ஓட்டு கேட்கும் போது மட்டுமே அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் மக்கள் பார்க்க முடிகிறது. அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று மக்கள் அவர்களை தேட வேண்டி இருக்கிறது . பல்வேறு கட்சியில் பொதுமக்களை உறுப்பினராக சேர்த்துகிறார்கள் .
உறுப்பினர் உறுப்பினராக தான் இருக்கிறார். அவர் போய் கேட்டாலும் எந்த வேலையும் நடக்காது .இதுதான் தமிழ்நாட்டின் அரசியல். இவர்களை ஓட்டு போட வைத்திருக்கிறார்கள் .ஜாதி கட்சி என்றால் அவர்களுக்கு ஜாதி வெறி ஊட்டி வைத்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளின் உடைய சுயநலத்திற்கு மக்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .இது புரியாமல் ,அரசியல் தெரியாமல் ,வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் இருப்பதால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கார்ப்பரேட் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், ஒரு முக்கிய காரணம் .
அவர்களுடைய சுயநலத்திற்காக இந்த மக்களுக்கு உண்மைகள் மறைக்கப்படுகிறது. நாட்டில் உண்மை பேசுபவர்களுக்கும் உண்மை எழுதுபவர்களுக்கும் தான் எதிர்ப்புகள் உருவாகிறது .தப்பி தவறி கூட நாட்டில் உண்மையை பேச முடியவில்லை .அப்படி ஒரு உண்மையை கஸ்தூரி போன்ற நடிகை பேசி விட்டதால், இன்று தலைமறைவு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்கும் அளவிற்கு சென்று விட்டது. இவையெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சமூகத்தின் நிலையை சரித்திர வரலாறு சொல்லும்.
யார்? யார்? எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களுடைய நிலைமை என்ன? சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு மறைக்கப்படும் போது, ஒரு சமூகத்தின் வரலாற்றை மறைக்க முடியாதா? ஒவ்வொரு மனிதருக்கும், யாருக்கும், யாரும் சான்று கொடுக்க முடியாது .
வரலாற்று சான்றுகள், உண்மைகள் கதைகள் அல்ல. மேலும், மக்கள் கலை என்று சினிமாவின் மோகத்தில் என்று மூழ்கினார்களோ ,அப்போதே தமிழ்நாட்டில் நடிப்பே வாழ்க்கை என்று மாறிவிட்டார்கள். மனசாட்சியுடன் பேசி வாழ்ந்த மக்கள், அது என்ன ?என்று கேட்கும் அளவிற்கு உறவுகள் வரை இந்த நிலை உருவாகி விட்டது . உழைப்பை ,உண்மையை, நேர்மையை எப்போது மக்கள் மதிக்கவில்லையோ அப்போதே நாட்டில் ஊரை ஏமாற்றுபவர்கள், அரசியல் கட்சிகளில் முதலாளி ஆகி விட்டார்கள். மக்கள் ஏமாந்தார்கள் .அரசியலில் கொள்ளையடித்தார்கள். இப்போது அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு கல் நெஞ்சர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கே அரசு ஊழியர்கள் போராட்டம் ஒன்றும் எடுபடவில்லை.அவர்கள் கேட்பது எங்களுக்கு நீங்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த பென்ஷனை செயல்படுத்துங்கள் .ஆனால், எங்களுக்கு தான் பென்ஷன் என்று ஆட்சியாளர்கள் அதை மாற்றி அமைத்து விட்டார்கள் . மேலும்,
பதவியில் இருக்கும்போது சேர்த்த சொத்துக்கள் அது ஒரு பக்கம் ,இந்த பென்ஷன் ஒரு பக்கம் இது வருமான வரி கட்டினாலும், இந்த பென்ஷன் அவர்களுக்கு செல்லும். இதையெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரியுமா ?தெரியாதா? தெரியவில்லை.மேலும்,
மக்களின் சுயநலமும், மனசாட்சி இல்லாத மக்களின் பேச்சும் ,இன்று நன்றாக பேசி நடிப்பவர்களை ஆட்சியில் அமர வைத்துவிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ..எல்லாம் படித்த சமுதாயம், படிக்காத சமுதாயம் ஏமாந்தாலும் பரவாயில்லை .
படித்த சமுதாயமே ஏமாந்து கொண்டிருப்பது இதுதான் மிகப்பெரிய கேவலம் . நீங்கள் விட்டுக் கொடுங்கள் ஐந்து வருஷம் பதவியில் சம்பாதித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து விட்டு உங்களுக்கு பென்ஷன் தேவையா? இதைப் பற்றி எந்த தொலைக்காட்சியாவது விவாதம் நடத்தி இருப்பார்களா ?அல்லது youtube சேனல் காரர்களாவது இதைப் பற்றி பேசி இருப்பார்களா? தமிழ்நாட்டின் ஊடகங்களின் நிலைமை இதுதான். மேலும் , 25 வருஷம் அரசு ஊழியராக இருந்தவர்கள் ,அவர்களுக்கு பென்ஷன் தேவையில்லையா? இதை ஒரு படிக்காதவன் கூட இந்த கருத்தை ஏற்றுக் கொள்வான் . அதாவது அரசாங்கம் இதற்கு ஒரு வரைமுறை கொண்டுவர வேண்டும் .இத்தனை வருஷம் அரசாங்கத்தில் வேலை பார்த்து அவர்களுக்கு பென்ஷன் என்றால் !அது ஏற்றுக்கொள்ளலாம் .
அதாவது 10 வருஷம் ,15 வருஷம் இவர்களுக்கெல்லாம் பென்ஷன் கிடையாது .25ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பென்ஷன் கொடுக்கலாம் . என்று அறிவியுங்கள். அதாவது குறைந்தபட்சம் ஒரு அரசு ஊழியர் 25 ஆண்டுகளாவது அவர் அரசு வேலையில் பணிபுரிந்தால் அவருக்கு நிச்சயம் பென்ஷன் தொகை கொடுக்க வேண்டும்.
மேலும் 5 வருஷம் எம் எல் ஏ, எம் பி ,பதவியில் அமர்ந்து பென்ஷன் கேட்கிறீர்கள் .அதையெல்லாம் மனசாட்சி உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ,ஆட்சியாளர்கள் எம் எல் ஏ எம் பி பதவிகளில் இருந்தவர்கள் தங்கள் பென்ஷனை அரசு ஊழியர்களுக்காக விட்டுக் கொடுங்கள். ஏழை ,எளிய மக்களுக்கு கொடுங்கள். மேலும், அரசு ஊழியர்கள் இந்த பென்ஷன் கூட அவர்களுடைய வாரிசுகள் அவர்களை கவனிக்கவில்லை என்றால் ,அவர்கள் இதை வைத்து இறுதி காலம் வரை நன்றாக வாழ முடியும் .
இதையாவது அரசாங்கம் உண்மையிலேயே இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் . நடிகர் அமிதாப்பச்சன் பல ஆயிரம் கோடிக்கு சொத்து உள்ளவர். அவருக்கு உத்தரப்பிரதேச அரசு இரண்டு லட்சம் பென்ஷனை கொடுக்கிறது. இதை வாங்கி அவர் குடும்பத்தை ஓட்டும் அளவில் அவர் இல்லை. இப்படி கௌரவத்திற்காக பென்ஷனை எம் பி, எம் எல் ஏக்கள் ,மந்திரிக்கள் வாங்குவதை பிரதமர் மோடி நிறுத்தி மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கு இந்த பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துங்கள் .
அதுதான் அரசாங்கத்தில் அவர்களுக்கு கொடுக்கின்ற ஒரு மரியாதை,கௌரவம்.
ஆசிரியர் .