 குடும்பங்களும் உள்ளன.
எங்கள் கிராமத்தில் சாதி இந்து பகுதியினரே மெஜாரிட்டியாக உள்ளனர். தற்போது இந்த ஊராட்சிக்கு அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த குமார் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் ஆதி மிராவிடர் பகுதிக்கு இதுவரையில் எந்த வேலையும் செய்து தரவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் கிராமத்தில் உள்ள தெருக்கள் மற்றும் நடைபாதைகளை சுத்தம் செய்யும்போது சாதி இந்துக்கள் வாழும் பகுதிக்கு அனைவரையும் வேலை செய்யச்சொல்கிறார்.
ஆதி திராவிடர் பகுதியை சுத்தம் செய்யும் போது அந்த பகுதியை சேர்ந்தவர்களை மட்டுமே சுத்தம் செய்ய சொல்கிறார். மறைமுக தீமண்டாமையை கடைபிடிக்கிறார். மேலும் ஆதி திராவிடர் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாருவதில்லை. குழாய் மற்றும் பழுப்பு லைன், மின் கம்பங்கள் உடைந்தால், மின் விளக்குகள் பழுதானால் பஞ்சாயத்து மூலம் சரிசெய்து தராமல், நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள் என்கிறார்.
இதுவரையில் எங்கள் பகுதியில் நாங்களே பணம் வசூல் செய்து குறைகளை சரி செய்துக்கொள்கிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பொன்னையாறு கால்வாயில் பாலம் கட்டித்தர பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி மன்ற தலைவர் பாகுபாடுடன் நடந்துக்கொள்கிறார். ஊராட்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இதனை கண்டுக்கொள்வதே இல்லை. சாதி இந்துக்கள் குடியிருக்கும் பகுதியின் பின்புற பகுதியில்தான் எங்கள் பகுதி உள்ளது.
எல்லாவற்றிக்கும் அப்பகுதியைத்தான் கடந்து செல்ல வேண்டும். இறந்தவர்களின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாதி இந்துக்கள் பகுதி வழியாகத்தான் வருகிறது. அதே பிணத்தை அவ்வழியாகவே தூக்கிக்கொண்டு புதைக்கச் சென்றால் தடுத்து நிறுத்துகின்றனர். பொன்னை பாலாறு கால்வாயில் பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. கழுத்தளவு தண்ணீரில் கயிறு மூலம் பிணத்தை அக்கரைக்கு எடுத்துச்செல்கிறோம்.
பிணத்தை சுமந்து செல்வதற்க்கு சுடுகாடு பாதையில்லை. ஏற்கனவே முன்னோர்கள் பயன்படுத்தி வந்ததும், தற்பொழுது கிராம கணக்கில் உள்ளதுமான 13அடி சுடுகாட்டு பாதையை கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் சின்னப்பா என்பவரின் மகன் பன்னீர் ஆக்கிமித்து பாதையை நிலமாக்கி சுற்றிலும் வேலி அமைத்து வீடு கட்டி கேட் போட்டு பூட்டி வைத்துள்ளார். நாங்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு மயானத்தை கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக கொண்டகுப்பம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகராக இருந்த ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்த T.M.பாலசுப்பிரமணி என்பவர் பன்னீரிடம் பெருந்தொகையை இலஞ்சமாக வாங்கிக்கொண்டு
பிணம் புதைத்து வைத்திருந்த இடத்தை JCP இயந்திரம் மூலம் பட்டா போட்டு சமன்படுத்தி தமதாக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னீருக்கு பணபலமும், படை பலமும் அரசியல் செல்வாக்கும் இருப்பதால், சுடுகாட்டு பாதையை மீட்டு எடுக்க முயற்சி செய்யும் நபர்களை ஆட்களை வைத்து மிரட்டுகிறார், அடிக்கிறார். இவரால் எங்களுக்கு எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து சுடுகாட்டு பாதையை மீட்பு பணியில் ஈடுபடாதவாறு பார்த்துக்கொள்கிறார்.
அவரை மீறி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அதிமுக-வில் பெரிய பதவியில் வகிக்கும் அரசியல்வாதிகளை வைத்து அதிகாரிகளை மிரட்டி அடக்கி வைக்கின்றார். அதிமுக அரசியல்வாதிகள் பன்னீரை பார்த்து சுடுகாட்டையே ஆட்டைய போட்டிருக்க பராவாயில்லை நீ என்று அவரின் திறமையை பாராட்டி சிரிக்கின்றனர். இது சம்மந்தமாக வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசினால்
மழுப்பலாக பதில் சொல்லி பன்னீர்க்கே ஆதாரவாக பேசி எங்கள் கோரிக்ககைகளை தட்டி கழிக்கின்றனர். பிற கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் யார் தலையிட்டாலும் சரிகட்டி விடுகிறார். அப்பகுதியில் மெஜாரிட்டியாக ஓட்டு இருப்பதால் அரசியல்வாதிகளும் அவர்களுக்கே ஆதரவாக மாறிவிடுகின்றனர். சுடுகாட்டு பாதையை அக்கிரமிப்பு செய்த பன்னீர்மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்ததால் அதனை விசாரிக்கும் துறை சார்ந்த அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், ஊரக வளர்ச்சித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பன்னீருடன் சாதி அடிப்படையில் ஒருங்கிணைந்து விடுகின்றனர்.
அவர்கள் இந்த சம்பவம் குறித்து பேசிக்கொள்ளும்பொழுது SC ஆட்களுக்கு பாலமும், சுடுகாட்டு பாதையும் ஒரு கேடா என்று கேலி கிண்டல் செய்து சிரிக்கின்றனர். எல்லா அதிகாரிகளையும் அணுகி விட்டோம். இதுவரையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே கனம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்கள் நிலைமையை கருத்தில்கொண்டு
பொன்னையாறு கால்வாயில் பாலம் அமைத்து தரவும் சுடுகாட்டுப்பாதையை மீட்டு தந்து தனி மயானம் அமைத்து தர உதவி செய்ய வேண்டுமென்று மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.