அக்டோபர் 28, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும், இது பற்றிய எதிர்வினை அரசியல் பிஜேபியை தவிர வேற எந்த கட்சியிலும், அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை.
மேலும் இவர் மோடியை அட்டாக் செய்திருப்பது அரசியலில் அனுபவம் இன்மை தான் தெரிவிக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி? மோடி செய்த சாதனைகள், செயல்பாடுகள் இந்தியாவுக்கு வந்த இதுவரை எத்தனை பிரதமர்கள் செய்திருக்கிறார்கள்? அவர்கள் செய்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு விஜய் சொல்லட்டும்? பிறகு மோடி செய்த கரப்ஷன் பற்றி பட்டியலிடட்டும் ?பிறகு ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் விஜய் இப்போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைத்த ஒரு குழந்தை.
மோடி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்? அதனால் ஏற்பட்ட நஷ்டம்? பல ஆயிரக்கணக்கான கோடிகள் உலக வங்கியில் இவர்கள் வாங்கி வைத்து விட்டுப் போன கடன்? அந்த கடனுக்கு ஒவ்வொரு ஆண்டும் கட்ட வேண்டிய வட்டி? பல்லாயிரம் கோடி? இப்படி பல சிக்கல்களை இந்தியாவில் உருவாக்கி வைத்து விட்டது போனார்கள். இது அரசியல் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை .மேலும், மோடி ஒரு ட்விட் போட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். சந்தோஷம் விஜய்! என்னைப் பற்றி பேசியதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
ஆனால், நீ இளைஞர் படைகளை திரட்டி தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும். அதுதான் என்னுடைய பாராட்டு என்று தெரிவித்துள்ளார். இது தவிர, விஜயின் பேச்சு மற்ற அரசியல் கட்சியினர் தண்ணீர் குடித்திருக்கிறார்கள். சிலர் மருத்துவமனை சென்று வந்ததாகவும் தகவல். ஒரு சிலருக்கு அட்டாக் வந்தது என்று கூட கேள்விப்பட்டேன் .ஆனால், இப்படிப்பட்ட கேவலமான அரசியல் செய்தவர்களுக்கு தான் அல்லது செய்து கொண்டிருப்பவர்களுக்கு தான் நெஞ்சு வலிக்கும் .அது பிஜேபிக்கு வலிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.
மேலும், விஜய் இந்த 40 எம்பிக்கள் மோடிக்கு ஆதரவாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதனால், நீங்கள் அவர்களுடைய ஊழலை மறைக்க ஆதரவு தருகிறீர்கள் என்பதுதான் அவருடைய பேச்சு. மோடி ஒருபோதும் ஊழலுக்கு ஆதரவு தர மாட்டார். தருவது போல் இருக்கும். பிறகு அதை ஆதரிக்க மாட்டார். அது காலத்தின் கட்டாயத்தின் பேரில் கூட இருக்கலாம். அதற்காக மோடி ஊழலை ஆதரிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. மக்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் இந்த ஊழல்வாதிகளை இதுதான் வாக்களித்திருக்கிறார்கள் . அதை ஏன் விஜய் படிக்கவில்லை ?
இந்த ஊழல்வாதிகளை தான் 50 ஆண்டுகாலம் மாறி, மாறி தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சியை பார்த்து இருக்கிறார்கள். நீங்கள் ஊழலற்ற ஆட்சியை கொடுப்பதாக சொன்னால், எந்தெந்த கட்சியை உங்கள் கூட்டணியில் சேர்க்கப் போகிறீர்கள்? தமிழ்நாட்டில் ஊழலற்ற அரசியல் கட்சிகள் எத்தனை இருக்கிறது? அந்த ஊழலை எதிர்த்து எத்தனை கட்சிகள் செயல்பட்டு இருக்கிறது? அவர்கள் செயல் விளக்கம் என்ன? நீங்கள் இப்போதுதான் வந்திருக்கிறீர்கள்.
நீங்கள் ஊழலுக்கு எதிராக இதுவரை செய்தது என்ன? இதை அனைத்தையும் பட்டியல் போடுங்கள். இது தவிர, உங்கள் கட்சியினரோ அல்லது உங்கள் ரசிகர்களோ, உங்கள் ஆதரவாளர்களோ இந்த ஊழலுக்கு எதிராக எத்தனை வழக்குகள் சந்தித்திருக்கிறார்கள்? அதைப் பட்டியலிடுங்கள். எத்தனை போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள்? எத்தனை பொய் வழக்குகளை சந்தித்து இருக்கிறார்கள்? எத்தனை அடிதடி பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார்கள் ?இவை அத்தனையும் விஜய்யால் பட்டியலிட முடியுமா? இதுதான் பிஜேபியினர் கேள்வி ? உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி. உலகத் தலைவர்களின் வரிசையில் இருப்பவர் மோடி அப்படிப்பட்ட வரை விஜய் சிந்தித்து பேசி இருக்க வேண்டும்.