வெடித்த சர்ச்சை. திமுக முக்கிய புள்ளியின் அமைச்சர் பதவி பறிப்பு.? முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு.!

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram

 திமுக கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் ராஜ கண்ணப்பன். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை இழிவு படுத்தியதால் சமீபத்தில் துறை மாற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. அதாவது சென்னை ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான 411 கோடி ரூபாய் நிலத்தை அவர் தன் மகன்களுடன் சேர்ந்து ஆக்கிரமித்ததாக சென்னை அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நேரடியாக புகார் எழுதி அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தொடர்ந்து சர்ச்சைகள் மற்றும் புகார்கள் எழுவதால் தற்போது அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இதுபோன்ற ஊழல் புகார்கள் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதாலும் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தை கணக்கில் கொண்டும் தற்போது திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *