கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி அம்மன் வேடத்தில் வந்து மனு அளித்த பெண்: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அம்மன் வேடமணிந்து வந்து பெண் ஒருவர் மனு அளித்தார்.நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி முத்துராஜா தெருவை சோந்தவர் புவனேஸ்வரி (43). இவர் நேற்று அம்மன் வேடமணிந்து கையில் வேலுடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர், கலெக்டர் உமாவிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

வளையப்பட்டியில் தையல் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் ஞானசேகரன், கட்டிட வேலை செய்து வருகிறார். எங்கள் பகுதியில் வசிக்கும் சிலர், ரோட்டில் செல்லும் பெண்களை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்கின்றனர். அவர்களை தட்டிக்கேட்டதால் என்னையும், என் குடும்பத்தையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர்.

இதுகுறித்து, மோகனூர் போலீசில்புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடன் வாங்கி வீடு கட்டினோம். இதற்கு மாத தவணை செலுத்துகிறோம். தொடர்ந்து, பிரச்னை செய்வதால் தொழில் செய்ய முடியாமல், வருமானம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், எங்களால் வாழ முடியாது. எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *