அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram
சேலம் மாவட்டம், காகாபாளையம் மேம்பாலம் பகுதியில் வழித்தடம் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காகாபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்ால் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் இருவழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு மட்டும் வழித்தடம் விடப்பட்டது. ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வழித்தடம் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் வழித்தடம் அமைக்கவில்லையாம். இந்த நிலையில் கடந்த ஆண்டு பாலம் வேலைமுடிந்து செயல்பட்டில் உள்ளது. இந்த நிலையில் காகாபாளையம் பகுதியில் வசிப்பவா்கள் அனைவரும் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமாா் 5.கி.மீ. தொலைவு மகுடஞ்சாவடிக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.காகாபாளையம் பிரிவு சாலையில் இருந்து மேம்பாலம் சாலைக்கு நேரடியாக வழித்தடம் அமைக்க பொது மக்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் காா்த்திக் நேரில் வந்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை மனுவாகப் பெற்று உயா் அதிகாரியிடம் முறையிட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.