நவம்பர் 01, 2024 • Makkal Adhikaram
மக்கள் மாற்றத்தை தேடினாலும், மாற்றத்தை கொடுக்க விஜய் வந்தாலும், அல்லது பிஜேபியில் யாரோ ஒருவர் வந்தாலும் , இந்த திமுக சார்பு மீடியாக்களும், சோசியல் மீடியாக்களும், அவர்களுடைய ஐ.டி. விங்கும், அதைப் பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டு, அதில் உள்ள நெகட்டிவ்களை மக்களிடம் சொல்லிக் கொண்டு, ஒரு நல்ல அரசியல் மாற்றம் வரக்கூடாது என்பதில் இவர்கள் எவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள்? இதுதான் மீடியா லட்சணமா ? விஜய் எம்ஜிஆர் ஆக முடியுமா? ஆக முடியாதா? இதை யார் கேட்டது? அவரவர் நிலையில் தான், அவரவர் இருக்க முடியும்.
மேலும், திருச்சி சூரியா, தமிழா பாண்டியன் போன்ற பலர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை தான் யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார்கள் . கூலிக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம் .அதில் சமூக நன்மை யார் பக்கம் இருக்கிறது? இவர்கள் சமூக நன்மைக்காக பேசுகிறார்களா? இல்லை திமுக அதிமுகவிற்காக பேசுகிறார்களா? இதுதான் மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. ஒட்டுமொத்த சோசியல் மீடியாக்களின் கதறல் விஜய்க்கு எதிராக இருப்பதை பார்க்க முடிகிறது. விஜய் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும். ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். ஒரு சிறு பிரச்சனையை பெரிது படுத்துவார்கள் . பெரிய பிரச்சனையை சிறிது படுத்துவார்கள். இவ்வளவு தான் இவர்களுடைய தகுதி .
மேலும், இதுல வேற சீனியர் பத்திரிக்கையாளர் ,அப்படி என்று இவர்களாக பேசிக் கொள்கிறார்கள். சீனியர், ஜூனியர் இங்கே இல்லைங்க, விஷயம் தாங்க முக்கியம். நீங்க சொல்றதுல எவ்வளவு உள்நோக்கம் இருக்குன்னு? மக்களுக்கு தெரியுது .எங்கள மாதிரி சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கும் தெரியுது. அதனால, நீங்க மூத்தவரோ? இல்லை இளையவரோ? யாரோ? அதை பற்றி கவலை இல்லை .
உங்களுடைய நோக்கம் என்ன? நீங்க யார்? மக்களுடைய மனசுல பூந்து பார்த்து வந்து எல்லாவற்றையும் சொல்றீங்களா ? விஜய்க்கு நாலு பர்சன்ட் வரும் 5%, 10% வரும் எவ்வளவு வந்தா? உங்களை யார் கேட்டான் துரைசாமி? நீங்க என்ன ஞானியா? இல்ல சித்தரா? முனிவரா? நாளைக்கு என்ன நடக்க போறதுன்னு, அப்படியே சொல்லிடுவீங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவர். அதனால, ஒரு பத்திரிக்கை என்ன சொல்லணுமோ, அதை மட்டும் தான் சொல்லணும் .நீங்க ஒருவருக்காக பேசுகிறீர்கள் என்றால் ! அது பத்திரிகையில்லை. அவங்களுடைய ஏஜென்ட்கள் கரை வேஷ்டி கட்டிட்டு பேசலாம் தப்பில்லை.
பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு பேசுவது மக்களை முட்டாளாக்கும் வேலை மட்டுமல்ல, எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளையும், நடுநிலையான பத்திரிகைகளையும், மக்கள் மத்தியில் பத்திரிக்கை என்றால் ஓட்டு மொத்தமாக இப்படித்தான் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் ஒரு அவ பெயரை உருவாக்குகிறது. இதை தான் செய்தித் துறையில் பி ஆர் ஓ கள் பத்திரிகைகளை தரம் பிரியுங்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். மேலும், இது சம்பந்தமாக மத்திய அரசுக்கும் கொண்டு செல்ல உள்ளோம் .தவிர,
காவல்துறை அரசியல் கொள்ளைக்காரர்களுக்கும், அடாவடி பேர்வழிகளுக்கும் சப்போட்டா? ஏனென்றால் அவர்கள் மூலமாக தான் அதிக வருமானம் வரும் . அதாவது காட்டன், சூதாட்டம், பிராத்தல், இல் லீகள்மது விற்பனை , போதைப்பொருள் விற்பனை ,இப்படி பல விஷயங்களில் பொதுமக்களே அவர்களை அடையாளம் காட்டினாலும்,அல்லது சமூக நலன் பத்திரிகையாளர்கள் அடையாளம் காட்டினாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். சமீபத்தில் கூட இது பற்றி எமது ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் செய்தியை போட்டதற்காக அவருக்கு எவ்வளவு டார்ச்சர் கொடுத்தார்கள்? எப்படி எல்லாம் அவர் மீது பொய் வழக்கு போட்டார்கள்?
இப் பிரச்சனையை எமது செய்தியாளர் அனைத்து புள்ளி விவரங்களையும், டி. ஐ. ஜி வரை கொண்டு சென்றதால், அந்த ஸ்டேஷன் ஆய்வாளருக்கு இவர் சொன்ன ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உன் மீது நடவடிக்கை எடுத்து விடுவோம் என்று சொன்னவுடன் ஓடி, ஓடி எஃப் ஐ ஆர் போட்டாராம் .
இதை எல்லாம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு தெரிந்தால், திமுகவின் ஆட்சியை நார் அடித்து விடுவார்கள் . இங்கே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் போன் செய்தால் கூட எடுக்க மாட்டார். இவரை நேரிலும் சென்று பார்க்க வேண்டும் என்றால், மணி கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டும். நான் என்ன? என்னுடைய சொந்த விஷயத்திற்காகவா? இவரிடம் வந்து பார்க்கப் போகிறேன். ஒரு விஷயங்கள் தவறான முறையில் நடப்பதை இவர் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்று போன் செய்தால் எடுக்க மாட்டார். இப்படி எல்லாம் திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்கள் இருப்பது, இது மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சி என்பதை தீர்மானிக்க வேண்டிய ஒன்று.மேலும்,
நாங்கள் எல்லாம் எத்தனையோ மாவட்ட ஆட்சியர்களை இதே திருவள்ளூர் மாவட்டத்தில் பார்த்திருக்கிறோம். தினமும் காலையில், மாலையில் நான்கைந்து முறை போனில் பேசிக் கொண்டிருப்போம். இன்னும் சொல்லப்போனால் என்னை சுந்தரவல்லி மாவட்ட ஆட்சியர் நீங்க அடிக்கடி பேசணும் சார். என்ன விஷயம் இருந்தாலும் என் காது கொண்டு வாங்க என்று சொன்னவர்கள். சந்திரமோகன் கலெக்டராக இருக்கும்போது, 100 பேர் காத்துக் கொண்டிருந்தாலும், 5 நிமிடத்தில் கூப்பிட்டு விடுவார்.அது மக்களுக்கான மாவட்ட ஆட்சியர்கள்.
இவர்கள் மக்களுக்கான மாவட்ட ஆட்சியர்கள் இல்லை. ஆட்சியாளர்கள் சொல்வதை செய்து கொண்டிருக்கும் கிளர்க்குகள் . மேலும்,சமீபத்தில் பல ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர்களை சந்தித்தேன். அவர்களிடம் இந்த விஷயம் எல்லாம் பேசி இருக்கிறேன் . அப்போதெல்லாம் அவர்களும் திமுக ஆட்சியில் வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள். மந்திரியே சொன்னாலும், நாங்கள் எது முடியுமோ, அதை மட்டும் தான் செய்வோம். முடியாததை எல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம். மக்கள் பிரச்சனை என்றால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். மந்திரி சொன்னாலும், அதற்காக நாங்கள் தலையாட்ட மாட்டோம். அப்படி என்றால் அவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். நீங்கள் இல்லை. அதனால் தான் அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .மேலும்,
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா (சுடிதார்) மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி (சேலை)
தேனி மாவட்டத்தில் அக்டோபர் 31, 2024 கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம் நாலு பேர் டீசலை ஊற்றிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள பெண்கள் வந்திருக்கிறார்கள் .ஊற்றிக் கொண்டவர்கள் மீது காவல்துறை அப்படியே அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். பிறகு எதற்காக இவர்கள் ஊற்றிக் கொண்டார்கள்? என்று இன்றுவரை மாவட்ட ஆட்சியரோ அல்லது ஆர்டிஓ வோ விசாரிக்கவில்லை .ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் வைத்து இருந்து அவர்களை டாக்டர்கள் அனுப்பி வைத்து விட்டார்கள் . இப்படி அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, இந்த அதிகாரிகள் என்ன ?ஏது? என்று கூட விசாரிக்கவில்லை/ இப்படி திமுக ஆட்சியின் நிலைமை. மேலும்,
திமுக எவ்வளவு ஊழல் பண்ணாலும், அதை பத்தி எந்த மீடியாவும் பேசக்கூடாது .எவ்வளவு ரவுடியிசம் பன்னாலும், அதை வேடிக்கை பாக்கணும். மக்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடாது .அப்பாவிகள் பாதிக்கப்பட்டாலும், என்னன்னு கேட்கக் கூடாது.இது சினிமா, டிராமாவை விட மோசமாக இருக்கிறது, இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் நிலைமை.அப்படிப்பட்ட பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் பிஆர்ஓ அலுவலகத்தில் தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் பட்டாசு கிப்ட் களை கொடுத்திருக்கிறார்கள் தவிர,அதைவிட ஒரு வெட்கக்கேடு என்னவென்றால், விஜய்க்கு செய்தி போட்டதற்கு கூட காசு வாங்கிக் கொண்டுதான், இந்த மீடியாக்கள் போட்டு இருக்கிறார்கள்என்று சென்னையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.மேலும்,
அதற்கு எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் எவ்வளவோ, மேலா? இதுவரை அவர்களுடைய யார் முகத்தையும், பார்க்கவும் இல்லை. ஒரு பைசா வாங்கியதும் இல்லை .ஒரு விளம்பரம் கூட கொடுத்ததில்லை. பொதுநலமில்லாமல் ஊடகம் நடத்தி பயனில்லை. சுயநலத்திற்காக ஊடகங்கள் நடத்தி மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருப்பது எதற்கு? மேலும், சர்குலேஷன் சட்டம் காட்டி சலுகை, விளம்பரங்கள் மத்திய, மாநில அரசுகள் கொடுப்பது எதற்கு? சமூகத்தை சீரழிக்க வா? இல்லை சமூக முன்னேற்றத்திற்கு பயன்படவா? எதற்கு கொடுக்கிறீர்கள்?இதுதான் அரசு செய்தி துறையின் கொள்கை முடிவா ? அதைப் பற்றி செய்தித்துறை எப்போதாவது பேசி இருக்கிறீர்களா?மேலும்,
திருவள்ளூர் பிஆர்ஓ சொல்வது போல் எங்களுக்கு அது எல்லாம் தேவையில்லை. எங்களுடைய அரசு செய்தி போட்டால் போதும், அரசு செய்தி போடுவதற்கு பத்திரிக்கையை அரசாங்கமே நடத்தி விட்டு போலாமே, ஏன் ஒரு தனியாரிடம் போய் செய்தியை போடு என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன்? அதற்காக கோடிக்கணக்கில் மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்? 99% பி ஆர் ஓ களுக்கு தமிழ்நாட்டில் பத்திரிக்கை பற்றிய சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை .தற்போது நான் பார்த்ததில் ஈரோடு பி .ஆர் .ஓ ஒருவர் பத்திரிக்கை பற்றிய சப்ஜெக்ட் நாலேட்ஜ் உள்ளவராக இருக்கிறார். இதற்கு அடுத்தது காஞ்சிபுரம் பிஆர்ஓ பரவாயில்லை .மேலும்,
எப்படியோ அந்த காலத்தில் அரசியல் கட்சி பின் புலத்தில் இவர்கள் வந்து விட்டார்கள் . இவர்களுக்கு பத்திரிகையின்னுடைய தரம், செய்தியினுடைய தரம், எதுவுமே தெரியாது. அந்த மாவட்ட ஆட்சியர் உடைய செய்தி பத்திரிகையில் போட்டால், அதை கட் பண்ணி ஒட்டி மீடியேட்டர் வேலை பார்ப்பார்கள் . இதற்கு இவர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி இந்தப் பெயர், வேலை செய்வதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லாத ஒரு பெயராகத்தான் இருக்கிறது .
இதை இயக்குனரிடம் கூட கேட்டேன். பத்திரிக்கை ஆட்சியாளர்களுக்காக நடத்த வேண்டுமா? அல்லது அரசியல் கட்சிகளுக்காக நடத்த வேண்டுமா ?அல்லது அரசுக்காக நடத்த வேண்டுமா ? இல்லை, மக்களுக்காக பத்திரிக்கை நடத்த வேண்டுமா? யாருக்காக என்பதை சொல்லுங்கள்? இதற்கு பதிலே இல்லை. திருவள்ளூர் பிஆர்ஓ விடம் கேட்டதற்கும், பதில் இல்லை . மேலும், இவர்கள் தினமும் எவ்வளவு பேரை சந்திக்கிறார்கள்? எத்தனை செய்தி பத்திரிகைகளுக்கு கொடுக்கிறார்கள்?இது பற்றி எல்லாம் இவர்களால் விளக்கம் தர முடியுமா?
இது தவிர,. இவர்கள் அரசியல்வாதிகள் போல கரை வேஸ்டி ஒன்றுதான் கட்டவில்லை .பெரும்பாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தந்த கட்சிக்கு ஏற்றார் போல் மாறி விடுவார்கள் . அதிமுக வந்தால், தன்னை அதிமுகவாக காட்டிக் கொள்வது, திமுக வந்தால் தன்னை திமுக வாக காட்டிக் கொள்வது, அதற்கு எதுக்கு நீங்கள் பேண்ட் சர்ட் போட்டு அதிகாரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? பேசாமல் அந்த கரை வேஷ்டியை கட்டிட்டு வந்துருங்க நல்லா இருக்கும் .
நானும் அதிகாரி, நானும் பத்திரிகை, எதுவுமே தேவையில்லை, மக்களை ஏமாற்ற செய்தியாளர் கூட்டம், பத்திரிக்கை கூட்டம், அரசு அதிகாரிகள் கூட்டம், காவல்துறை எல்லாமே பணத்திற்காக மட்டும் செயல்பட்டால், நாடு தாங்காது . ஆட்சியாளர்கள் இருக்கும் வரை சுருட்ட வேண்டும் என்றால், மக்கள் மாற்றத்தை நோக்கி தான் பயணிப்பார்கள். மேலும், சில தினங்களுக்கு முன் ஆட்டோவில் வரும் போது, அந்த ஆட்டோக்காரர் சொல்கிறார், எவன் வந்தாலும், எங்க தலை மேல தான் சார் உட்காருவான். எங்க தலை மேல தான் பாரத்தை வைப்பான் . எந்த அளவுக்கு மக்கள் வேதனையுடன் பேசுகிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.மேலும்,
இப்படி இருக்கும்போது, இந்த விஷயத்தை திசை திருப்பும் அளவிற்கு சோசியல் மீடியாக்களும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் அவரவர்ருடைய கட்சி ஐடி வீங்குகளும், மக்களுக்கு எதிராக செயல்பட்டால், இவர்களால் மக்களை மாற்ற முடியுமா? மாற்றத்தை நோக்கி மக்கள் விரும்பும் போது, அதை எந்த சோசியல் மீடியாக்களும், பத்திரிகைகளும் தடுக்க முடியாது. இதற்கு கடந்த ஆட்சியில் நடந்த சம்பவம் எடுத்துக்காட்டாக வைக்கிறேன். அதிமுக ஆட்சியில் எடப்பாடிக்கு ஆதரவாக கோடிக்கணக்கில், சலுகை விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டு, வெற்றி நடை போடுகிறது தமிழகமே, என்று மக்களுடைய வரிப்பணத்தை தான் வீணடித்தார்களே ஒழிய, ஆட்சி மாற்றத்தை இவர்களால் தடுக்க முடியவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போதும் சொன்னேன் .இந்த அதிமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை .இது அவர்களுக்கான ஆட்சி .இப்போதும் சொல்கிறேன். இது மக்களுக்கான ஆட்சி இல்லை. இவர்களுக்கான ஆட்சி.
மாற்றத்தை நோக்கி மக்கள்.