சமூக நன்மைக்கும், சமூக மாற்றத்திற்கும், தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவின் சுயநலம் தான் சலுகை ,விளம்பரமா ? அல்லது சர்குலேஷன் சட்டமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 02, 2024 • Makkal Adhikaram

நாட்டில் பத்திரிக்கை துறை! சமூக மக்களின் நன்மைக்காக இல்லாமல், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருப்பது சுயநலத்தின் அடையாளம் . அப்படி சுயநலமாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டமா? அது பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை ஏமாற்றும் கருப்பு சட்டமா? 

மேலும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் பெரும்பாலும் கருப்பு பணத்தால் உருவாகியுள்ளது .அல்லது அரசியலில் கொள்ளை அடித்து பணமாக உள்ளது. இல்லையென்றால் மதுக்கடைகளில், மணல் கொள்ளைகளில், வெளிவந்த நிறுவனங்களாக தான் உள்ளது. நாட்டில் சுயமாக உழைத்து, நேர்மையான முறையில் அரசாங்கத்திற்கு இவர்களுடைய வருமானத்தை கணக்கு காட்டியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

 இது நான் கேட்பது ?இவர்களுடைய அப்பா சம்பாதித்த சொத்தில் இருந்து, வந்த வருமானம் அதிலிருந்து எடுங்கள்? எப்படி இவர்களுடைய வருமானம்? பத்திரிகை, தொலைக்காட்சியில் போடப்பட்டது ? இவர்களோடு சமூக நலன் பத்திரிகைகள் போட்டி போட முடியுமா?சாமானிய மக்களால் நடத்தப்படும் இந்த பத்திரிகைகளால் அல்லது இணையதளத்தால் உழைப்பை மட்டுமே கொடுக்கக்கூடிய இந்த சமூகத்திற்கு எங்களால் அந்த அளவிற்கு பணத்தை முதலீடு செய்ய முடியாது .

அதனால், அரசாங்கம் எந்தெந்த பத்திரிகைகள் அதற்கு தகுதியானவை? என்பதை ஒரு பட்டியல் எடுத்து, அதற்கு இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால், அது மேலும் சமூக நலனுக்கு நன்மைக்கு முக்கியத்துவமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதை நான் சுயநல நோக்கத்தோடு சொல்லவில்லை, பொதுநலத்திற்கு நோக்கத்தில் தான் இதை சொல்கிறேன். மேலும், இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய பொறுப்பு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு இருக்க வேண்டும் . 

ஆனால், கார்ப்பரேட் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தான் அங்கே உட்கார்ந்து இருப்பார்கள் போல தெரிகிறது. அதனால், அவர்களுக்கு இந்த பத்திரிகைகளின் அர்த்தம் கூட தெரியவில்லை . இது மக்களின் வரிப்பணம்! கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கே ஆட்சியாளர்கள் கொள்கை முடிவாக உள்ளது . அது மிகப்பெரிய தவறு . மேலும், தகுதியற்ற பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது .அந்த பத்திரிகைகள் whatsapp குழுக்களில் அதனுடைய பிடிஎஃப் பை அனுப்பி கொண்டிருக்கிறார்கள். அதுவும் பத்திரிக்கை என்று அரசு விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது .அதை இங்கே வெளியிடுவேன். ஆனால், அந்த பத்திரிகையின் முதலாளி எங்களுடன் நிருபராக பணியாற்றியவர். அதை தவிர்க்கிறேன்.மேலும்,

ஆன்லைனில் அதை எத்தனை பேர் படிக்கிறார்கள்? என்பதை அதனுடைய இணையதளத்தை போய் பார்த்தால் தெரியும். இப்படியெல்லாம் செய்தித் துறை தனது கொள்கை முடிவாக மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு அங்கே தெளிவாக அதிகாரிகள் சொல்கிறார்கள். இங்கே அந்த சட்டத்தின் படி தான் எல்லாமே இருக்குமே ஒழிய அதற்கு புறம்பாக எதுவுமே இருக்காது.

ஆனால் தமிழ்நாட்டில் போலி ஆடிட், போலியான சர்குலேஷன், போலியான சேல்ஸ் ,கணக்கு காட்டி தினசரி பத்திரிகைகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் செய்தித் துறை அதிகாரிகள் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும் . மேலும், நாங்கள் பிரஸ் பாஸ் கேட்டால், நீங்கள் RNI சென்னையில் வாங்க வேண்டும் என்று கடந்த நான்கைந்து வருடமாக செய்தித்துறை அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், கடந்த ஆண்டு திருச்சியில் இருந்து வெளிவரக்கூடிய ராக்போர்ட் என்ற மாத பத்திரிக்கைக்கு அரசு அடையாள அட்டை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது . அப்படி என்றால் கொள்கை முடிவு என்பது பத்திரிக்கையை துறையில் வேண்டியவர்களுக்கு ஒரு கொள்கை முடிவு! வேண்டாதவர்களுக்கு ஒரு கொள்கை முடிவு! இதுதான் பத்திரிக்கை துறையின் கொள்கை முடிவா ? அல்லது அதிகாரத்தின் உச்சமா ?

மேலும், இன்று பத்திரிகை வாங்கி படிக்கும் மக்களின் எண்ணம் இல்லை .எந்த செய்தியானாலும், சமூக வலைத்தளத்திலும், இணையதளத்திலும், யூ டியூப் சேனல்களிலும் பார்க்கிறார்கள். இதுதான் இன்றைய பத்திரிக்கை துறையின் மாற்றம். அதற்கு ஏற்றார் போல், மத்திய அரசு இன்னும் இந்த சட்டத்தை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு, கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு சாதகமாக இதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இது பற்றி பல பத்திரிகைகள் செய்தித் துறையில் இந்த அவல நிலையை எதிர்த்து போராடிக் கொண்டுதான் இருக்கிறது.

அதில் முக்கிய பங்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் பங்கு உள்ளது. அதனால், தற்போது இந்த கொள்கை முடிவுக்கு எதிராக பத்திரிக்கை துறை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் நன்மை, சமூக நலனுக்கு ஆதரவாக மக்கள் இருக்க வேண்டும் . மேலும் நீதித்துறை இது பற்றி நடுநிலையான நீதி வழங்க வேண்டும் .அப்போதுதான் ஆட்சியாளர்களின் கொள்கை முடிவு தவறா? சரியா?என்பது நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது. விரைவில் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்பதை செய்தித் துறையின் கவனத்திற்கு இச்செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *