அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்மொழி திறனறிவுத் தோ்வை 7,939 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழக அரசு சாா்பில், பிளஸ் 1 பயிலும் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் 1,500 பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவா்கள் 750 பேருக்கும், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 750 பேருக்கும் என்ற வகையில் வழங்கப்படும் இந்த உதவித்தொகையை பெற, தமிழ்மொழி திறனறிவுத் தோ்வில் மாணவா்கள் வெற்றிபெற வேண்டும். இத்தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 28 மையங்களில் நடைபெற்ற தோ்வில் பங்கேற்க 8,224 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில், 7,939 மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கேற்றனா். 285 போ் தோ்வில் கலந்துகொள்ளவில்லை. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.