நவம்பர் 03, 2024 • Makkal Adhikaram
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை திமுகவின் ஆட்சிக்கு எதிராக நிறைவேற்றி உள்ளனர் . இந்த தீர்மானத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் வரவேற்க வேண்டியதும் , சில மக்களின் ஓட்டுக்காக போடப்பட்ட தீர்மானங்கள் ஆகவும் இருக்கிறது .
அதில் முதல் தீர்மானம் காமராஜர், ஈவேரா, அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் உடைய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுதல் . மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் கட்சியின் கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது தவிர, மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமாக்குவதை ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நாட்டை நீங்கள் ஒரு அதிகாரம், நாங்கள் ஒரு அதிகாரம் ,அதிகாரத்தை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பங்கு போடுவதற்காக தான், இந்த ஒரே நாடு ,ஒரே தேர்தலை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் .இது ஜனநாயகத்திற்கு முக்கியத்துவமான ஒன்றுதான்.இது எதிரான ஒன்று அல்ல,
காரணம்? மக்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது 1965 க்கு முன் எல்லாம் இருந்தது. அப்போது மக்களிடம் இந்த தேசப்பற்று, சுதந்திர தியாகத்தின் வரலாறு, இவை எல்லாம் மக்கள் புரிந்து இருந்தார்கள். காலம் கடந்து, ஆண்டுகள் பல சென்ற பிறகு சுதந்திரத்தின் வரலாறு ,இப்போது உள்ள புதிய தலைமுறைக்கு தெரியாது. அவர்கள் பட்ட கஷ்டங்களும் தெரியாது.
அதனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவை ஒரே நாடாக தான் பார்க்க வேண்டும். இவர்கள் ஒவ்வொரு மாநிலத்தையும், ஒரு நாடாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சீமான், திருமாவளவன் இந்த பிரிவினைவாத சக்திகள் எல்லாம் இதை தான் பேசிக் கொண்டிருக்கிறது. அடுத்தது, வேறு ஒரு நாடு, தமிழ்நாட்டின் மீது சண்டைக்கு வந்தால், இவர்கள் காப்பாற்றி விடுவார்களா ? தேசத்தை துண்டாக்க நினைக்கும் வேலை .
அடுத்தது இந்த மதச்சார்பற்ற கொள்கை, மதச்சார்பின்மை இது எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை. இது தொடர்ந்து அரசியல் கட்சிகள் இதை சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். அதேதான் விஜயையும் சொல்லி வருகிறார் . பிறப்பால் ஒருவர் இந்த மதம், என்ன ஜாதி என்பது எழுதப்பட்டுள்ளது. அப்புறம் என்ன நீங்கள் மதச்சார்பின்மை? என்று சொல்கிறீர்கள் .இது யாரை ஏமாற்றும் வேலை ?
இது தவிர ,லோக்சபா தத்துவத்திற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள பாஜக அரசின் சட்டத்திற்கு கண்டனம் . இதுவும் ஒரு தவறான தீர்மானம்தான். நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ, அந்த சட்டத்தை பற்றி சொல்லுங்கள். அதை விட்டு ,விட்டு லோக்சபா தத்துவத்திற்கு மறைமுகமாகவும் ,நேரடிவாகவும் அச்சுறுத்தல் என்றால் அது என்ன சட்டம் ? அதாவது வருமானவரித்துறையா? அமலாக்கத்துறையா? சிபிஐயா? இதையெல்லாம் எடுத்து விட சொல்கிறீர்களா ? ஊழலுக்கு எதிராக ஆட்சி என்று சொல்லிவிட்டு, ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், எப்படி ஊழலற்ற ஆட்சியை இவரால் கொடுக்க முடியும் ?அதிலும் திருமாவளவன் போன்ற ஜாதி கட்சி இதையெல்லாம் உள்ளே கொண்டு வந்து விட்டு, இவர் ஊழலற்ற ஆட்சியை நடத்தி விடுவாரா? அல்லது அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளை எல்லாம் கூட்டணி வைத்து ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியுமா? மேலும்,
நூற்றுக்கு 90 சதவீதத்திற்கு மேல் அதிமுக முன்னாள், மந்திரிகளின் ஊழல்மற்றும் எம்பி எம்எல்ஏக்களின் ஊழல் பட்டியல் நீள்கிறது. அப்படி இருக்கும்போது இவர்களை வைத்துக் கொண்டு எப்படி நீங்கள் ஊழலற்ற ஆட்சியை கொடுப்பீர்கள்? இது தவிர, எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது .இதற்கென்ன இவருடைய பதில்? இதற்கு அடுத்தது திமுக மட்டுமே இங்கு தவறு செய்து விட்டார்கள் அல்லது ஊழல் செய்துவிட்டவர்கள் என்று ஒருவரை மட்டுமே சொல்ல முடியாது.இது தொடர்ந்து அதிமுக, திமுக இரண்டுமே அதே நிலைதான் .
இதில் அதிமுக கொஞ்சம் தெரியாமல் கொள்ளையடிக்கலாம் என்று நினைப்பவர்கள் .இவர்கள் தெரிந்து கொள்ள அடிக்கலாம் என்று நினைப்பவர்கள் .இதுதான் வித்தியாசம் .இதில் விஜய் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார்? அவர் வைக்கின்ற கூட்டணி கட்சியின் தகுதி? என்ன தரம் ?என்ன என்பது எதிர்க்கட்சிகள் அப்போது பேசும். அதை பார்த்துக் கொள்ளலாம் .
அடுத்தது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசு முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது வரவேற்க வேண்டிய ஒன்று. அடுத்தது, மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கை, இதுவும் நாட்டை பிளவுபடுத்தும், மாநில தன்னாட்சியின் உரிமை . அதே போல மருத்துவம், கல்வி, மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இவ்வளவு நாளா அதுதானே இருந்தது. எடப்பாடி வந்து தான் அதை மாற்றினார். மாநிலத்தில் 50 ஆண்டு காலமாக கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தீர்கள்? அப்படி கொடுத்திருந்தால் தனியார் கல்வி தேவை என்று இவ்வளவு பள்ளிகள், கல்லூரிகள் தமிழ்நாட்டில் வந்திருக்காது.
மேலும், நீட் தேர்வை மாநில அரசே நீக்கி, மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற இயலும் .இது எல்லாம் மக்களின் ஓட்டுக்காக போடப்பட்ட தீர்மானம் ஆகத்தான் பார்க்க வேண்டி உள்ளது. இனி யார் வந்தாலும் இந்த நீட் அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அடுத்தது விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை வரவேற்க வேண்டிய ஒன்று .இது தவிர விவசாயிகளின் மனநிலை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் பரந்துரில் விமான நிலையம் அமைக்க முடிவை திரும்ப பெற வேண்டும். இது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒரு தீர்மானம். அந்த மக்கள் எவ்வளவு வேதனைப்படுகிறார்கள்? என்பதை நேரில் பார்த்தவன். அவர்களிடம் பேசி ,அவர்களுடைய மன நிலை என்ன? என்பதை புரிந்து தான் இதை சொல்கிறேன் .
மேலும், விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை ஒரு கொள்கையாகவே முன்னெடுப்போம். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. அதேபோல் என்எல்சியில் பணியமற்றப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் என்று சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தக் கூடாது .இவை அத்தனையும் உண்மையிலேயே நல்ல தீர்மானங்கள் வரவேற்க வேண்டிய ஒன்று.
அடுத்தது, இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசை ஆலோசித்து வெளியூரவு கொள்கை வகுக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு நல்ல தீர்மானம்தான் வரவேற்க வேண்டிய ஒன்று. அதேபோல் இலங்கை தூதராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதுவும் தேவையான ஒன்று . கச்சத்தீவு பற்றி பேசி பயனில்லை .ஒருவருக்கு கொடுத்துவிட்டு,இன்று அதை வைத்து அரசியல் செய்வது, தவறு செய்த ஆட்சியாளர்களுக்கு தான் அந்த கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும்.
மேலும், சர்வதேச சட்டத்தை வலியுறுத்தி மீனவர்களுடன் இணைந்து தமிழக வெற்றிக்கழகம் கடல் எல்லைகளை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யக்கூடாது. இதனை இலங்கை அரசு கடைப்பிடிக்கவில்லை. இதற்காக மீனவர்களுடன் இணைந்து தமிழக வெற்றி கழகம் அதற்காக போராடும். இவையெல்லாம், மீனவர்களின் நலனுக்காக ஒரு பக்கம் வரவேற்க வேண்டிய ஒன்று.
அடுத்தது, திமுக அரசை கண்டித்து மக்களிடம் நிதிச் சுமை திணிப்பு, அரசின் வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மின்கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ,போன்ற வரி உயர்வு சுமையை மக்கள் மீது திணிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் .இது உண்மையிலே வரவேற்க வேண்டிய தீர்மானம். இது தவிர, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச் சாராய விற்பனை, போதைப்பொருள் புழக்கம் ,போன்ற நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல், மக்கள் நலனை காட்டிலும், ஆட்சியை அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனை முக்கியமாக செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு கண்டனம் . இவையெல்லாம் உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று.
அடுத்தது மாதந்தோறும் மின் கட்டணம் இரு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே என்பதை மாற்றி மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் . இதுவும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். இது தவிர ,மதுக்கடை மூலம் பெரும் வருவாயை விட கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், மாற்று திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும். உயர்நீதிமன்ற அமர்வில் தமிழை தாய் மொழியாக கொண்ட நீதிபதி ஒருவர் நியமிக்க வேண்டும்.
இப்படி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் சில முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ,சில நாட்டு நலனை விட ,மக்களின் ஓட்டுக்காக போடப்பட்ட தீர்மானங்களும் இதில் உள்ளது .அதனால், ஒரு கட்சி நிலைப்பாடு என்பது ஒரே நிலைப்பாடாக தான் இருக்க வேண்டும். இது இப்படியும் ,அப்படியும் இருக்கின்ற தீர்மானம் .மேலும், இது அரசியல் தெரியாத மக்களுக்கு வேண்டுமானால் இது பற்றி புரியாது . அரசியல் தெரிந்தவர்களுக்கு இவை நன்கு புரியும்.
அதனால் இந்த தீர்மானங்களை கூட ஐஏஎஸ் மற்றும் சில பத்திரியாளர்கள் கூட இதை வகுத்து கொடுத்து இருப்பார்கள். அவர்கள் தமிழ்நாட்டை மட்டுமே இந்த தீர்மானத்தின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கும்? மேலும், மத்திய அரசின் தயவு இல்லாமல் ஒரு மாநில அரசு எந்த ஒரு திட்டத்தையும் அவ்வளவு எளிதில் நிறைவேற்ற முடியாது .இதேதான் ஆரம்பத்திலேயே திமுக அரசுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், இணையதளத்தின் சார்பிலும் மத்திய அரசுடன் நெருக்கம் காட்டினால், நிச்சயமாக தேவையான திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வர முடியும். இப்போது தமிழகம் நிதிச்சுமையால் தத்தளிக்கிறது . ஒரு பக்கம் அவர்களுக்கு நிர்வாக திறன் இன்மை வெளிப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் அவர்களுடைய வருமானத்தின் அரசியல் நோக்கமாக பார்க்கின்ற ஆட்சி அதிகாரத்தின் உச்சம்.
இதையெல்லாம் விடுத்து பொதுநலத்துடன் ,தியாக மனப்பான்மையுடன் இருப்பவர்களால் மட்டும் தான், ஊழலற்ற ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, கொடுக்க முடியும். மீதி எல்லாம் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளில் செய்தியை தான் கொடுக்க முடியும் .அல்லது அதில் பேட்டி கொடுக்க முடியும் . அதனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் பாமர மக்களுக்கு புரியும் வகையில் தான் எமது செய்திகள் இருக்கிறது .தொடர்ந்து அரசியல் கட்சிகளால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில்லை. ஏதோ ஒன்று, இரண்டு செய்து விட்டு நூற்றுக்கு நூறு செய்து விட்டோம் என்று பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் இருக்கிறது. அதில் பேசிவிட்டு போவதற்கு, எழுதிவிட்டு போவதற்கு, இதுதான் தமிழ்நாட்டு அரசியல் .இதை மாற்றும் சக்தி மக்கள்! அரசியலை படிக்க வேண்டும். மக்கள் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இது தவிர, மக்களுக்காக உழைப்பவர்கள் யார்? மக்களுக்காக தன்னுடைய உழைப்பை, தியாகம் செய்யக்கூடியவர் யார்? இதுதான் இங்கு முக்கியம். இவர்களே பத்திரிகையாளர்கள் போல,தற்போது பிஜேபியில் வீடியோ போட்டுக் கொண்டு ,கருத்துக்களை சொல்லிக் கொண்டு, இதுதான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசியல் தெரிந்த மக்களிடம் இதையெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது .
மேலும், தற்போது இளைஞர்கள் அரசியல் மாற்றம் தேவை என்பதில் முக்கிய எண்ணத்தில் இருக்கிறார்கள். விஜய் அதை பயன்படுத்திக் கொள்வார் .ஆனால், இது போன்ற சில கருத்துக்கள் முரண்பட்டதாக இருக்கிறது. அது தேவையற்றது .திமுக அரசு இன்றுவரை நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட ஒன்று. அவர்களால் முடியாது .அதே போல் தான் இதுவும், இதையெல்லாம் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றுவதோ அல்லது தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பதும், தவிர்ப்பது நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .