அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram
தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாடு! நாளை விழுப்புரம் சாலையில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயின் அரசியல் மாநாடு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகை பார்வையாளர்கள், தமிழக இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பலதரப்பட்ட அரசியல் கட்சியினர் தவிர, தமிழக மக்கள் ஆவலுடன் உற்று நோக்கும் மாநாடாக இருக்கிறது.
இதில் விஜயின் அரசியல் ! மற்ற அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு மாற்றமாக இருக்குமா? அல்லது பத்தில் 11 ஆக இருக்குமா? தவிர, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பேசியே மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் . என்றுதான் பெரும்பாலான அரசியல் கட்சியினர் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள்.அவர்களுக்கு சேவை என்பது கடினமான ஒன்றாக உள்ளது. மேடையிலும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் பேசிவிட்டு, விவாதத்தில் கலந்து கொண்டு, அவர்களுடைய கருத்துக்களை சொல்லிவிட்டு. எம் பி ,எம் எல் ஏ, மந்திரியாகி கோடிகளை பார்க்க வேண்டும்.
இதற்கு தான் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் முதல் ஜாதி கட்சிகள், மத கட்சிகள் வரை ,ஒருவரை ஒருவர் மிஞ்சும் விதமாக ஊடக பேச்சில் தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான், தமிழ்நாட்டில் அரசியல் என்பது மக்களுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது .மேலும் ,அந்தப் போட்டியில் ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து அதிமுக, திமுகவையும், திமுக, அதிமுகவையும், பாமக, விடுதலை சிறுத்தைகள், பிஜேபி, காங்கிரஸ் ,மதிமுக இந்த கட்சிகள் ஒருவரை பற்றி ஒருவர் தாக்கி பேசிக்கொள்வது, அரசியல் ஆகிவிட்டது. இந்த பேச்சை விளம்பரப்படுத்தி கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அரசியல் வியாபாரம் போல பத்திரிக்கை வியாபாரமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் மாற வேண்டும். இது தமிழ்நாட்டை ஊழலில் கொண்டு போய் விட்டு விட்டது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த பத்திரிகைகள் இன்னும் வளர்ச்சி அடைந்து சமூக நலனுக்காக தொடர்ந்து போராட முடியும்.அது தமிழகத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருக்கிறது . ஆனால், இதற்கு எதிராகவும், கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு ஆதரவாகவும் அரசு இருந்தால், இந்த பத்திரிகைகள் எப்படி வளர்ச்சி அடையும்?
மேலும், நாட்டில் அரசியலை தூய்மைப்படுத்த சமூக நலன் பத்திரிகைகள் அவசியம் தேவை. இதைப்பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இது சம்பந்தமான செய்திகளை கொடுத்து வருகிறது. ஆனால், அதிகாரிகள் சர்குலேஷன் என்ற ஒரு வட்டத்துக்குள்ளே பத்திரிகையை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சட்டம் சமூகத்தின் நலனுக்காக குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் அது பொருந்தும். சமூகத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறு, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.நேற்று கூட உள்ளாட்சி அமைப்புகளின் சட்டங்கள் மத்திய அரசு மாற்ற வேண்டும். அதைப்பற்றி இதுவரை எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி வெளிவரவில்லை .
மேலும், இன்றைய மக்களின் மனநிலை, அதற்கு ஏற்ப அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான அரசியலை தமிழக வெற்றி கழகத்தால் கொடுக்க முடியுமா? அதற்கு ஏற்றார் போல், அவர்களுடைய கட்சியினர் தங்களை தியாகம் செய்ய தயாரா? அர்ப்பணிப்புடன் கூடிய சேவை இன்றைய அரசியல் கட்சியினர் இருப்பார்களா? சொத்து சேர்க்கும் நிலையில் தான் அரசியல் கட்சியினர்இருக்கிறார்களே ஒழிய கௌரவத்திற்காக சேவை செய்யும் நோக்கத்துடன் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறது? என்பது தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியாவது இருக்குமா?
மேலும், விஜய் தமிழக மக்களுக்கு ஒரு நேர்மையான நல்லாட்சியை கொடுக்க முடியும் என்றாலும், அதற்காக அதிமுக, திமுக அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எவ்வளவு போராட வேண்டி இருக்கும்? தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சியினர் பல கோடிகளிலும், லட்சங்களிலும் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பவர்கள். நூற்றுக்கு 99 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பவர்கள் .தவிர,
ஆட்சியில் 50 ஆண்டு காலமாக மாறி மாறி தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆட்சியில் இருந்து வந்துள்ளது. அவர்கள் பொருளாதாரம் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சியடையவில்லை. இப்படி ஊழலிலும், ரவுடிசத்திலும் பலமானவர்களாக இருக்கக்கூடிய அதிமுக, திமுக அரசியல் கட்சியினரை எதிர்த்து தமிழக வெற்றிக்கழக கட்சி கட்சியினர் அரசியலில் எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா ?
மக்கள் உண்மையை விட போலிகளை அதிகமாக நம்புகிறார்கள். பொய்யை உடனே எடுத்துக் கொள்கிறார்கள் .அந்த அளவிற்கு உண்மையைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அரசியல் மாற்றம் என்பது ஆண்டவன் கையிலா? அல்லது இந்த மக்களின் கையிலா ? – ஆசிரியர் .